Friday, 2 March 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-6




நேற்று அனுப்பிய தொடர்-6 ல் புகைப்படங்கள் நிறைய சகோதரர்களுக்கு Download ஆகவில்லையென தெரிவித்தார்கள். ஆகவே தொடர்-7 உடன் தொடர்- 6 ஐயும் இணைத்துள்ளேன்.
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்
-6

 

எப்பொழுதும் விழிப்புணர்வு என்பது எமக்கு மிக அவசியமானதுநாம்எல்லாவற்றையும் நம்புகிறோம்எல்லாரையும் நம்புகிறோம். அரசியல்வாதியாக இருந்தாலென்னமதவாதியாக இருந்தாலென்னஎழுத்தாளனாயிருந்தாலென்ன,எல்லாரையும் சுலபமாக நம்பிவிடுகிறோம். எமது இந்த நம்பிக்கையையேபலகீனமாகக் கொண்டுதப்பான கருத்துகளை எம்முள் விதைப்பதற்கு ஒரு கூட்டமேஎம்முன்னே காத்திருக்கிறதுஅதனால்தான்அடிப்படையில் குறைந்தபட்சமாவதுசிந்திக்க வேண்டும் என்று சொல்கிறது அறிவியல்பல விசயங்களுக்கு விடைகள்இல்லாதபோதும்தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கஅறிவியல் எம்மைவற்புறுத்துகிறதுஆதாரமில்லாத எதையும் அறிவியல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவதில்லை.ஒன்றைச் சரியாகக் கணிப்பது என்றால் என்னதர்க்க ரீதியாக சிந்திப்பது என்றால் என்னஎன்பது பலருக்குத் தெரிவதில்லை. பரீட்சைகளில் வரும் வினாத்தாள்களில்ஒரு வினாவுக்கு நான்கு பதில்கள் கொடுத்திருப்பார்கள் அல்லவாஅதில் சரியானவிடையைத் தெரிந்தெடுப்பது சரியான கணிப்பு.  அதே நேரத்தில் சரியான விடைஎதுவென எமக்குத் தெரியாத பட்சத்தில்ப்பான பதில்கள் எவையாயிருக்கும் எனச் சிந்தித்துஅவற்றை நீக்குவதன் மூலம் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான் தர்க்க ரீதியாக முடிவெடுப்பது என்பது.ஓவியத்தில் நாம் கோடுகளையும்ிறங்களையும் படிப்படியாகசேர்த்துச் சேர்த்து முழுஓவியத்தைப் படைக்கின்றோம்ஆனால் சிலையில்அதைச் செய்யும் கல்லில் இருந்துதேவையற்ற பாகங்களை படிப்படியா நீக்கிமுழுச் சிலையையும் வடிக்கிறோம்.ஒன்று சேர்த்தல்மற்றது நீக்கல்இரண்டும் இறுதியில் முழுமையான படைப்பாய்மாறுகின்றன.ஒரு  விண்வெளி மனிதன்  கிருஸ்தவத் தேவாலயத்தில் சிலை வடிவமாக இருக்கும்படங்களைக் கடந்த பதிவில் தந்தது ஞாபகம் இருக்கலாம். அந்தக் கிருஸ்தவதேவாலயம் ஸ்பெயின் நாட்டில் உள்ள 'சலமன்கா' (Salamanca) என்னும் ஊரில்இருக்கிறதுஅந்தத் தேவாலயம் கட்டப்பட்டது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்.அதாவது கி.பி.1200 களில் கட்டப்பட்டது. அதில் எப்படி ஒரு நாசா விண்வெளிப்பயணியின் உருவம் வரமுடியும்அதற்குச் சாத்தியம் உண்டாஎனச் சிந்தித்தால்,சாத்தியமே இல்லை எனத்தான் சொல் வேண்டும்அந்த உருவத்தில் இருக்கும்காலணி முதல் ஜாக்கெட் வர எல்லாமேதத்ரூபமாக இன்றைய நவீன விண்வெளிப் பயணி போல இருப்பது என்னவோ நெருடலான ிசயம்மாயாக்களோஅல்லது எகிப்தி பிரமிட்களோ இப்படிச் சித்திரங்களைக் கொடுத்தாலும்இவ்வளவுதத்ரூபமாக கொடுக்கவில்லை.
ஆராய்ந்து பார்த்ததில் அந்த சிலை உண்மையாக 800 ஆண்டுகளுக்கு ுன்னர்உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்ததுஇந்த தேவாலயம் 1992ம் ண்டு திருத்தியமைக்கப்பட்ட போதுஇந்த விண்வெளிப் பயணியின் சிலை ஒருபோத்துக்கேய ிற்பியால் சேர்க்கப்பட்டிருக்கிறதுஎனவே அது உண்மையாக 800வருடப் பழமை வாய்ந்ததல்ல. 
இதுவரை மாயாக்கள் வாழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் சுற்றித் திரிந்த நாம் இனி அவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது நல்லதுஇனி தொடர்ச்சியாக மாயாக்களின் மர்மங்களுக்குள் நாம் பிரயாணம் செய்யலாம் வாருங்கள்........!
மாயன் இனத்தவர்கள் பற்றிச் சொல்லும்போதுஆரம்பமே மாயனின்  அதிஉச்சக்கட்ட மர்மத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்அதனால் நீங்கள் அவற்றிற்கு உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்'என்னடாஇந்த நபர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரேஎன்று நினைக்கலாம்நான் சொல்லப் போகும் விசயம்மாயன் இனத்தின் சரித்திரத்தின் மைல் கல்லாக அமைந்த ஒன்று.உங்களை அதிர வைக்கப் போகும் விசயமும் இதுதான். உலகில் உள்ளஆராய்ச்சியாளர்களும்அறிவியலாளர்களும் துவரை உலகத்தில் நடைபெற்றஅனைத்து மர்மங்களின் முடிச்சுகளையும் தங்களால் இயன்ற அளவிற்கு அவிழ்த்துக்கொண்டே சென்றிருக்கின்றனர்ஆனால் அவர்கள் கூடத் தோற் ஒரு இடம்உண்டென்றால்அது இப்போது நான் சொல்லப் போகும் விசயத்தில்தான்
அப்படி என்னதான் அந்த விசயம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?சொல்கிறேன்......!மாயன் இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ஆராய்ச்சிக்கென வந்தவர் ஒருவரின் கண்ணில்தற்செயலாகத் தடுப்பட்ட பொருளொன்றுஅதைக் கண்டெடுத்தவரை மலைக்க வைத்ததுஅந்தப் பொருள் ஒரு மண்டை ஓடு…….!"அடச் சே…..! ஒரு மண்டை ஓட்டுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாய்?"என்றுதானே கேட்கிறீர்கள்கொஞ்சம் பொறுங்கள்முழுவதும் சொல்லிவிடுகிறேன்.ஒரு சாதாரண மண்டை ஓட்டுக்காகவா நான் இவ்வளவு பேசுவேன்.
அது ஒரு சாதாரன மண்டை ஓடே அல்ல......! அது ஒரு 'கிறிஸ்டல்மண்டை ஓடு.ஆம்'கிறிஸ்டல்' (Crystal) என்று சொல்லப்படும் மிகவும் பலம் வாய்ந்த கண்ணாடி போன்ற ஒரு முலப் பொருளினால் உருவாக்கப்பட்ட மண்டை ஓடு அது. இது பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் 'கிறிஸ்டல்என்பது பற்றி நான் முதலில்கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டும்கிறிஸ்டல் என்பது சாதாரண கண்ணாடியைிட வலிமை வாய்ந்தகடினமான ஒரு மூலப் பொருள்கண்ணாடியிலும் கிறிஸ்டல்உருவாக்கப்படும் என்றாலும், 'குவார்ட்ஸ்' (Quartz) போன்ற பலம் வாய்ந்த மூலப்பொருள்களினாலும் அது அதிகம் உருவாக்கப்படுகிறதுஇந் வகைக் கிறிஸ்டலைவெட்டுவது என்பதுஇன்றைய காலத்திலேயேமிகக் கடினமானதுவைரம்போன்றவறால்தான் அதை வெட்ட முடியும்அல்லது நவீன 'லேசர்' (Laser) தொழில்நுட்பத்தினால் வெட்டலாம்.சரிமீண்டும் எங்கள் கிறிஸ்டல் மண்டையோட்டுக்கு வருவோமா!'மிச்செல் ஹெட்ஜஸ்' (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒருபுதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர்அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னாஹெட்ஜெஸ் (Anna Hedges).  1924ம் ஆண்டு மிச்செல்மாயா இனத்தவர் வாழ்ந்தஇடங்களை ஆராய்வதற்காகலுபாண்டூன் (Lubaantunஎன்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக்கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.  
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் இது……!
அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம்பழமையானது தெரியுமா…? 5000  வருசங்களுக்கு மேல்அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு.  இந்தக் கிறிஸ்டல்மண்டை ஓட மிக அழுத்தமாகஅழகாகவட்டவடிவமாக தேய்க்கப்பட்டுபளபளப்பாகசெதுக்கப் பட்டிருக்கிறதுஅன்றைய காலத்தில்ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால்அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும்.அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு. 
இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த 'ஹூவ்லெட் பக்கார்ட்' (Hewlett Packard)நிறுவனத்தினர்குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும்நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி,  அது எப்படிச் செய்யப்பட்டதுஎந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்குமிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர் 
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில்அவ்வளவு லிமையான ஒருபதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்இதுசாத்தியமான ஒன்றுதானாஇந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர்இது லேசர்தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலைலேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்ததுஎன்றால் நீங்களே சிரிப்பீர்கள்அப்படி என்றால் இது எப்படிஇன்றுள்ள மனிதனால் கூட,நவீன கருவிகள் இல்லாமல்  இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்கமுடியாது.இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகள் பற்றிய செய்தி இவ்வளவுதானா என்று கேட்டால்,நான் சொல்லும் பதிலால் நீங்கள் அதிர்ந்தே போய் விடுவீர்கள்அவ்வளவு மர்மங்களைஅடக்கிருக்கிறது இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுஇந்தக் கிறிஸ்டல் ண்டை ஓடுகிடைத்ததற்கு அப்புறம், மாயன் சரித்திரத்தை இந்தத் திசையில் ஆராய்ந்தால்கொட்டுகிற செய்திகள் அனைத்துமே நாம் சிந்திக்க முடியாதவையாக இருக்கின்றன.து பற்றி மேலும் சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் என்னும்அளவுக்கு மிகப்பெரிய செய்திகளை அடக்கியது இந்த மண்டை ஓடு.   இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓட்டை டிப்படையாக வைத்து, 2008ம் ஆண்டு'இன்டியானா ஜோன்ஸ் அன்ட்  கிங்டொம் ஆஃப்  கிறிஸ்டல் ஸ்கல்' (Indiana Jones and the Kingdom of the Crystal Skull) என்னும் படம் வெளியானது. இந்தப் படத்தில் பிரபலஹாலிவுட் நடிகர் ஹரிசன் போர்ட் (Harrision Ford) நடித்திருக்கிறார்அத்துடன் இந்தப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg).
முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்இந்தப் படத்தில் வரும் பாத்திரம் என்பதுஉண்மையாகவே இருந்த ஒரு பாத்திரம்அவர்தான் மேலே நான் சொல்லிய மிச்செல் ஹெட்ஜெஸ்.
இவ்வளவு ஆச்சரியம் வாய்ந்த மண்டை ஓடு மாயாக்களால் எப்படிச்சாத்தியமானது….?குவார்ட்ஸ் என்னும் கனிமத்தை எப்படி மாயாக்கள் எடுத்தார்கள்…..?அதை எப்படி மண்டை ஓடு போலச் செதுக்கினார்கள்…..?மாயாக்கள் என்னமனிதனாலேயே சாத்தியமில்லாத ஒன்றல்லவா இது!அப்படிப்பட்ட மண்டை ஓடு ஒன்றே ஒன்றுதானா....?இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நடுவில்அன்னாவின் கிறிஸ்டல் மண்டை ஓட்டின் பின்னர்பலர் ஆராய்ச்சிக்குக் கிளம்பினார்கள். மேலதிக ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இது போன்ற மண்டை ஓடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரிந்தது.மொத்தமாக எட்டு கிரிஸ்டல் மண்டை ஓடுகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன.  அந்த எட்டு மண்டையோடுகளில் பெரும்பான்மையானவைகுவார்ட்ஸ் என்னும்கனிமத்தினாலும்சில 'அமெதிஸ்ட்' (Amethyst) என்னும் ஆபரணங்கள் ெய்யும் ஒருவகை இரத்தினக் கல்லாலும் செய்யப்பட்டவையுமாகும்
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு கிறிஸ்டல் மண்டை ஓடுகளும் இவைதான்.
மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோதுஇப்படிப்பட்ட மண்டை ஓடுகள்மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொண்டார்கள்அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகள் இருப்பதற்குஒரு காரணம் இருக்கிறதாஅப்படி இருந்தால்அந்தக் காரணம் என்ன.? மிகுதி ஐந்துமண்டை ஓடுகளும் எங்கே போயினஅவை
...

No comments:

Post a Comment