Friday, 2 March 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-8



2012ல் உலக அழியப் போகிறதாம். இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான். உலகம் அழியப் போகிறதா? அது எப்போது? எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை மிக்கோன் படைத்த இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை. யார் இந்த மாயா இன சமூகம்? அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்? இது தான் நம் முன் நிற்கும் கேள்வி. மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் உயிரோசை இணைய இதழில் விளக்கமாக எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப்  பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன். இதோ தொடர்-8 தொடர்கிறது.....
Er..சுல்தான்

'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-8ராஜ்சிவா 

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களாஇல்லையான்னும் இரண்டு விதமான கருத்துகளில் ஆய்வாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும்அப்படி யாரும் பூமிக்கு வரவில்லை என்பதை மையமாக வைத்தே நாம் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்ஆதாரமில்லாமல் எதையும் ஒத்துக் கொள்ளாத அறிவியல்இதையும் ஏற்றுக் கொள்ளவில்லைபூமிக்கு ஏலியன்கள் வரவில்லை என்றுதான் அறிவியல் சொல்லிக் கொண்டிருக்கிறதே ஒழிய,ஏலியன்களே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லவில்லைகலிபோர்னியா மாநிலத்தில், 42 அதியுயர் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் அமைக்கப்பட்டு, 'பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் இருக்கின்றனவாஅவை பேசும் குரல்கள் எமக்குக் கேட்குமா?' எனத் தினம் தினம் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர்.இதற்கென பல மில்லியன் டாலர் செலவும் செய்யப்பட்டிருக்கிறதுஇந்தச் செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டவர் வேறு யாருமில்லைஉங்கள் எல்லாருக்குமே தெரிந்த மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குனரான பவுல் அலென்(Paul Allen) தான் அவர். இதனாலேயே இந்த திட்டம் 'அலென் டெலெஸ்கோப் அர்ரே(Allen Telescope Array) என்று பெயரிடப்பட்டுள்ளது.ஆனால் பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றனர் என்று அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள் பெரும்பாலும் சுட்டிக் காட்டுவது, 'நாஸ்கா லைன்ஸ்' (Nazca Liines)என்பதைத்தான். தமிழில் தை நாஸ்கா கோடுகள் என்று சொல்வோமாஅது என்ன நாஸ்கா கோடுகள்?  இது பற்றி கொஞ்சம் பார்க்கலாம்………..!தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca)என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும்,கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன. கோடுகள்,சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று  நினைத்துவிடவேண்டாம்இவை எல்லாம் ிகவும் ஆச்சரியமான சித்திரங்கள்எல்லாமேமனிதர்கள் வாழாத இடமானமிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்லசதுர கிலோ மீட்டர்இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன ன்றால் நீங்களேகற்பனை பண்ணிப் ாருங்கள்.
இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றனஅத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள்நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராகநேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றனநேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது.அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றனஇங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லைபலவிதமான வடிவங்களும்சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. 
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள்,பறவைகள் போன்ற உருவங்கள். இதில் 800 க்கும் அதிகமான கோடுகள்கேத்திர கணித வரைவுகளும் நூற்றுக்கும்மேற்பட்ட மிருகங்கள்பறவைகளின் உருவங்களும் அடங்கும்இவற்றில் ஐம்பதுக்கும்மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் ிரமாண்டமானவைமிகப் பெரிய உருவங்கள்  285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது.  அதாவது கால் கிலோமீற்றர் நீளம்.அத்துடன்நேர்கோடுகள் பல கி.மீநீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள்இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.
எல்லாமே ஆச்சரியங்கள்! "எப்படி இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்வி எமக்குஎழுந்தாலும், "ஏன் இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமேவியக்கும் விசயமாகிறதுநிலத்தில் இருந்து பார்க்கும் போதுஇந்தச் சித்திரங்களின்முழுமை எவருக்குமே தெரியாதுஇவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில்உயரப் பறந்தால் மட்டுமே முடியும்அப்படி என்றால் இதை வரைந்த நாஸ்காவினர்,யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்?  2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும் யோசிக்க வைக்கிறது.
இந்த நாஸ்கா உருவங்களில் குரங்குநாய்சிலந்திபல்லிதிமிங்கலம்மீன்ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும்தெரியாத உருவங்களும் பலஇருக்கின்றனஇவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தே தீரவேண்டும்அவை என்ன?
இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின்அளவுடையதுஅதாவது 285 மீற்றர்கள். 
கணினியில் அச்சுப் பதித்துத் தரும் 'ப்ளொட்டர்' (Plotter) என்னும் இயந்திரம் போ,தொடங்கிய புள்ளியும்முடிந்த புள்ளியும் எதுவெனத் தெரியாமல்ஒரே தொடர்ச்சியாய்அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில் கீறப்பட்டுள்ளனஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு முடிவடைந்திருக்கும்குறிப்பாகஅந்தக் குரங்கின் வாலைக் கவனித்தீர்களானால்,  அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும்அவையெல்லாம் என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர்,அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி செய்து வரைந்து காட்டினாலும்அந்தக்காலத்தில் அது எப்படிச் சாத்தியமா இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்கவைக்கிறது.
இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத் தேவையில்லைஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறையயோசிக்க வைத்தன. பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டுசித்திரங்களும்தான். பல மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் 'டு பாதைபோலஅமைந்த ஒரு அமைப்பு அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டதுஅல்லது இது விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடுபாதையேதானா
இரண்டாவதுமலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டுஒரு கையால் வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனின்சித்திரம்யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக்காத்திருப்பது போலவோஅந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம். இந்தச் சித்திரத்துக்கு  'அஸ்ட்ரோநாட்' (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.
இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ
நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன. இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டுகுரங்கு போன்ற சித்திரத்திலும்,வேறு சில சித்திரங்களிலும்ஒரு கையில் நான்கு விரல்களும்அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி ஒருபிழையை விடுவார்களாஇவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?
இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்இந்தச் சித்திரங்கள்மூலமாகநாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோஅறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்குவிண்ணில் இருந்து ந்தவர்கள்யாரோ இப்படி வரையும் கவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அது.நாஸ்கா அமைந்திருக்கும் 'பெரு' (Peru) நாடும் மாயா இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது மேலும் ஒரு விசேசமாகின்றது.
உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும்அறிவியல் வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு.  அவை 1. கிறிஸ்டல் மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச் சித்திரங்கள் (Crop circles) என்பனஇந்த மூன்றும் வேற்றுக் கிரக மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன.  இவற்றில் கிறிஸ்டல் மண்டையோடுகள்நாஸ்கா கோடுகள் ஆகிய இரண்டையும் முழுமையாகப்பார்க்காவிட்டாலும், ஓரளவுக்குப் பார்த்திருக்கிறோம்பார்க்காமல் இருப்பது சோளச் சித்திரங்கள்தான்ஆனால் அதை நாம் பார்ப்பதற்கு முன்மாயா இனத்தவர் பற்றி முழுமையாகப் பார்த்துவிட்டு வரலாம். அடுத்த தொடரில் நேரடியாக மாயாவைப் பற்றித் தெரிந்து கொள்வோமா....?

No comments:

Post a Comment