Thursday, 22 November 2012

குண்டு வைப்பது முஸ்லிம்கள் -தா.பாண்டியன் தள்ளாடும் பாண்டியனாகிறார்...!


அஜ்மல் கசாப் குறித்த கேள்விக்கு பதிலளித்த, தா.பாண்டியன் "தொழுகை நிலையங்களில் குண்டு வைக்கும் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் தேவை" என்று கூறி முஸ்லிம் சமூகத்தின் மீது "பொய்ப்பழி" சுமத்தி விஷத்தை வித்திட்டுள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலடப்பட்ட அஜ்மல் கசாப் குறித்து "புதிய தலைமுறை தொலைக்காட்சியில்" தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், இந்த விஷமக்கருத்தை பதிவு செய்தார்.



அதாவது, முஸ்லிம்கள், தங்கள் மத தொழுகை நிலையங்களிலேயே குண்டுவைத்து மக்களை கொன்று குவிப்பதாக கூறியுள்ளார். கசாப் குறித்து அவர் பதில் சொல்லியிருந்தால் அதில் தவறில்லை. ஆனால் உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்கது. தொழுகை நிலையங்களில் குண்டு வைத்தது "ஹிந்துத்துவ தீவிரவாத கும்பல்" என்று வெட்ட வெளிச்சமாக பல வழக்குகளில் தெளிவாகிவிட்ட பின்பும், கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பில் உள்ள தா.பாண்டியனுக்கு தெரியாமல் போனது ஏன்?

தொழுகை நிலையங்களான மசூதிகளில் மட்டுமல்ல, ரயில் நிலையங்களிலும் - ஓடும் ரயில்களிலும் குண்டு வைத்த "ஹிந்துத்துவ தீவிரவாதம்" பற்றி பேச இந்த நாட்டில் எந்த கட்சிகளும் தயாரில்லை, என்பது வேதனையான விஷயம். பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரசானாலும், கம்யூனிசம் பேசும் கட்சிகளானாலும் முஸ்லிம்கள் விஷயத்தில் எப்படி நடந்துக்கொள்கிறார்கள், என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment