Friday, 2 March 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-9





2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-9


ராஜ்சிவா
 

இதுவரை உலகில் வாழ்ந்த இனங்களில் அதியுயர் அறிவுடன் வாழ்ந்ததா கருதப்படும்ஒரே இனம் மாயா இனம்தான்அந்த மாயா இனம் பற்றியும்அவர்கள் '2012 இல் உலகம்அழியும்என்று கூறியது பற்றியும் பேச ஆரம்பித்த இந்தத் தொடர்அத தாண்டி வேறுசில இடங்களிலும்விடை தெரியாத சில மர்மங்களிலும் பயணித்ததுஇதுவரைஎம்மால் பார்க்கப்பட்டவை கூட சிறிய அளவுதான்பார்க்க வேண்டியவை இன்னும்நிறையவே உண்டுஆனாலும் நாம் அவற்றையும் ஆராய ஆரம்பித்தால் அது ீண்டுகொண்டே போகும். 2012 மார்கழி வரை கூட நீண்டாலும் ஆச்சரியம் இல்லைஅப்புறம்இந்தத் தொடர் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.
"2012ம் வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி உலகம் அழியும்" என்று மிகப்பெரிய எழுத்தில் எல்லா நாட்டு மக்களும் அலறும்படிக்கு, ஒரு குறித்த நாளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள் மாயா இன மக்கள். இந்தியாவில் இது பற்றி அதிக அளவில் பேசப்படாவிட்டாலும், மேற்குலகம் தினம் தினம் இதைப் பேசிக் கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏதோ ஒன்று, ஒவ்வொரு கணமும் இதை ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காட்டுவாசி மக்களான மாயா இனத்தவர்கள் கணித்த ஒரு 'நாட்காட்டி' (Calendar). ஒரு குறித்த நாளில் ஆரம்பித்த அந்த நாட்காட்டி, 2012ம் ஆண்டு மார்கழி 21ம் திகதியுடன் முடிவடைகிறது. முடிவடைகிறதென்றால், அப்படியே முடிந்து போகிறது. அதற்கு அப்புறம் அதில் எதுவுமே இல்லை.
சரிஅவர்கள் நாட்காட்டி முடிந்தால் நமக்கென்னஅறிவே இல்லாத ாட்டுவாசிகள்உருவாக்கிய ஒரு நாட்காட்டி முடிவடைகிறதுஅவ்வளவுதானேஅதற்கேன் நாம்இப்படிப் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டும்உலகம் அழியும் என்று பலகாலகட்டங்களில்வெவ்வேறு விதமாகப் பலர் சொல்லியிருந்தார்களேஅவற்றைஎல்லாம் நாம் பெரிதாக எடுக்கவில்லையேஅப்புறம் ஏன் மாயன் சொன்னதில் மட்டும்நாம் மிகுந்த நம்பிக்கையை வைக்க வேண்டும்இந்து மதம் கலிகாலத்துடன் உலகம்அழியும் என்கிறதுகிருஸ்தவ மதமும் உலக அழிவை வலியுறுத்துகிறதுதிகம் ஏன்?கடந்த 2000ம் ஆண்டு ூடஉலகம் அழியும் என்று ஒரு மிகப் பெரிய நம்பிக்கையும்இருந்ததுஆனால் எதைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ளவில்லையே!இவற்றிற்கெல்லாம் அதிக அங்கீகாரம் ொடுக்காத நாம்மாயாக்களுக்கு ட்டும் ஏன்கொடுக்க வேண்டும்இப்படிப்பட்ட கேள்விகள் எமக்கு சுலபமாக எழுந்துவிடுகிறதைத்தடுக்க முடியாதல்லவா?
ஆனால்............!
மாயன் சொன்னவற்றை தவறு என்று வெகு சுலபமாக தட்டிக் கழித்துச் ெல்லஅறிவியலாளர்களுக்கே கொஞ்சம் தயக்கம் இருக்கிறதுஇதைத் தீவிரமாகவேஅவர்கள் பார்க்கின்றனர்மாயன் சொன்னவை உண்மையாகலாமோ ன்னும் பயம்அவர்களுக்கும் உண்டுமாயன்களின் சுவடுகளும்அவர்கள் விட்டுச் சென்றசுவடிகளும்தான் இந்தப் பயத்தை அவர்களுக்கு ற்படுத்தக் காரணமாகஅமைந்துவிட்டனமாயன்கள் சொன்னவற்றை அறிவியலுடன் பொருத்திப் பார்க்கும்போதுஏற்பட்ட வியப்புத்தான் இந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்கியதுஇதுவரைஉலகில் இருந்தஇருக்கின்ற எந்த இனத்துக்குமே இல்லாத விசேசங்கள் பல,மாயன்களுக்கு இருந்திருக்கிறதுஅந்த ஆச்சரியப்படும் விசேசத் தன்மைதான்மாயன்களிடம் இப்படி ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மாயன்கள் கணிதம்வானியல்கட்டடக் கலைநகர அமைப்புஅறிவியல்உணவுவேளாண்மைகலைகலாச்சாரம்விளையாட்டு என அனைத்திலும் உச்சத்தில்இருந்திருக்கிறார்கள்இவையெல்லாம் எப்போஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்.அதுதான் எம்மை வியக்க வைக்கிறதுவற்றை எல்லாம் வாய் வார்த்தைகளால்சொன்னால் அதைச் சரியாகப் புரிவது கொஞ்சம் கஷ்டம்தான்அதனால் மாயாஇனத்தவர்கள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாமா.....!
இன்று நாம் பயன்படுத்தும் கணிதம், 'தசம கணிதம்' (Decimal System) என்னும்அடிப்படையைக் கொண்டதுஅதாவது 10 அடியாகக் கொண்டு உருவாக்கிய கணிதம். 1, 10, 100, 1000, 10000...... இப்படிஅத்துடன் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 எனப் பத்து இலக்கங்களையும்எமது கணக்கியலில் நாம் பயன்படுத்துகிறோம்இப்படி 10 அடியாக (base10 or radix10 )மனிதன் கணிக்க ஆரம்பித்ததற்கு ஒரே காரணம் அவனுக்கு கைகளில் 10 விரல்கள்இருந்ததுதான்ஆரம்ப ாலங்களில் கை விரல்களால் கணக்கிட்ட வழக்கம் தொடர,அதுவே கணிதமுமாகியது.
இப்பொழுது இப்படிப் பாருங்கள்.......! மனிதனுக்கு ஒரு கையில் ூன்றே மூன்றுவிரல்கள்தான் இருக்கிறது என வைத்துக் கொண்டால்இரண்டு கைகளிலும்மொத்தமாக அவனுக்கு 6 விரல்கள் இருந்திருக்கும். அப்போதுமனிதனின்கணிதவியல் 6 அடியாகக் கொண்டு இருந்திருக்கும்அதாவது 1, 6, 36, 216, 1296....... எனஇருந்திருக்கும். என்ன புரிகிறதா…? ஆனால் 6 அடியாகக் கொண்டு கணிப்பதை விட, 10 அடியாக கொண்டு கணிப்பதுமிகப்பெரிய எண்ணை அமைப்பதற்கு சுலபமாகஇருக்கும்காரணம் 10 என்பது 6 விடப் பெரியது. 'அடி எண்' (base or radix) பெரிதாகஇருந்தால்அதிக எண்ணிக்கையில் கணிப்பது இலகுவாக இருக்கும்.
ஆனால் கணினியை (Computer) எடுத்துக் கொள்ளுங்கள்கணினிக்கு பத்து விரல்கள்கிடையாதுஅதற்கு ருப்பது இரண்டே இரண்டு விரல்கள்தான்ஆம்கணினிக்கு 1, 0என இரண்டே இரண்டு விரல்கள்தான் உள்ளதுமின்சாரம் சென்றால் 1, மின்சாரம்செல்லாவிட்டால் 0. ஆகையால்கணினி, 2 அடியாகக் கொண்டே கணிக்கிறது.அப்படிக் கணிப்பதை பைனரி சிஸ்டம் (Binary System) என்பார்கள்அது 1, 2, 4, 8, 16..... எனஅமையும்கணிதத்தில் 'அடி எண்அதிகமாக இருந்தால் கணிப்பது சுலபம் என்றேன்அல்லவானால் மனிதனை விடக் கணினி மிக மி வேகமாகக் கணிக்கிறதே!அப்படிக் கணிப்பதற்குக் காரணம் மனிதன் ணிப்பது போல பத்து இலக்கங்கள்இல்லாமல்கணினிக்கு இரண்டே இரண்டு இலக்கங்களை மட்டும்பயன்படுத்தப்படுவதுதான்அந்த இரண்டு லக்கங்களும் 1, 0 ஆகும்.
சரியாகக் கவனியுங்கள்சுலபமாய் எண்களை அமைப்பது என்பது வேறுவேகமாய்க்கணிப்பது என்பது வேறு. இரண்டும் வேறுவேறான விசயங்கள் என்பதைத் தவறவிட்டுவிடாதீர்கள்.
இப்போது மாயன்களிடம் நாம் வரலாம்........!
அதிசயிக்கத்தக்க வகையில் மாயன்கள் 20 அடியாகக் கொண்டு கணித்திருக்கிறார்கள்.கைவிரல்கள் பத்துகால் விரல்கள் பத்து என இது அமைந்திருக்கிறது. 20 அடியாகக்கொள்வதை, 'வைஜெசிமல் சிஸ்டம்' (Vigesimal System) என்பார்கள்அது 1, 20, 400, 8000, 160000..... என அமையும்இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், 20 அடியாகக்கொண்டு கணிப்பதற்கு மாயன்கள் இருபது இலக்கங்களைப் பாவனைக்குவைத்திருக்கவில்லைமூன்றே மூன்று இலக்கங்களைத்தான் ாவித்திருக்கிறார்கள்.அதிக எண்ணிக்கையில் சுலபமாகக் கணிப்பதற்கு 20 இன் அடியும்கணினியைப் ோலவேகமாய்க் கணிப்பதற்கு மூன்று இலக்கங்களும் அவர்களுக்கு உதவியிருக்கிறது.
புள்ளிநேர்கோடுநீள்வட்டம் ன்னும் மூன்றும்தான் அவர்கள் பாவித்த அந்த மூன்றுஇலக்கங்கள்வற்றில் புள்ளி 1ஐயும்நேர்கோடு 5ஐயும்நீள்வட்டம் பூச்சியத்தையும்குறிக்கிறது.
மாயன்கள் பாவித்த எண்களின் அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும்.
புள்ளிகளையும்கோடுகளையும் வைத்துலட்சங்களில் எப்படி மிகப் பெரியஎண்களைக் கணித்தார்கள் என்பதற்கான சில விளக்கப் படங்களையும் உங்களுக்கானபுரிதலுக்காகத் தருகிறேன்.
இதனுடன் இன்னுமொரு விசேசமாகஎண்ணிக்கைகளை இலக்கங்களால்மட்டுமில்லாமல், 'ஹிரொகிளிஃப்' (Hieroglyph) என்னும் சித்திர ழுத்துகள் மூலமும்எழுதியிருந்தார்கள்இந்த வழமை மாயாக்களுக்கும்எகிப்தியர்களுக்கும் தனிச்சிறப்பாக அமைந்திருந்ததுஇந்தச் சித்திர எழுத்துகள்தான் பின்னர் மாயன்களைப் பற்றிநாம் முழுமையாகப் புரிந்து கொள்ள பெரிதாக உதவியது.
இந்த இலக்கங்களின் முறையை வைத்து மாயன்கள் கோடிக்கனக்கானஎண்ணிக்கையை கூட எழுதிவிடுகிறார்கள். சுலபமாக கணித்துவிடுகிறார்கள். நாம்கோடிகள்ஆயிரம் கோடிகள் ன்பவற்றை ஊழல் பற்றிச் சொல்வதற்கு பயன்படுத்தும்போதுமாயன்கள் எதற்கு அவற்றைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா....? வானியலில்.வானத்தில் சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் எப்படி நகர்கிறது என்பதைத்துல்லியமாக கணித்தார்கள் மாயன்கள்அவர்கள் அப்படிக் கணித்ததுதான் கடைசியில்எங்கள் அமைதியையே குலைக்கும், '2012 இல் உலகம் அழியும்என்பதில் கொண்டுவந்து விட்டும் இருக்கிறது.
மாயன்கள் வானவியலில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்லும் நாம் அவர்கள்எதை ஆராய்ந்தார்கள் ன்று தெரிந்தால் நம்பவே முடியாமல் நகர்ந்துவிடுவோம்ஆம்!சூரியனையும்அதன் கோள்களையும் மற்ற இனத்தவர்கள் ஆராய்ந்த போதுமாயன்கள்பால்வெளி மண்டலத்தையே (Milky way) ஆராய்ந்திருக்கிறார்கள்ெறும் கண்களால்சந்திரனைத் தாண்டி அவ்வப்போது செவ்வாய்வியாழன் ஆகியவற்றை மட்டுமேபார்க்கக் கூடிய எமக்குமாயாக்கள் பால்வெளி மண்டலத்தையே ஆராய்ந்தார்கள்என்றால்அதன் சாத்தியங்கள் எது என்பது பற்றி கேள்வி எழுவது நியாயமானஒன்றுதான்.
மாயாக்கள் அப்படி என்னதான் ஆராய்ந்தார்கள்எப்படியெல்லாம் ஆராய்ந்தார்கள்?என்பதை அடுத்த தொடரில் பார்ப்போமா..?

No comments:

Post a Comment