'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-16 | |||
மேசனிக்ஸின் மிக முக்கியமான அடையாளம் (Symbol) என்பது, ஒரு பிரமிட்டின் உச்சியில், விழித்திருக்கும் ஒற்றைக் கண்தான். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாக வளர்ந்தது இந்த மேசனிக்ஸ் அமைப்பு. ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்குமே சம்பந்தம் இல்லாதது பிரமிட். உலகில், பிரமிட் என்பது விசேசமாக உணரப்பட்டது இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று எகிப்து மற்றது மாயன்களின் பிரதேசம். அதிலும் குறிப்பாக, நான் முன்னர் சொல்லியிருந்த 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டில், 13 என்னும் இலக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் ஷிசேன் இட்ஷா, பூமியின் ஆரம்ப வரலாற்றை அப்படியே சொல்கிறது என்கிறார்கள். அதற்கமையவே அது கட்டப்பட்டும் இருக்கிறது என்கிறார்கள். அந்தப் பிரமிட்டில் உள்ள ஒன்பது அடுக்குகளையும், தனித் தனியாக 13 பிரிவாகப் பிரித்திருந்தார்கள் மாயன்கள். அவற்றை ஏழு பகல்கள், ஆறு இரவுகள் என மொத்தமாக 13 ஆகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றின் விபரத்தை இப்போது சொல்லப் போனால் நேர விரயம் அதிகமாகும் என்பதால் படம் தருகிறேன், அதன்மூலம் அது புரிகிறதா எனப் பாருங்கள். புரியாவிட்டாலும் ஒன்றும் பரவாயில்லை. எமக்குத் தேவை அந்த 13 ஆகப் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவம் மட்டும்தான். 'அதே கண்கள்' என்று நாங்களும் அலறலாம் போல இருக்கிறது. ஆம்! அதே பிரமிட். அதன் உச்சியில் அதே கண்கள். அது மட்டுமல்ல, அந்தப் பிரமிட்டின் அடுக்குகளை எண்ணிப் பாருங்கள். அவை மொத்தமாக 13. இந்தப் பிரமிட் வடிவக் கல்லின் பெயர் 'லா மனே பிரமிட்' (La Mane Pyramid) என்பதாகும். இதற்கு மேலும், மாயனுக்கும், அமெரிக்க டாலருக்கும், மேசனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நான் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அவநம்பிக்கை என்பது நமது பிறப்பிலேயே அமைந்த ஒரு சுபாவம். யார், எதை, எப்படிச் சொன்னாலும் நம்ப மறுக்கும் சுபாவம் நமக்கு என்றுமே இருந்து வருகிறது. அதில் ஒன்றும் தப்பு கிடையாது. நம்பும் வரை புரிய வைக்க வேண்டியது என் கடமை. மிருகங்கள் போல காட்டுவாசிகளாக வாழ்ந்த மாயன்களை, நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த அமெரிக்க அரசாவது கண்டுகொள்வதாவது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு இன்னும் ஒரு முக்கிய உதாரணத்தைத் தந்துவிட்டு நகர்கிறேன். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்த 'காப்பிடல் பில்டிங்' (Capitol building in Washington D.C.) என்பது கி.பி. 1793 களில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் வேறு யாருமல்ல, ஒரு டாலரில் அமர்ந்திருக்கும் அதே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்டன்தான். இவர் மேசனிக்ஸ் அமைப்பின் மிகமிக முக்கிய உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். இதைச் சொல்வதற்கு நான் பைபிளின் (Bible) பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கடவுள் ஆதாமையும், ஏவாளையும் படைத்துவிட்டு அவர்களை ஏடன் (Eden) தோட்டத்தில் வசிப்பதற்கு விடுகிறார். அப்போது கடவுள் ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காட்டி, "அந்த மரத்தில் உள்ள கனியை மட்டும் உண்ண வேண்டாம். அதை உண்டால் சாகவே சாவீர்கள்" என்று சொல்லி விட்டுச் செல்கிறார். ஆதாமும், ஏவாளும் கடவுள் சொன்னபடியே வாழ்கிறார்கள். அப்போது அங்கு வந்த 'சாத்தான் (Satan), "நீங்கள் அந்த மரத்தின் கனிகளைச் சாப்பிடுங்கள். அந்த மரத்தின் கனிதான், அறிவைக் கொடுக்கும் கனி. அதைச் சாப்பிட்டால் நீங்கள் சாகவே மாட்டீர்கள்" என்கிறான். சாத்தானை நம்பிய ஆதாமும், ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்கிறார்கள். அதை உண்டதால், அறிவையும் பெறுகிறார்கள். தாங்கள் இருவரும் அதுவரை நிர்வாணமாக இருப்பதைக் கூட, கனியை உண்டதால் பெற்ற அறிவின் மூலம்தான் உணர்கிறார்கள். அப்புறம் சாத்தானின் பேச்சைக் கேட்டு கனியை உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து கடவுளால், அவர்கள் விரட்டப்படுவது தனிக் கதை. சாத்தானை வழிபடுபவர்களை 'லூசிபேரியன்' (Luciferien) என்பார்கள். ஏன் தெரியுமா? நாம் சாத்தான் என்று சொல்பவன் உண்மையில் கடவுளுடன் இருந்த ஒரு ஏஞ்சல் (Angel). அவன் பெயர் லூசிபெர் (Lucifer). இவனை வெளிச்சத்தின் கடவுள் என்றும் சொல்வார்கள். அதாவது அவனும் ஒரு கடவுள்தான் என்கிறர்கள். அதனால் இந்த லூசிபெர் என்பவனைக் கடவுளாக வழிபடுகிறார்கள் அந்தச் சிலர். அவர்களைப் பொறுத்தவரை லூசிபெர் நன்மை செய்த ஒருவனே ஒழிய கெட்டவன் கிடையாது. நேர்மாறாக கடவுள்தான், மனிதர்களுக்கு, சாவீர்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பயமுறுத்தி அறிவு கிடைக்காமல் தீமை செய்தவர். இந்த லூசிபெரை வழிபடுபவர்கள்தான் உலகத்திலேயே மிக வலிமையாக இருக்கும் மேசனிக்ஸ். இவர்களின் தொடர்ச்சிதான் நியூ வேர்ல்ட் ஆர்டர் என்னும் அமைப்பு. இதை நம்புவது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். 