Friday 13 January 2012

மனிதன் வடிவமைக்கபட்டானா அல்லது பரிணாமம் அடைந்தானா?

மனிதன் வடிவமைக்கபட்டானா அல்லது பரிணாமம் அடைந்தானா? 


உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology) என்பது உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன, செல்களில் உள்ள குரோமோசோம்களில் உள்ள மரபுகள் (Genes) எப்படி தன்னுடைய பயணத்தை தொடர்கிறது என்பதை பற்றிய உள் நுழைந்த பதிவு. இதன் மூலம் உயிரிகளின் அடிப்படை விசயங்களையும் வளர்ச்சிதை மாற்றத்தையும் மிக தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

உயிரி தொழிற்நுட்பம் (Bio technology) படிப்பவர்களுக்கு இந்த கோட்பாட்டின் ஆழம் தெரிந்திருக்கும் எனினும் அனைத்து தரப்பினரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகவே இந்த மைய கோட்பாடு உள்ளது என்பதனால் முடிந்த அளவு இலகுவாக தர முயன்றிருகின்றேன், பரிணாமம் பற்றிய சில யூகங்களை விளக்குவதாகவும் இது அமையும் என நம்பிக்கையுடன் தொடருகிறேன். 

பதிவிற்கு செல்வதற்கு முன்பு, சில முக்கிய தொழிற்நுட்பம் சம்பந்தமான குறிச்சொற்களை (Technical words) அறிந்துகொள்வது அவசியமானது. 

A – Adenine , C – Cytocine, G – Guanine, T – Thymine, U – Uracil 

(இவைகள் எல்லாம் Basepairs – வேதியியல் மூலக்கூறுகள்) 

Nuclic acid - நுயுக்ளிக் (மைய) அமிலம் 

DNA – DeoxyRibo Nucleic acid – A, C, G, T மூலக்கூருகளால் பிணைக்கபட்டிருக்கும் 

RNA – Ribo Nucleic acid – A, C, G, U மூலக்கூருகளால் பிணைக்கபட்டிருக்கும் 

Gene – மரபு (குறிப்பிட்ட DNA க்கள் சேர்ந்தது, நம்முடைய செயல்பாடுகள், உடலமைப்பு என அனைத்திற்கும் மூல ஆதாரம், ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு மரபு காரணம்) 

Protein – புரதம் (மரபிலிருந்து உருவாகக்கூடியது) 

Amino Acid - அமினோ அமிலம் (புரதத்தின் உள் உள்ளது) 


Chromosome – குரோமோசோம் (பல மரபுகள் சேர்ந்தது, ஒரு ஜோட்டி வடிவத்தில் இருக்கும்) 

Cells – செல்கள் (மேலே கொடுக்கப்பட்ட அனைத்தையும் கொண்ட ஒரு கட்டமைப்பு) 

Organ – உறுப்புகள் (புரதத்திளிருந்து உருவாகக்கூடியது) 

Sequence – கணினி புரோக்ராமிற்கு ஒத்தது - மரபுகளை கணினியின் உதவியுடன் ஆராய்வதற்கு உருவாக்கப்பட்டது. ( DNA, RNA Sequence – A, T, G, C, U and Protein Sequence – A,B,C… (20 basepairs))



வெற்றிகரமாக நடைபெறும் ஆண் பெண் விந்தணு கருமுட்டையின் சேர்க்கையால் அடுத்த சந்ததி உருவாக ஆரம்பிக்கும், அதன் பிறகு முதல் செல்லில் நடைபெறக்கூடிய மைய நிகழ்வுகளையே தற்போது நாம் காண போவது.



நாம் பார்த்த அறிந்தவற்றை விட செல்களில் நடைபெற கூடிய செயல்கள் மிகவும் ஆச்சரியமானவை.மூலக்கூற்று உயிரியலின் மைய கோட்பாடு செல்லில் (Cell) நடைபெறக்கூடிய முக்கியமாக இரண்டு நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது, Transcription and Translation என்பவை தான் அவை.

1) குரோமோசோம்களில் உள்ள DNA வை DNA polymerase எனும் அமைப்பு RNA வாக மாற்றுவது Transcription எனப்படும், இது முதல் முக்கிய நிகழ்வு.

2) இதன் பிறகு இந்த RNA வை செல்லில் உள்ள ரிபோசொம் (Ribosome) எனப்படும் ஒரு அமைப்பு புரதமாக (Protein) மாற்றும் இந்த நிகழ்வை Translation என கூறுவர், இது இரண்டாவது நிகழ்வு. 

(படத்தை காண்க, முதல் நிகழ்வில் போது RNA வாக மாற்ற பட்ட இந்த மரபுகள் திரும்பவும் DNA வாக ஒருபோதும் மாறாது.ஆனால் சில வைரஸ்கள் RNA விலிருந்து DNA வாக மாறும், அதாவது எய்ட்ஸ் (AIDS – Acquired Immuno Deficiency Syndrome) நோயை உருவாக்க கூடிய HIV க்களும் தலை கீழாக மாற கூடியவை, இந்த வினைக்கு Reverse Transcriptase என்று கூறுவர். இதன் காரணமாகவே எய்ட்ஸ் நோய்க்கு இது வரையில் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை, புற்றுநோய் (Cancer), காச நோய் (Tuberculosis) ஆகிய நோய்களுக்கும் இது வரை மருந்து கண்டுபிடிக்க முடியாமைக்கு காரணம் இந்த நோய்கள் மரபுகள் சார்ந்து இருப்பதும் மனிதனின் அடிப்படை மூலப்பொருளான இந்த மரபுகளையே தாக்குவதும் தான்).
புரதம் பின்பு கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates), லிபிட்ஸ் (Lipids) அதாவது கை கால் என மற்ற அனைத்து உறுப்புகளும் உருவாக மூலகாரணமாக உள்ளது, இது உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சியில் செல்லில் நடைபெற கூடிய அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள். 

DNA என்பது double helix எனப்படும் ஒரு சிக்கலான அமைப்பை கொண்டது, DNA தன்னை தானே மீள்பதிவு எடுத்து கொள்வது DNA Replication எனப்படும், மரபு காப்பி (Copy) எடுப்பது என்று கூறுவர், கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்று A என்பது T உடனும், G என்பது C உடனும் கெட்டியாக பிணைக்கப்பட்டிருக்கும்.

A, T, C, G, U இவைகள் எல்லாம் மூலக்கூறு அமிலங்கள் இதற்கும் உள்ளேயும் சென்று ஒரு உயிரினத்தை அக்கு அக்காக பிரித்தால் கடைசியில் மிஞ்சுவது வேதியியல் மூலக்கூறுகள் அவைகளில் கார்பன் (Carbon) மூலக்கூறுகளும் சுகர் (Sugar), பாஸ்பேட் (Phosphate) மூலக்கூறுகளும் இணைக்கப்பட்டிருக்கும், (இதுவரையில் மனிதனால் விளங்க முடியாதது உயிர் மட்டுமே. இது எங்கிருந்து வருகிறது எங்கு இருக்கிறது எங்கு செல்கிறது என அனைத்தும் ??? தான்). வளைந்த அமைப்பில் இருக்கும் DNA வை பிரித்து அதில் உள்ள மூலக்கூறின் அமைப்பை வரிசை படுத்தினால் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது போன்று கோடிங்காக இருக்கும். 

மரபுகளின் இந்த தொடர் மிக முக்கியமானது, தற்போதை கண்டுபிடிப்பு படி ஒருவன் அமைதியானவனா அல்லது கோபக்காரனா என்பது உட்பட மரபில் பொதிந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், இதை வைத்து மனிதனின் சுபாவம் உட்பட தலைமுறையாக தொடரக்கூடிய செய்திகளும் இதில் பதியப்பட்டிருக்கும்.

(தலைமுறையாக இது தொடரும் எனினும் அவற்றை தண்ணீர் தொட்டியில் போட்டு போதி தர்மரின் பழைய நினைவுகளை தூண்டுதல் என்பதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்)

>gi|363399400|gb|CY103856.1| Influenza A virus (A/Tomsk/29/2011(H1N1)) neuraminidase (NA) gene, partial cds

