Tuesday 27 September 2011



1. IMEI  தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
2. விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு

3. பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனு
 

IMEI  தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
 
ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள ( 15 இலக்க) எண்ணைத் (International Mobile Equipment Identity)தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.  உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களாமொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும். 
 
 விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு
 
 மேஜை மன் நாற்காலியில் அமர்ந்து நாள் முழுவதும் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் சிகரெட் அல்லது வெற்றிலை பாக்கு புகையிலை உபயோகிப்பதுண்டு அவை புற்றுநோய்க்குப் பாதை போடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. தற்போதைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு என்னவெனில் நாள்முழுவதும் மேஜைகள் நாள்காலில் அமர்ந்து வேலை செய்தாலே நாளடைவில் புற்றுநோய் வந்துவிடுமாம். விஞ்ஞானிகள்தான் இந்த அபாய அறிவிப்பைக் கொடுக்கின்றார்கள்...!
எதை விடுவதுசிகரெட்டை விடுவதாஅல்லது டெஸ்டாப் வேலைகளை விடுவதாஸ்டேட்ச்யூட்டரி வார்னிங் படங்களை எதன்மேல் போடுவது?டொபாக்கோப் பாக்கெட்டுகள் மேல் போடுவதாடெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மேல் போடுவதாவிஞ்ஞானிகளுடன் சேர்ந்து நாமும் கவலைப்படுகிற ஒரு காலகட்டத்தில் அனைவரும் இருக்கின்றோம்.
                    

அதிலும் இந்தக் கவலை மகா அபாயமான கவலையாக இருக்கின்றது. அதுவும் வயிற்றிலே கையை வைக்கும் கவலை .. ஆம்குடல் கேன்ஸர் வருகிறதே இந்த டெஸ்க்டாப் வேலைகளில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு குடல் கேன்ஸர் வருகிறதாம். விஞ்ஞான ஆய்வாளர்கள் இது குறித்த வழங்கும் ஆலோசனைகளைப்--பார்ப்போம்!

stock photo : Happy young man in t-shirt sitting on sofa at home, working on laptop computer, smiling.
பத்து வருடங்களுக்கு அதிகமான காலம் கம்ப்யூட்டர் டெர்மினலில் வேலை செய்கின்றவர்களுக்குக் குடல் கேன்ஸர் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். புகை பிடிப்பவர்களை விட! மேலும் கம்ப்யூட்டர்த் திரைகளைப் பார்த்துக் பார்த்துக் கொண்டு பொழுதுபோக்கும் நேரத்திற்கும்இருதய நலத்திற்கும் நேரடித் தொடர்பும் உள்ளது என்பது ஓர் ஆய்வின் முடிவு. எழுந்து நிற்காமல் நெடுநேரத்திற்கு அப்படியே டெஸ்க்கில் உட்கார்ந்திருப்பது இடுப்பு சுற்றளவைக் கூட்டும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் தேகத்தில் அதிகரிக்கும். ஒரு நிமிடத்திற்கொரு தடவை எழுந்து மாறுதல் வழக்கங்கைளை வேலைகளுக்கு இடையில் மேற்கொள்ளலாம். இப்படி செய்வது மேலே கூறி உடல் நலத்திற்கு ஏற்படும் அபாயத்தைக் தணிக்கும்'' என்பது குயின்லேண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜீனிவீவே ஹீலி என்பவரின் கருதது. 
Souce - Times of India (Love Desk job) know the Risk"  
 
 

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் 
ஜாமின் மனுவைசுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது

மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளபெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனுவைசுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில், 2008ல் குண்டு வெடித்தது. இதில்ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாகபெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரைமகாராஷ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில்ஜாமின் அளிக்கக் கோரிசுப்ரீம் கோர்ட்டில் பிரக்யா சார்பில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால்கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்நேற்று விசாரணைக்கு வந்தது. பிரக்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,""பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவலில் இருந்தபோதுபிரக்யா சிங்உடல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானார். மோசமான வார்த்தைகளாலும் அவரைத் திட்டினர். அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டும்'' என்றார்.இதையடுத்து,நீதிபதிகள்,"இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்லஎனக் கூறிதள்ளுபடி செய்தனர்.
 
 

No comments:

Post a Comment