'அமெரிக்க ஜனாதிபதிகளும், உலகின் மிகமிகச் சக்தி வாய்ந்தவர்களும் அங்கத்தவர்களாக இருக்கும் மேசனிக்ஸ், நாம் சாத்தான் என்று சொல்பவனையா கடவுளாக வணங்குகிறார்கள்?' என்னும் கேள்வி உங்களுக்கு எழுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் இதுதான் மிகவும் ஆச்சரியமான உண்மை. இவர்களே 'புதிய உலகம்' என்பதினூடாக அனைத்து உலக மக்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள். மதங்களாலும், மத உணர்வுகளாலும் ஊறிப் போன நமக்கு, இது வெறுப்பையே தரும். ஆனால் அவர்கள் சொல்வதோ வேறு. சரி, நம்ப முடியவில்லையா? இவர்களால் 'லூசிபெர் ட்ரஸ்ட்' (Lucifer Trust- Lucis Trust) என்ற ஒரு உதவும் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இந்த அமைப்பு ஐ.நா. சபையினாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வளவு பலம். உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி இருக்கிறது இது. உலகின் முதல் பணக்காரராக இருந்த ரொக்கபெல்லர் (Rockefeller), ஹென்றி கிஸ்ஸிஞ்ஞர் (Henry Kissinger) ஆகியோர் கூட இந்த 'ட்ரஸ்ட்டில்' இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சனிக்கிரகத்தை (Saturn) லூசிபெரின் இடமாகக் கருதுகிறார்கள் இவர்கள். Satan-Saturn என்னும் பெயர் ஒற்றுமையையும் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். உலகத்தில் எந்த மதமும், சனியை தீமைக்கான கிரகமாக எடுப்பது இதனால்தான். இந்தச் சனிக்கிரகத்தை ஆறுகோண நட்சத்திரத்தாலும், கண் ஒன்றின் வடிவத்தாலும் ஆதிகால மக்கள் குறித்து வந்திருக்கிறார்கள். அப்படி ஏன் குறித்து வந்தார்கள் என்பதற்கான காரணம் சரியாகப் புரியாவிட்டாலும், சனிக்கிரகம் அதனைச் சுற்றியிருக்கும் வளையத்தினால் கண் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என நம்பப்பட்டது. சனிக்கிரகத்தில் மட்டுமல்ல, மேசனிக்ஸ் என்னும் ஆதிக்க சக்தியினால் இந்தக் கண்ணும், ஆறு கோணமும், பிரமிட்டும் அடையாளங்களாகவும், சின்னங்களாகவும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவை எங்கே யார் யாரால் சின்னங்களாக பாவிக்கப்படுகின்றன என்பதை இங்கு நான் சொல்வது நன்றாக இருக்காது என்பதால், அவற்றை இணையம் மூலம் பார்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கே அளிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பிரபல கம்பெனிகளில் பல இவற்றை அடையாளங்களாக வைத்திருக்கின்றன. மாயன்களின் பிரமிட்டை அடையாளமாக வைத்து மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்த ஐரோப்பியர்கள், மாயன்களின் அறிவின் அடையாளங்கள் அழியவும் காரணமாக இருந்தார்கள் என்பதுதான் கசப்பான வரலாறு. மாயன்களின் அறிவுசார் சாட்சியங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டன. அப்படி அழிந்தவற்றில் எஞ்சியவை மிக மிகச் சொற்பமே! அந்தச் சொற்பத்திலேயே இவ்வளவு ஆச்சரியங்கள் மாயன்கள் மூலம் எமக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அவை அழிக்கப்படாமல் முழுவதும் கிடைத்திருந்தால், என்ன என்ன அதிசயங்கள் எல்லாம் எமக்குக் கிடைத்திருக்குமோ....? மாயன்களின் அறிவின் அடையாளமாக என்னதான் அழிந்தது? அவற்றை யார் அழித்தார்கள்? எஞ்சியவை என்ன? இந்தக் கேள்விகளின் விடைகளுடன் அடுத்த தொடரில் சந்திப்போம். அடுத்த தொடரில் சந்திக்கும் வரை, மேசனிக்ஸின், 'பிரமிட் கண்கள்' உலகெங்கும் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களில் ஊடுருவியிருப்பதைப் படங்கள் மூலமாகப் பாருங்கள்.
Cao Dai Tempel- Vietnam
Kington Parish Church- Jamica
|
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....! அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே! படியுங்கள் பரப்புங்கள்............
Thursday, 29 March 2012
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-16
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment