Thursday 7 June 2012

சுய தொழில்கள்-30 கிரிஸ்டல் நகை தயாரிப்பு




கிரிஸ்டல் நகை தயாரிப்பு


‘சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு. இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்’ என்கிறார்கள் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த செல்வி, ரம்யஜோதி. அவர்கள் கூறியதாவது: தையல் பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு ஒருவர் கிரிஸ்டல் நகை தயாரிப்பு குறித்து இவருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கிரிஸ்டல் நகை தயாரிப்பை ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவக்கினோம். கோவைக்கு வாரம் ஒருநாள் சென்று, உற்பத்தி பொருட்களை வாங்குவோம். வீட்டு வேலை இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ நகைகளை கோர்ப்போம். இதனால் உற்பத்தி அதிகரித்தது.

ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக செய்யத் தொடங்கிய நாங்கள், தயாரித்த நகைகளை அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு விற்றோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது. வீட்டில் உள்ளவர்கள் ஊக்குவித்தனர். அதிகளவில் உற்பத்தி செய்து அருகில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு விற்று விற்பனையை அதிகப்படுத்தினோம். பள்ளி மாணவிகளையும் எங்கள் கிரிஸ்டல் நகை கவர்ந்தது. விலை மிகவும் குறைவாக இருப்பதோடு விரும்பிய மாடலில் கிடைப்பதால், பல பெண்கள் ஆர்வத்தோடு வாங்குகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். நாங்கள் கலைநயத்தோடு செய்கிறோம். எங்கள் நகைகளை பார்ப்பவர்கள் உடனே தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். அதன் மூலம் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. விலை குறைவோடு தரமாகவும் தயாரிப்பதால், எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒளியை பிரதிபலித்து மின்னுவதால் லைட் கலர் கிரிஸ்டல் நகைகளை இளம்பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். பெரியவர்கள் அடர் வண்ண கிரிஸ்டல் நகைகளை விரும்புகின்றனர். பொறுமையும், அழகுணர்ச்சியும் உள்ளவர்கள் புதுப்புது டிசைன்களில் கிரிஸ்டல் நகையை உருவாக்கலாம். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களை பெருக்க முடியும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய ஏற்ற தொழில் இது. பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.


உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.

வருவாய் (ஒரு நாளைக்கு): ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500 இதில் லாபம் ரூ.1,500. இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும். ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.

சந்தை வாய்ப்பு: சேலை மட்டுமல்லாமல் சுடிதார், சல்வார் உள்ளிட்ட நவீன ஆடைகளுக்கு ஏற்றபடி அணிய கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கலாம். இவற்றை இளம்பெண்கள் விரும்பி வாங்குவார்கள். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.300க்குள் கிடைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பொலிவு குன்றாமல் காட்சியளிக்கும். கலைநயத்தோடு இருப்பதால் வயதானவர்களும் விரும்பி வாங்குவார்கள். தோழிகளுக்கு பரிசளிக்கவும் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். கிரிஸ்டல் செயின் மட்டுமல்லாமல், கிரிஸ்டல் தோடு, கிரிஸ்டல் கொலுசு ஆகியவற்றையும் எளிதில் தயாரிக்கலாம். தனிப்பட்ட முறையில் விற்பது மட்டுமல்லாமல் பேன்சி ஸ்டோர்கள், கவரிங் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.


தயாரிப்பது எப்படி?

கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான். சிறுமிகள், இளம்பெண்கள், வயதானவர்கள் அணிவதற்கேற்ப குறைந்த நீளம் (ஒரு அடி), நடுத்தர நீளம் (ஒன்றரை அடி), அதிக நீளம் (2 அடி) ஆகிய அளவுகளில் கிரிஸ்டல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும். இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.

தேவையான பொருட்கள்: இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65. எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். 100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.

கிரிஸ்டல் கொலுசு..
தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய் கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.

கிரிஸ்டல் கற்களால் அலங்கரித்து, ரூ.400 விலையில் வெள்ளிக்கொலுசு தயாரித்து அசத்துகிறார், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சாந்தி. பிருந்தா ஜுவல் ஒர்க்ஸ் மற்றும் மெருகுக்கடை நடத்தி வரும் அவர் கூறியதாவது:

நகைத்தொழில் செய்து வரும் பாரம்பரிய நடுத்தர குடும்பம் எங்களுடையது. பெரிய நிறுவன நகைக்கடைகளால், குடிசைத் தொழிலாக இருந்து வந்த நகைத்தொழில் நலிந்ததால் எங்கள் குடும்பத்தில் வறுமை தலை தூக்கியது. இதனால் கணவர் நகைக்கடை வேலைக்கு சென்றார். நான் நகைகளுக்கு பாலிஷ் போடுவது, கொலுசு தயாரிப்பது போன்றவற்றை கற்றுக்கொண்டேன். அதுதான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
வெள்ளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், கொலுசு எடை, தரத்தை குறைக்காமல் குறைந்த விலையில் கொலுசு விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.

கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரித்தேன். நான் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கினர். ¢400க்கு கிடைப்பதால் பலரும் வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் கிடைத்த லாபத்தில் எனது குடும்பமே தலைநிமிர்ந்து நிற்கிறது.

தொழிலை விரிவுபடுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேசக்கரங்கள் தன்னார்வ நிறுவன வழிகாட்டுதலின் பேரில் பிருந்தாவனம் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி தலைவியானேன். இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுத்தேன். இன்று குழுவாக சேர்ந்து கிரிஸ்டல் கொலுசு தயாரித்து லாபம் பார்க்கிறோம்.


முதலீடும் லாபமும்

ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும். ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.

கற்றுக் கொள்வது எப்படி ?

மாவட்ட நிர்வாகத்தின் மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டும் தொண்டு நிறுவனங்கள், இத்தொழிலை மேற்கொண்டுள்ள குழுக்கள், குடிசைத்தொழிலாக செய்து வரும் நகைத்தொழிலாளர்களை அணுகினால், ஒரு வாரத்தில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிப்பதை கற்றுக் கொள்ளலாம்.

தங்க முலாம் பூச்சு


வீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம். ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.


தயாரிக்கும் முறை

வெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா. கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு. இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத் தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசு

கிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.
இணையத்திலிருந்து...


No comments:

Post a Comment