ATGAATCCAAACCAAAAGATAATAACCATTGGTTCGGTCTGTATGACAATTGGAATGGCTAACTTAATAT
TACAAATTGGAAACATAATCTCAATATGGATTAGCCACTCAATTCAACTTGGGAATCAAAGTCAGATTGA
AACATGCAATCAAAGCGTCATTACTTATGAAAACAACACTTGGGTAAATCAGACATATGTTAACATCAGC
AACACCAACTTTGCTGCTGGACAGTCAGTGGTTTCCGTGAAATTAGCGGGCAATTCCTCTCTCTGCCCTG
TTAGTGGATGGGCTATATACAGTAAAGACAACAGTATAAGAATCGGTTCCAAGGGGGATGTGTTTGTCAT
AAGGGAACCATTCATATCATGCTCCCCCTTGGAATGCAGAACCTTCTTCTTGACTCAAGGGGCCTTGCTA
AATGACAAACATTCCAATGGAACCATTAAAGACAGGAGCCCATATCGAACCCTAATGAGCTGTCCTATTG
GTGAAGTTCCCTCTCCATACAACTCAAGATTTGAGTCAGTCGCTTGGTCAGCAAGTGCTTGTCATGATGG
CATCAATTGGCTAACAATTGGAATTTCTGGCCCAGACAATGGGGCAGTGGCTGTGTTAAAGTACAACGGC
ATAATAACAGACACTATCAAGAGTTGGAGAAACAATATATTGAGAACACAAGAGTCTGAATGTGCATGTG
TAAATGGTTCTTGCTTTACCATAATGACCGATGGACCAAGTGATGGACAGGCCTCATACAAGATCTTCAG
AATAGAAAAGGGAAAGATAGTCAAATCAGTCGAAATGAATGCCCCTAATTATCACTATGAGGAATGCTCC
TGTTATCCTGATTCTAGTGAAATCACATGTGTGTGCAGGGATAACTGGCATGGCTCGAATCGACCGTGGG
TGTCTTTCAACCAGAATCTGGAATATCAGATAGGATACATATGCAGTGGGATTTTCGGAGACAATCCACG
CCCTAATGATAAGACAGGCAGTTGTGGTCCAGTATCGTCTAATGGAGTAAATGGAGTAAAAGGATTTTCA
TTCAAATACGGCAATGGTGTTTGGATAGGGAGAACTAAAAGCATTAGTTCAAGAAAAGGTTTTGAGATGA
TTTGGGATCCAAACGGATGGACTGGGACAGACAATAACTTCTCAATAAAGCAAGATATCGTAGGAATAAA
TGAGTGGTCAGGATATAGCGGGAGTTTTGTTCAGCATCCAGAACTAACAGGGCTGGATTGTATAAGACCT
TGCTTCTGGGTTGAACTAATCAGAGGGCGACCCAAAGAGAACACAATCTGGACT

இது மனிதனை தாக்க கூடிய (Influenza A virus (A/Tomsk/29/2011(H1N1)) neuraminidase (NA) gene) வைரஸின் மரபணு தொகுப்பு. இந்த கோடிங்கில் அந்த வைரஸின் தலை வால் அதன் உணவு முறை என அனைத்தும் பதியப்பட்டிருக்கும். இதே போன்றே அனைத்து உயிரினங்களுக்குள்ளும் பதியப்பட்டிருக்கும். இந்த வைரஸ் நுண்ணுயிரி என்பதால் கோடிங் சிறியதாக உள்ளது.

1990 ம் ஆண்டு NIH - National institute of health ஒரு ஆராய்ச்சியை துவங்கியது அது மனிதனின் அனைத்து மரபுகளையும் தொகுக்கும் ஆராய்ச்சி, அதற்கு மனித மரபியல் தொகுப்பு (Human Genome Project) என்று பெயரிட்டது. 15 வருட காலத்தில் முடிப்பதாக திட்டமிடப்பட்ட இந்த ஆராய்ச்சி விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியால் 13 வருட காலத்தில் அதாவது கடந்த 2003ல் முடிக்கப்பட்டது, மனித உடம்பில் இருக்க கூடிய 20000 – 25000 மரபுகளை பகுப்பது, மனித மரபில் இருக்கும் 3 பில்லியன் வேதியியல் மூலக்கூறுகளை கணினியில் sequence ஆக மாற்றி அதை database வடுவில் சேமித்து வைப்பது ஆகும்,தற்போது அனைத்து மனித மரபுகளும் பகுக்கப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டது, அதை வைத்து கணினி மென்பொருள் மூலம் மற்ற மரபுகளுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம், இரண்டு விலங்கின் அல்லது மனிதனின் மரபுகளை சோதிக்கவேண்டும் எனில் அதை நாமே மென்பொருள் உதவிகொண்டு பகுத்தாய்ந்தாய்வதற்கு ஏதுவாக பல சுலபமான மென்பொருள்கள் (Tools) வந்துவிட்டன. இதை தொடர்பு படுத்தியே மனிதனின் மரபிற்கும் (Human Genome) சிம்பன்சி மரபிற்கும் (Chimpanzee Genome) உள்ள 96% ஒற்றுமையை கூறுகின்றனர். 

மரபுகளை பகுத்தாய்வதில் மருத்துவ ரீதியாக அதிக பயனுண்டு, Gene therapy மூலம் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தல் மேலும் கொலை கொள்ளைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை DNA testing கொண்டு சுலபமாக கண்டுபிடித்து விடலாம். நம்மை தாக்க வரும் நோய்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கான தீர்வைகாணவும் இந்த ஆராய்ச்சி உதவுகின்றது. இனி ஒரு காலம் வரலாம், மனிதனின் மரபை வைத்து அவனின் உருவம் கணினியில் வரையப்படலாம், அதாவது மனிதனின் ஒரு முடி கிடைத்தால் (வேருடன் கூடிய முடி ஏனெனில் வேரில் தான் DNA பதியப்பட்டிருக்கும் பார்பர் கடையில் இருக்கும் முடியை வைத்து ஒரு உபயோகமும் இல்லை) போதும் அவனின் உருவத்தை வரைந்து விடலாம் என்ற நிலை ஒரு நாள் வரும். 

மரபில் உள்ள atgc யில் திடிரென ஒரு 'a' வை யாராவது இடையில் இணைதாலோ அல்லது எடுத்தாலோ, பரிணாம வாதிகளின் சிந்தனைப்படி திடிரென வேறொரு உயிரினம் உருவாகிவிடாது, இது போன்று சில நேரங்களில் சிறு மாற்றங்கள் (புற ஊதா கதிர் மற்றும் அகசிவப்பு கதிர் மற்றும் கெமிக்கல் பாதிப்பால் சீர்குலைய வாய்ப்புள்ளது) ஏற்படும் போது அந்த மரபு மாற்றமான உயிரினத்திற்கு நோய் அல்லது ஊனம் போன்ற ஏதேனும் ஒன்று ஏற்பட்டு விடும், அதையே mutation என்று கூறுவர், அந்த மாற்றமும் அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டு விடாது, அந்த மாற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காகவே DNA repair செய்ய கூடிய புரதங்கள் உடலிலேயே உருவாகின்றன, வேறொருவர் மாற்றினாலே அது தவறாகும் என்கிற பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் தானாக மாறி மாறி வேறொரு மரபுகளை வடிவமைத்து கொள்கிறது என்பதெல்லாம் எந்த அளவு அறியாமை என்பதை சிந்தித்து பாருங்கள். இது முழுமையாக எழுதி வைக்க பட வேண்டும். வேறொரு உயிரினம் வேண்டும் என்றால் வேறொரு மாதிரி இந்த மரபு கோடிங்கை மாற்றி எழுத வேண்டும். அப்பொழுது தான் புது விலங்கு தோன்றும், சில காலங்களுக்கு முன்னால் கூட ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புது வகையான ஊதா வண்ண ரோஜா உருவாக்கினர், தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனையான மரபணு மாற்று கத்தரிக்காயும் இதே அடிப்படையிலேயே செய்யப்படுகின்றது. அதேபோன்று மனித மரபணு மாற்று உருவாக்கமும் எதிர்காலத்தில் சாத்தியமே. 

உயிரினங்கள் ஒரு வரைமுறையில் இருப்பதால் தான் அவற்றை மாற்ற வாய்ப்பு இருக்கிறது, தானாக வந்திருந்தால் அவற்றை மாற்ற வாய்ப்பே இருந்திருக்காது அல்லவா?


பில் கேட்ஸ் ஒருமுறை மரபுகளை பற்றி கூறும்பொழுது மனிதன் உருவாக்கிய கணினி மென்பொருளை உருவாக்க கூடிய மொழியை விட (0,1) மிகைத்த ஒரு மொழியை கொண்டு உருவாக்க பட்டுள்ளது என்று கூறினார். மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு (A,T,C,G) வேதியியல் மூலக்கூறுகளில் மட்டும் தான் அனைத்து செய்திகளையும் DNA பதிகின்றது இந்த நான்கு வேதியியல் மூலக்கூறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவைகளை மாற்றி, இணைத்து ஒரு புரத மூலக்கூறை தருகிறது என்பது ஒரு விசித்திரமான செய்தி மேலும் அந்த செல்கள் அனைத்தும் உயிர்வாழ வழிவகையும் செய்து அதன் மூலமே இரத்தமும் சதையும் உருவாக்கி உயிரினங்கள் வாழ்கின்றன என்றால் அது ஒரு விசித்திரமான செய்திதான். நாம் பயன்படுத்துகின்ற கணினியும் அதை சார்ந்தவையும் தானாக உருவாயின, அதன் கோடிங் எல்லாம் தானாகவே உருவாகியது என்று கூறினால் முட்டாள் என்று கூரமட்டார் பிறகு மரபணுக்களை தன்னகத்தே கொண்ட உயிரினங்களும் தானாக வந்தது என்று கூறுபவரை என்ன வென்று கூறுவது. 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment