Wednesday, 7 November 2012

ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...! மாஷாஅல்லாஹ்..!!

__._,_.___

ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...! மாஷாஅல்லாஹ்..!!



துபையில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ (புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்றது.




ஹைதராபாத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்கின்றவர் தன் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி இவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்த குடும்பம்தான் தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே தந்தை முஹம்மது என்றும், இவரின் மனைவி மரியம் என்றும், மகள் ஆயிஷா என்றும் மகன் ஈஸா என்றும் இவரின் மனைவிக்கு சாரா என்றும் அழகான இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து தாங்களாகவே இஸ்லாமிய பெயர்களை சூட்டி கொண்டதாகவும், இவர்களுக்கு இங்கு யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை என்றும் இவர்களின் ஆர்வம் தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறி, ஒரு கைப்பெட்டி நிறைய இஸ்லாமிய வாழ்க்கை புத்தகங்கள் மற்றும் சி.டிக்களை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை தழுவியதும் இவர் இங்குள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் கூறுகையில் கடந்த இரண்டு வருடமாக தான் இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும் குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு அஹமது தீதாத், ஜாகீர் நாயக் மற்றும் யூசுப் எஸ்டேட் போன்ற மத வழிகாட்டிகளின் பேச்சுக்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை இந்தியாவில் உள்ள தங்களின் மற்ற உறவினர்களுக்கு தெரியும் என்றும், இதைபற்றி அவர்கள் ஒன்றும் கூறவில்லை என்றும், ஊரில் உள்ள அவர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாமும் இவர்களுக்காக துவா செய்து இவரின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்று அதன் தூய வடிவில் வாழ துவா செய்வோம்.

அதிரை முஜீப்.
source:http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/todayevent/2012/October/todayevent_October32.xml&section=todayevent

No comments:

Post a Comment