பயங்கரவாத
நாடான இஸ்ரேல். சுற்றிலும் அரபு நாடுகள் சூழ தனித்து நின்று நான் முரடன்,
பெரும்ரவுடி, பலம் வாய்ந்தவன் என்பதை நிருபிக்க தனது ஆயுத பலத்தை
இக்கட்டுரை எழுதும் இந்நேரத்தில் கூட நிருபித்துக் கொண்டு இருக்கிறது.
யூதர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் சுற்றியுள்ள அரபுக்கள் (முஸ்லிம்கள்) ஏன்
வலிமை குன்றிப் போயுள்ளனர்? என்பதையும் பார்ப்போம்.
இந்த
உலகில் மொத்தம் உள்ள யூதர்களின் எண்ணிக்கை 1.41 கோடி ஆகும்.70 இலட்சம்
பேர் அமெரிக்காவில் உள்ளனர். 50 இலட்சம் பேர் ஆசியாவிலும், 20 இலட்சம் பேர்
ஐரோப்பாவிலும், ஒரு இலட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் வாழ்கின்றனர்.
இவ்வுலகில் உள்ள யூதருக்கு 100 முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் யூதர்கள்
முஸ்லிம்களின் வலிமையை விட நூறு மடங்கு அதிகம் வலிமையுடன் காணப்படுகிறார்களே! இது ஆச்சர்யமாக உள்ளது.
நாசரேத்தில்
இயேசு யூதராக இருந்தார். உலகில் எல்லாக் காலங்களிலும் அதிக தாக்கத்தை
ஏற்படுத்திய, நூற்றாண்டின் சிறந்த மனிதர் என டைம் இதழ் புகழ்கின்ற விஞ்ஞானி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் யூதராக இருந்தார். உளவியலின் தந்தை, சிக்மன் ஃபராய்டு
ஒரு யூதர். கார்ல் மார்க்ஸ், பால் சாமுவேல்சன், மில்டன் ஃப்ரீட்மேன்
ஆகியோர் யூதர்களாக இருந்தனர்.
பெஞ்சமின்
ரூபின் மனித குலத்திற்கு மருந்தை உடலுக்குள் செலுத்தும் ஊசியை வழங்கினார்
ஜோனஸ் சால்க் போலியோ தடுப்பு மருந்தை முதலில் உருவாக்கினார். அலர்ட் ஸாபின்
தற்போதுள்ள போலியோ சொட்டு மருந்தை உருவாக்கினார். கொர்ட்ருட் எலியன்
லீகேமியா என்ற நோயைப் போக்கும் மருந்தை கண்டுபிடித்தார். பாருச் பிளம்பர்க்
ஹெபாடிடிஸ் B தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். பால் எர்லிக் சிஃபிலிஸ்
என்ற பாலியல் நோய்க்கு சிகிச்சை அளித்தார். எலீ மெட்ச்நிகாஃப் தொற்று
நோய்கள் தொடர்பான ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.
இஸ்லாமிய
மாநாட்டு அமைப்பில் (OIC) 57 முஸ்லிம் நாடுகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து
500 பல்கலைக்கழகங்களை மட்டுமே அமைத்துள்ளனர். 30 இலடசம் முஸ்லிம்களுக்கு
ஒரு பல்கலைக்கழகம் என்ற விகிதத்தில். அமெரிக்கா 5758 பல்கலைக்கழகங்களையும்
இந்தியா 8407 பல்கலைக்கழங்களையும் பெற்றுள்ளன.
2004 இல் ஷாங்காய்
ஜியோ டான்க் பல்கலைக்கழகம் நடத்திய உலகப் பல்கலைக்கழங்களின் தர வரிசைப்
பட்டியலில் முதல் 500 இடத்தில் ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகமும் இடம்
பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
YNDP தகவல்படி
கிறிஸ்தவ நாடுகளில் கல்வியறிவு விகிதம் 90% கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் 15
நாடுகளில் எழுத்தறிவு 100%, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் சராசரி 40%
மட்டுமே.
முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பத்து லட்சம் முஸ்லிமுக்கு 230
விஞ்ஞானிகள் மட்டுமே உள்ளனர். அமெரிக்கா 4000 விஞ்ஞானிகளையும் ஜப்பான் 5000
விஞ்ஞானிகளையும் பெற்றுள்ளது. முழு அரபுலகிலும் முழு நேர
ஆராய்ச்சியாளர்களின் மொத்த எண்ணிக்கை 35000 மட்டுமே. முஸ்லிம் நாடுகள்
அந்தந்த நாடுகளின் மொத்த வருமானத்தில் கல்விக்காக 0.2 % மட்டுமே
செலவிடுகின்றன. கிறிஸ்தவ நாடுகள் 5% செலவிடுகின்றன.
முஸ்லிம் உலகம் அறிவை உற்பத்தி செய்வதில், பெறுவதில் பின்தங்கி உள்ளதே இதற்கு காரணம்.
1000 மக்களுக்கு
எத்தனை நாளிதழ்கள், புத்தகங்கள் உள்ளன என்பதை வைத்து அந்த சமூகத்தின் அறிவை
எடை போட முடியும். பாகிஸ்தானில் 1000 மக்களுக்கு 23 நாளிதழ்கள் உள்ளன.
சிக்கப்பூரில் 360. UK வில் 10 லட்சம் மக்களுக்கு 2000 புத்தகங்கள்,
எகிப்தில் 20 மட்டுமே.
முஸ்லிகள் ஏன் வலிமை குன்றி உள்ளனர்? நாம் அறிவை உற்பத்தி செய்யவில்லை.
முஸ்லிம்கள் ஏன் அதிகாரமின்றி உள்ளனர்? நாம் அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை.
முஸ்லிம்கள் ஏன் பலத்தைப் பெறவில்லை? நாம் அறிவை பயன்படுத்தவில்லை.
அறிவு சார்ந்த
சமூகத்திற்குத்தான் எதிர்காலம் என்பதை நாம் கவனத்தில் கொண்டு, கல்வி
அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்விதான் மாற்றத்தை
ஏற்படுத்தும். அப்போதுதான் நாம் வலிமையானவர்களாய் திகழ முடியும்.
Thank you
Mr. Haidar Ali
No comments:
Post a Comment