Thursday, 25 August 2011

"நான் அறிந்த இஸ்லாம்" Speech by Dr..அப்துல்லாஹ்(Dr..பெரியார் தாசன்)

"நான் அறிந்த இஸ்லாம்"
Speech by
Dr..அப்துல்லாஹ்(Dr..பெரியார் தாசன்)

Must watch it. and forward it to ur non muslim brothers..
click the link below


http://www.youtube.com/watch?v=Svi9NbMRREM&feature=related

இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி


இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி



அமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.
இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.
மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.
ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்


ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்
21 Aug 2011 Description: Description: imagesCA7JYJEB
புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.
ஹஸாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹஸாரேவின் போராட்டத்தை கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹஸாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்ப்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
ஹஸாரேவின் போராட்டத்திற்கு சைபர் உலகில் பெருமளவிலான பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ்இ-மெயில்ஃபேஸ்புக்,ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும்மனீஷ் ஸிஸோடியுமாவர்.
தகவல் உரிமைச்சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால்.தற்போது ஹஸாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியை கொலைச் செய்த கொலைக்கார கும்பலான ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பிபஜ்ரங்தள்யுவமோர்ச்சாஏ.பி.வி.பி போன்றவையாகும். இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹஸாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.
யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி)இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹஸாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவதுசங்க்பரிவார அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால் ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹஸாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடுச்செய்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும்ஏ.பி.வி.பியும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.
ஹஸாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிப்பெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹஸாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப்போவதாக பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.
முன்பு கறுப்புப்பணத்திற்கு எதிராக போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது.

காவிகர அரக்கன் மோடிதான் முழு காரணமா குஜராத் மாநில வளர்ச்சிக்கு?


காவிகர அரக்கன் மோடிதான் முழு காரணமா குஜராத் மாநில வளர்ச்சிக்கு?

ஆய் துடைக்க பயன்படும் பத்திரிக்கை ஏடான 'துக்ளக்இவர் முகத்தை அதிக முறை வெளியிடுகிறது

பொய் முகம் கிழிகிறது!

குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.

1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.

மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும்மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில் தான் உள்ளன. இந்தியாவின் சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.

குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

வழக்கமான முன்னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர்.

அதனால்வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதாகக் கூற முடியாது.

மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளாபஞ்சாப்தமிழ் நாடுமகாராஷ்டிராகர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது.

தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகையில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது.

அண்மையில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.

2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர்களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம்மாநிலங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொறுத்த வரைகேரளாமகாராஷ்டிராதமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும்கர்நாடகாவுக்கு இணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில்அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள்ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.

1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது.2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போதுநரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்னஇதற்கு இரண்டு கார ணங்கள் உண்டு.

இங்குள்ள அனைத்து இந்து மதவாதிகளும் நுண்ணறிவு என்பதே அற்றவர்கள்.
மதக் கலவரங்களை முன்னின்று நடத்தும் திறமை படைத்தவர் என்பது மட் டுமே அவர்கள் மோடியைக் கொண்டாடுவதற்கான காரணம்.

விரைவில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியில் இறங்கு முகம் தோன்றவே செய்யும். அதனால் வெகு கைலமாக முன்னணியில் இருந்த குஜராத் பின்நிலையை அடையும்.

ஆனால்ரத்த ஆறை ஓடச் செய்யும் திறமையை விட மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள்கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக்குத் தெரியாது.

குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச்சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார். இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.

தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவனங்களைக் கவர்ந்தது.

தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய்தார்கள்.

ஆனால் அவர் ளுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாதுகாப்பு மட்டும் கொடுக்கவில்லைமூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார்.

இது இதற்கு முன் எப்போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்ஆனால் என்ன - ஒன்றுஅவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோதுபெரியசிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின.

அரசியல் வாதிகளின் ஆதரவும்பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும்.

செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தியாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத்தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.
( 31-1-2009 நாளைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் தீபங்கர் குப்தா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இது.)
SOURCE:viduthalai/20090207/

மோடி நீ மூடுறிதிரு.மோடி அவர்களுக்கு....

இன்று நாக்பூரில் பேசும்போது நவம்பர் 26 தேதி அன்று நடந்த கோரத்தாண்டவ தீவிரவாத கோரதாண்டவம் இந்தியாவின் எதாவது சில குடிமகன்களின் துணை இல்லாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை என்றும்... அவர்களை மத்திய அரசு மூடி மறைக்கும் முயற்சியில் உள்ளது என்று திருவாய் மலர்ந்து உள்ளார்.

இந்த காவிகர கோரத்தாண்டவ அரக்கனுக்கு மீண்டும் ரத்த பசி எடுத்து உள்ளது என்று எண்ணுகிறேன்....

காங்கிரஸ் கட்சியின் வலுவற்ற மற்றும் வக்கற்ற ஆட்சியின் விளைவுதான் இது போல காவிகார கொலை வெறியர்களின் பேச்சுக்கு காரணம் ஆகும்...

இவர்கள் இனியும் திருந்தா விட்டால் கண்டிப்பாக இந்த நாடு அவர்களுக்கு பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை......

ஒரு முறை CNN IBN தொலைக்காட்சியில் திரு.கரன் தப்பார் அவர்களின் ஊசி முனை கேள்விகளுக்கு நிமிடம் கூட பதில் சொல்ல முடியாமல் எழுந்த கேவலமான அற்ப மனிதந்தான் இவர்.

இவருடைய நிர்வாக திறமைக்காக பலர் இவரை பாராட்டுகிறார்கள்...

நான் கேட்பது எல்லாம் இதுதான்.... சக மனிதனை கொன்று அவனை புதைத்த இடத்தில் போதி மரம் வளர்த்தால் அவன் புத்தன் ஆவானா??

அது போலத்தான் இவரும்... கொன்று புதைத்து விட்டு அந்த இடத்தில் போதி மரம் வைப்பவர்...

ஆய் துடைக்க பயன்படும் பத்திரிக்கை ஏடான 'துக்ளக்இவர்முகத்தை அதிக முறை வெளியிடுகிறது எனக்கு ஒரு வகையில் நல்லதாக போயிற்று...

அதில்தான் நாங்கள் எங்கள் வீட்டின் குழந்தையின் ஆய் துடைக்கிறோம்... அதுவும் இவர் முகம் வெளிவரும் பக்கங்களில் ஆய் துடைத்தால் நன்றாக சுத்தம் ஆவதாக கேள்வி....

அதனால்தான் சொல்லுகிறேன்.... மோடி நீ மூடுறி

நன்றி தமிழ் உதயன்

http://tamiludhayan.blogspot.com/2009/02/blog-post_6972.html

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 6)

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 6)

தொடர் ..... 6



அடுத்தநாள் காலையில் எழுந்து தொழுதுவிட்டு இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு புறப்பட்டோம்.

எங்களைப் போலவே, நிகழ்ச்சிக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகைதந்த பேராளர்கள் மாடியில் இருந்த அறைகளில் தங்கியிருந்தனர்.



இரண்டாம் நாள் நிகழ்ச்சியும் கூட காவல்நிலையத்தில் நடைபெறும் விசாரணை மரணங்கள், மனிதஉரிமை மீறல்கள் குறித்த நிகழ்வுகளாகவே இருந்தது.



மிக முக்கியமாக மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் கற்பழிப்புகள் மற்றும் மனிதஉரிமை மீறல்களை கண்டித்து 10வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளாவை ஆதரித்து மணிப்பூரிலிருந்து டெல்லிவரை 15நாள் யாத்திரை நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துக் கொள்ளக் கூடியவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வுகளுக்கிடையில் உத்தம்சிங் என்ற இளம்பெண் பேசினார். தோடா நகரிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர்.



காஷ்மீரில் தீவிரவாதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் இரண்டு மணிநேரம் எனது கிராமத்திலிருந்து நடந்து வந்தேன். வழியெங்கும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை என்று பேசியதும் அரங்கமே கைதட்டலில் ஆழ்ந்தது.

காஷ்மீர் பிரச்சனைகளை முன்வைத்து ஏராளமான பாடல்களை பலரும் மேடையில் ஏறி பாடினர். அவை ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்வமாய் அரங்கத்தை உசுப்பியது.



சுட்டுக்கொல்லப்பட்ட தன் அப்பாவி சகோதரனை, கற்பழிக்கப்பட்ட தன் தாயை, முடமாக்கப்பட்ட தன் நண்பனை பற்றிய கொடும் துயரங்கள் அவை.



இந்தியா முழுவதிலிமிருந்தும் வந்திருந்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மத்தியில் அவை புதிய எண்ண அலைகளை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது.



அன்று மாலை சிறப்பு விருந்தினராக டோடா நகரின் டெபுடி கமிஷனர் வந்திருந்தார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அனைவருக்கும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.



அத்தோடு இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. அதன் பிறகு இரவு உணவுக்கு பிறகு டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஒரு குறும்படம் ஒளிபரப்பானது.



உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் பகுதியில் ஒரு முஸ்லிம் முதியவரைப் பற்றிய படம் அது. ஐந்துவேளை தொழுகை நடத்தும் அப்பெரியவர் பைசாபாத் மற்றும் சர்ச்சைக்குரிய அயோத்தி பகுதிகளில் அனாதைப் பிணங்களை கண்டெழுத்து தனது தட்டு ரிக்ஷாவில் அவற்றை எடுத்து சென்று அடக்கம் செய்து வருகிறார்.



முஸ்லிம் பிணமாக இருந்தால், அதை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்கிறார். இந்து பிணமாக இருந்தால் அதை எரியூட்டுகிறார். சாதாரண சைக்கிள் கடை வைத்திருக்கும் அந்த முதியவரின் சமூகசேவை மனிதாபிமானத்தை நினைவூட்டுகிறது. அந்த அரைமணி நேர குறும்படம் மாபெரும் கருத்தியலை முன் வைத்தது.



நிகழ்ச்சியின் இறுதி நாளன்று பரபரப்பாக இருந்தது. நிகழ்ச்சிகளை மதியம் 1 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டுமென்ற பரபரப்பு ஒருபுறம். மறுபுறம் வருகையாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கு ஜம்மு சென்றால்தான் ரயிலோ, வாகனங்களோ கிடைக்கும்.



ஏறத்தாழ 6 மணி நேரமாகும். எனவே ஊருக்கு திரும்பும் பரபரப்பும் நிலவியது. விறுவிறுப்பாக தொடங்கிய நிகழ்ச்சிகளில் பல்வேறு மாநில பிரதிநிதிகளும் உரையாற்றினர். எங்களில் இருவருக்கு ஆரம்பத்தில் பேச அனுமதி தந்திருந்தார்கள். நான் ஆங்கிலத்திலும், ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்தியிலும் உரையாற்றுவோம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவித்து இருந்தோம். கடைசி நாள் அன்று நேரப்பற்றாக்குறையினால் ஒரு அமைப்பிற்கு ஒருவர் மட்டுமே பேசுங்கள் என்றனர். காரணம் முதல் நாள் வழக்கறிஞர் ஜைனுல்ஆபிதீன் மாணவரனி சார்பில் பேசி விட்டார். மேலும் இருவருக்கு வாய்ப்பு தருவது சிரமம் என்றனர். அதனால் மூத்த நிர்வாகி என்ற அடிப்படையில் என் உரையையும் சேர்த்து ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்தியில் பேசினார். அவரது இந்தி மொழியின் ஆளுமையை கண்டு நாங்கள் வியந்தோம்.



நமது இயக்கத்தை பொறுத்த வரை வடஇந்தியாவில் முழக்கம் எழுப்ப பலரும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.



தனது உரையில் காஷ்மீரில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து கவலைப்பட்டவர், அங்கு அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை என்றும் குறிப்பிட்டார்.



கடைசியாக ஏற்புரை நிகழத்தியவர் சகோதரி மணிமாலா. அவர்தான் Gandhi Smriti & Darshan Samiti அமைப்பின் அகில இந்திய இயக்குனர் இவர்தான்.



காஷ்மீர் மக்களுக்கு, ஆறுதலாக பேசியஅவர், அவர்களின் உயர்ந்த பண்புகளையும் பாராட்டி பேசினார். காந்தியின் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அடுத்ததாக ஸ்ரீநகரில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.



நிகழ்ச்சியின் முடிவாக "நமது மண்ணை நேசிப்போம் ஒருநாள் வெற்றி பெறுவோம்" என்ற கருத்து கொண்ட ஒரு காந்திய பாடலை ஒரு முஸ்லிம் முதியவர் இந்தியில் பாட, அவரோடு ஏழெட்டுப் பேர் சேர்ந்து "கோரஸாக" பாடினர்.



பிறகு அனைவரையும் ஒருவருக்கொருவர் கைக்கொடுத்துக் கொண்டு பிரிவுக்கு தயாராகினர்.

நாங்கள் மேடைக்கு சென்று சகோதரி மணி மாலாவிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். தமுமுகவின் பணிகளை சுருக்கமாக விவரித்ததும், உடனே தனது முகவரி அட்டையை கொடுத்து தொடர்புக் கொள்ளுமாறு கூறினார்.



மதியம் சாப்பிட்டுவிட்டு ஸ்ரீநகர் செல்ல தயாரானோம். ஒரு டெம்போ வேனை 4200 ரூபாய்க்கு வாடகைக்கு பேசினோம். 3.30 மணிக்கு புறப்பட்டோம். அமைதியும், அழகும் சூழ்ந்த சினாப் பள்ளத்தாக்குதலிருந்து பிரிய மனமின்றி புறப்பட்டோம்.



இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்....





இந்தியில் வெளுத்து வாங்கும் ஓ.யூ.ஆர்...

சகோதரி மணிமலாவுடன்...

அழகிய தோடாவிலிருந்து விடைபெறுகிறோம்

மத்தியபிரதேச மாநிலத்தில் சங்க்பரிவார அமைப்புகளின் 3 நாள் கூட்டம்: முக்கிய முடிவுகள்



மத்தியபிரதேச மாநிலத்தில் சங்க்பரிவார அமைப்புகளின் 3 நாள் கூட்டம்: முக்கிய முடிவுகள்


புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் 3 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க்சாலக் மோகன் பாகவத் மற்றும் பா.ஜ.க, ஏ.பி.வி.பி, பி.எம்.எஸ், வி.ஹெச்.பி ஆகிய அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக டெல்லிக்கு போதுமான அளவு சுயம் சேவகர்களை அனுப்ப தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை அரசு எதிர்ப்பு போராட்டமாக மாற்றி அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெறுவதற்கான தந்திரங்களைக் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் அதனை மூடிமறைப்பதற்கான தந்திரங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சங்க்பரிவாரத்தின் தீவிரவாத முகத்தை சர்ச்சையாக்க மத்திய அரசு முயலும் வேளையில் அன்னா ஹஸாரேவின் போராட்டம் நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் என சங்க்பரிவார தலைமை கருதுகிறது.
அன்னா ஹஸாரேவின் போராட்டம் தொடர்பான விஷயங்களைக் குறித்து விவாதித்ததாகவும், போராட்டத்திற்கு தாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுகிறார்.
உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிறுத்தி ராமர்கோயில் விவகாரத்தை மீண்டும் தீவிரப்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூடுதல் டாக்டர்கள், சார்ட்டட் அக்கவுண்டுகள் உள்ளிட்டோரை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக்கவும், முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மாநிலங்களில் பா.ஜ.கவின் செயல்பாடுகளை கண்காணித்துவரும் நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் காரியவாஹ்களின் செயல்பாடுகளை கூட்டம் மீளாய்வு செய்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Monday, 22 August 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 5)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 5) 13.08.2011

எம். தமிமுன் அன்சாரி 
 தொடர் ..... 5

நடுங்கும் குளிர் இல்லை. அந்த சினாப் பள்ளத்தாக்கு இரவு நேர அமைதியுடன், இதமாக இருந்தது. நாங்கள் விடுதிக்கு வந்த கொஞ்ச நேரத்தில், அரசுசாரா அமைப்பைச் சேர்ந்தவர்களும், சில மனிதஉரிமை ஆர்வலர்களும் எங்களை சந்தித்தனர்.

காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்கள், மனிதஉரிமை மீறல்கள், மக்களின் வாழ்க்கை, அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள், ஹூரியத் அமைப்பின் செயல்பாடுகள் என பல விஷயங்களைப் பேசினோம்.

இறுதியாக காஷ்மீரின் உண்மை வரலாறு குறித்தும், இந்திய - பாகிஸ்தான் நாடுகளின் அரசியல் சதுரங்களத்தில் காஷ்மீர் பகடைக்காயாக பயன்படுத்துவது குறித்தும் உணர்வுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பேசினார்கள்.

குறிப்பாக இந்திய ராணுவத்தின் மீது கடும் கோபத்தையும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மீதான வெறுப்பையும் அவர்கள் வெளிக்காட்டினார்கள்.

எங்களை இந்தியர்களாகவும், தங்களை காஷ்மீரிகளாகவும் கருதியப்படிதான் அவர்களது உரையாடல் இருந்தது. ஜம்மு - காஷ்மீரில் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி ஊழலில் திளைப்பதாகவும், உமர் அப்துல்லாவுக்கு நிர்வாகத் திறன் இல்லை என்றும் காஷ்மீரிகள் கருதுவதாக கூறினார்கள்.

அவர்கள் தொடர்ந்து சொன்ன செய்திகள் வாய்விட்டு கதறிஅழ செய்யக்கூடியவை. தமிழ் ஈழத்தில் சிங்கள ராணுவமும், பங்களாதேசில் பாகிஸ்தான் ராணுவமும் செய்திட்ட அட்டூழியங்களுக்கு நிகரானவை. அவர்கள் சொன்ன செய்திகளை அதே வார்த்தைகளில் உங்களுக்கு சொல்கிறோம். அது......,,,,

திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்? அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.

ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?

ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டே சென்றார்கள். நாங்களும் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தோம்.

இரவு மணி 12 மணிவரை பேசிவிட்டு அவர்கள் விடை பெற்றார்கள். எங்களுக்கு வேதனையாக இருந்தது. நியாயங்களும், உரிமைகளும் மறுக்கப்பட்டு, உண்மை வரலாறு புறக்கணிக்கப்பட்டு காஷ்மீர் குறித்து தவறான வரலாறு பரப்பப்படுவதை எண்ணி வருந்தினோம். எங்களோடு வந்த வழக்கறிஞர் வாசுதேவனும், புகைப்பட நிபுணர் சந்திரனும் அதே உணர்வில் பேசினர்.

அந்த இரவு 1 மணியை தாண்டியும் துக்கம் தொடர்ந்தது... தூக்கம் வராமல்! கண்ணீர் பெருகியது... காஷ்மீரை நினைத்து!

இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்....


ஹிஸ்ஃபுல் முஜாஹிதீன் ஆயுத குழுவில் இருந்து வெளியாகி ஜனநாயக பாதைக்கு திரும்பிய ஒரு பதான் காஷ்மீர் குறித்து பேசிய போது...
வட இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ஹிந்து சமுதாய மனிதஉரிமையாளர்களுடன்...
இரவு நேரத்தில் காஷ்மீரில் கண்ணீர் கதைகளை கேட்ட படியே...

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 4)


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 4)

முகநூல் தொடர் ..... 4



சினாப் நதி துள்ளிக்குதித்தோடும் அமைதியான தோடா நகர் எங்களுக்கு நல்ல மனநிலையைக் கொடுத்தது. அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், ஒரு சின்ன பேருந்துநிலையம், அதிகபட்சம் 100கடைகள். இதுதான் தோடா நகரம். இது ஒரு மாவட்டத் தலைநகரம் என்பதை நம்ப முடியவில்லை. பஜாரில் ஒரு ஜாமியா மஸ்ஜித் இருந்தது. மேலும் இரு மஸ்ஜிதுகளும், கோயில்களும் இருந்தன.



முதல் பாதி நாள் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போய்விட்டது. மதியத்திலிருந்து நிகழ்ச்சியில் இணைந்து கொண்டோம். முதல்நாள் கருத்தரங்கில் காஷ்மீரிகளின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. ராணுவத்தாலும், உளவு அமைப்புகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் காயங்களை வார்த்தைகளாக கொட்டினார்கள்.



நாடெங்கிலிருந்தும் வந்திருந்த அரசு சாரா அமைப்பினர் (NGO) தங்களது அறிக்கைகளையும், செயல்பாடுகளையும் சமர்ப்பித்தனர். சிலர் தனியாகவும், குழுக்களாகவும் வந்து உணர்வுப்பூர்வமான பாடல்களைப் பாடினர்.



காஷ்மீரிகள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கணவனை இழந்த மனைவி, தந்தையை பறிகொடுத்த பிள்ளைகள், காணாமல் போன பிள்ளைகளுக்காக காத்திருக்கும் பெற்றோர்கள் என அரசு படைகளால் இன்னல்களுக்கு ஆளாகியோரின் துயரங்கள் கண்ணீரை வரவழைத்தது. அங்கு ஆங்கிலம், இந்தி, உருது, காஷ்மீரி மொழிகளில் ஒவ்வொருவரும் நெருப்பை கக்கினார்கள்.



எனக்கும் ஹாருனுக்கும் ஆங்கில உரைகள் மட்டுமே புரிந்தது. எங்களுக்கு இந்தியும், உருதும் தெரியாதது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை வடஇந்தியாவுக்கு வரும் போதெல்லாம் உணர்ந்து இருக்கிறோம். அது இப்போதும் உணர வைத்தது. நல்ல வேளையாக அண்ணன் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ராணுவத்தில் பணியாற்றியதால் அவர் இந்தி உரைகளை எங்களுக்கு விளக்கி கூறினார். அண்ணன் ஜெ.எஸ்.ரிஃபாயி அவர்கள் பெங்களூரில் பட்டம் பெற்றவர் என்பதால் உருது உரைகளை விளக்கி கூறினார். நாங்கள் ஆங்கில உரைகளை அவர்களுக்கு விளக்கினோம். அந்த கருத்தரங்கமே எங்களுக்குள் ஒரு மொழிபெயர்ப்பு மையமாக மாறியது.



இறுதி அமர்வுக்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஹாஜத் ஹபிபுல்லாஹ் டெல்லியிலிருந்து வந்திருந்தார். இது மத்திய அமைச்சருக்கு இணையான ஒரு இலாகா. சிறுபான்மையினருக்கு உரிமைகளை சொல்ல ஒரு வழித்தடம். அந்த வகையில் மத்திய அமைச்சருக்கு இணையானவராக வாஹாஜத் ஹபிபுல்லா செயல் படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





நிறைய பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர்.

அப்போது எங்களது தமிழக ஒருங்கிணைப்பாளரான டாக்டர்.அஜ்மல் எங்களிடம் வந்து, சிறுபான்மை தேசிய கமிஷன் தலைவர் வஹாஜத் ஹபிபுல்லாவுடன் ஒரு தனி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



நானும், ஒ.யு.ஆர், ஜெ.எஸ்.ஆர், ஹாரூண் நால்வரும் அவருடன் காரில் புறப்பட்டோம். அது ஒரு அரசு விருந்தினர் மாளிகை.

நாங்கள் சென்றதும் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். தமுமுக தமிழகத்தில் ஆற்றிவரும் பணிகளையும், மனிதநேய மக்கள் கட்சியின் பணிகளையும் அவரிடம் விளக்கினோம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 4, 5 சகோதரர்கள் அங்கு இருந்தனர். அவர்களும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.



பிறகு நான் சச்சார் கமிட்டி பரிந்துரைகள் மீது என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரிடம் கேட்டேன். அதில் உள்ள 15 அம்ச திட்டங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அமல்படுத்தப்படுவதாகக் கூறினார்.



நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அப்பாவி முஸ்லிம்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் வழக்கு நடத்துவதற்கு கூட பணமில்லை. இவர்களின் விடுதலைக்காக உங்கள் கமிஷன் என்ன செய்யப் போகிறது? என்றோம்.

அதற்கு அவர், ஹைதராபாத் குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக கூறினார். ஒவ்வொன்றாகச் செய்வோம் என்றார்.

பிறகு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய அரசின் பதவிகளில் 15% இடஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதே. அதற்காக என்ன முயற்சி நடந்துள்ளது? என்றேன்.



இடஒதுக்கீடு என்பது பிரச்சனைக்கு விடையாக இருக்க முடியாது என்றார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சமூகத்தில் ஒரு சாரரும், இரண்டு மூன்று தலைமுறையினரும் மட்டுமே அதனால் பயனடைவார்கள் என்றார்.



நாங்கள் தென் இந்தியாவில் இதனால் பலன் பெற்றிருக்கிறோமே என்றோம். ஏற்கனவே அங்கே முன்னேற்றம் இருக்கிறது என்று பூசி மெழுகினார்.

இவர் ஒரு 'காங்கிரஸ்'காரர் என்பதும், அதற்கு ஏற்ப பேசுகிறார் என்பதும் புரிந்தது. சக்திவாய்ந்த பதவிகளில் டெல்லிக்கு அருகில் இருக்கின்ற காரணத்தால் வட முஸ்லிம் தலைவர்கள் உட்கார்ந்து கொள்கிறார்கள்.



இவர்களிடம் மார்க்கமும் இல்லை. சமுதாய உணர்வும் இல்லை, தொலைநோக்குப் பார்வையும் இல்லை. ஏதாவது தங்களுக்கு பதவி கிடைக்க வேண்டும். கிடைத்த பதவிகளில் நீடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். இவரை சந்தித்த பிறகு எங்களுக்கு அப்படித்தான் தோன்றியது.

போராட்ட உணர்வுமிக்க சமுதாய பிரதிநிதிகள் தென்னிந்தியாவில் தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் டெல்லி அரசியிலிருந்து வெகுதூரம் இருக்கிறார்கள். அதுவே சமுதாயத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.



அவரை சந்தித்துவிட்டு, வெளியே வந்தோம் உள்ளே அமர்ந்திருந்த காஷ்மீரை சேர்ந்த இருவர் வெளியே வந்து தங்களை அறிமுகப்படுத்தி சாலையில் நின்றவாரே பேசத் தொடங்கினர்.

ஒருவர்பெயர் ராஜாமுசாபர், இன்னொருவர் பெயர் ஷாநவாஸ். இருவர் காஷ்மீரில் ஊழலுக்கு எதிராகப் போராடும் என்.ஜி.ஒ. அமைப்பை நடத்துபவர்களாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜம்மு&காஷ்மீர் ஆர்.டி.ஐ. மூவ்மென்ட் என்ற பெயரில் என்.ஜி.ஒ அமைப்பை நடத்துவதாகச் சொன்னார்கள். பிறகு நாங்கள் எங்கள் விடுதிக்கு வந்துவிட்டோம். அன்று இரவு எங்களுக்கு உறங்கியும், உறங்காத இரவாக கழிந்தது. காரணம் எங்களை வந்து சந்தித்தவர்கள் சொன்ன செய்திகள்தான்...



இன்ஷா அல்லாஹ் பயணம் தொடரும்....



Friday, 19 August 2011

israel or Palestine on Google Map Voting


israel or Palestine on Google Map Voting

Google is having a vote on whether to name israel or Palestine on its map on Google earth. Please vote for Palestine and urge others to do the same...DO IT NOW! All u have to do is click the link and click Palestine. Pass this on to as many people as possible- have this on your fb statusand tweet it if on Twitter
http://www.israel-vs-palestine.com/PS...

Haram expansion to accommodate 1.2m more worshippers



Haram expansion to accommodate 1.2m more worshippers



A general view of the Grand Mosque in Makkah.
By P.K. ABDUL GHAFOUR | ARAB NEWS
Published: Aug 16, 2011 23:10 Updated: Aug 16, 2011 23:18
JEDDAH: Custodian of the Two Holy Mosques King Abdullah will lay the foundation stone for a new expansion of the Grand Mosque in Makkah on Friday, it was announced on Tuesday.
The new project, covering 400,000 square meters, will create prayer space for an additional 1.2 million worshippers.
“The new project, named the King Abdullah Expansion, will be carried out using the most advanced mechanical and electrical systems,” said Muhammad Al-Khozaim, vice president of the Presidency for the Two Holy Mosques Affairs. “Once completed, the new facility will be able to accommodate nearly 1.2 million worshippers,” he said.
The new expansion will also have basic facilities including modern garbage disposal systems and security monitoring systems. Sunshades will also be established on the northern courtyards of the mosque. The new annex will be linked with the existing mosque and masaa with a series of bridges. It will also provided with air conditioning systems and electric stairs.
Al-Khozaim disclosed plans to expand the mataf (the circumambulation areas around the Holy Kaaba) and provide air-conditioning for all parts of the Grand Mosque, adding that the two projects would be carried out shortly along with the new Haram expansion project.
Speaking about other projects implemented at the directives of King Abdullah, he said the newly expanded masaa (the running course between Safa and Marwa) could now accommodate 118,000 pilgrims per hour instead of 44,000.
He described the King Abdul Aziz Endowment Towers as one of the largest real estate projects in Makkah. It comprises six residential towers and a five-star hotel. The frontal towers are 28 stories high while the rear ones are 35 stories. Side towers are 45 stories while the hotel tower is 60 stories. The entire complex with 11,000 rooms and suites can accommodate 35,000 pilgrims.
Al-Khozaim commended the king for taking the initiative to implement a number of vital projects for the welfare of pilgrims. They include the Mashair Railway connecting Mina, Arafat and Muzdalifah, the Haramain Railway to link the two holy cities of Makkah and Madinah, the Jamrat bridge complex, the Central Zone Development project, the King Abdul Aziz Road, new ring roads in addition to flood drainage projects in the holy sites.
The Jamrat Bridge project, which was carried out at a cost of SR4.5 billion, was instrumental in preventing stampedes during the stoning ritual. It is designed to accommodate 5 million pilgrims. The Mashair Railway will become fully operational before the upcoming Haj in November. The metro service will operate 17 trains with 12 coaches in each train. A train will carry 3,000 pilgrims.

சுவனத்தின் மூன்று தளங்கள்


சுவனத்தின் மூன்று தளங்கள்

நபி(ஸல்) கூறினார்கள்: தான் உண்மை கூறுவதாக இருந்தபோதிலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தமாஷானாலும் (காமெடி) பொய்யை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் நடுப்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அழகான குணமுடையவருக்க சுவனத்தின் மேல்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
(ஆபூதாவூது : அபூ உமாமா அல்பாஹிலி (ரலி)  630
(நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்)

Thursday, 18 August 2011

Somalia famine has killed '29,000 children' Claim by US officials follows declaration of three new famine zones by UN and warning that more areas are vulnerable.


US officials say that the famine in Somalia has killed more than 29,000 children in the last 90 days.
Separately, the UN has declared that three new regions in Somalia are famine zones, making a total of five regions affected by famine thus far in the Horn of Africa country. The UN had said last month two regions were suffering from famine.
The Food and Agriculture Organisation (FAO), the UN's food arm, has said that famine is likely to spread across all regions of Somalia's south in the next four to six weeks.
Famine, as defined by the UN, refers to situations when at least 20 per cent of households face food shortages so severe that they are unable to cope with it and more than two people out of 10 000 people die daily.
Additionally, famine conditions are likely to persist until December, FAO said. Across Somalia, 3.7 million people are in crisis out of a population of 7.5 million, the UN says.
Al Jazeera's Peter Greste said that it was not just about getting food to Somalia but rather about getting nutritious food to the people suffering from famine.
"There is a real nutrition problem. They can get basic maize meal in here but that's not enough. There has to be nutritious food and that's simply not arriving," said Greste.
In need of assistance
The UN says 3.2 million are in need of immediate, life-saving assistance.
About 450,000 people live in Somalia's famine zones, according to Grainne Moloney, chief technical adviser for the UN's Food Security and Nutrition Analysis Unit at FAO-Somalia.
Somalia is suffering its worst drought in 60 years. Getting aid to the country has been difficult because al-Shabab fighters control much of the country's most desperate areas.

Mapping the spread of the Somalia famine
"Despite increased attention in recent weeks, current humanitarian response remains inadequate, due in part to ongoing access restrictions and difficulties in scaling up emergency assistance programmes, as well as funding gaps," the UN's Food Security and Nutrition Analysis Unit said.
Speaking on Thursday, Jacob Kellenberger, the president of the International Committee of the Red Cross (ICRC), said: "Somalia is what you could call a typical ICRC context.
"It is an armed conflict, compounded by a very serious drought. It is an area where people are already weakened since long years."
The ICRC has called upon donor nations to double its Somalia budget so it could help feed the more than a million people hit by famine in al-Shabab-controlled areas.
"Given the very serious, extremely worrying situation in the area, we came to the conclusion we had to increase very substantially our budget, which means our activities," Kellenberger said.
Earlier on Wednesday, an African Union official said a donor conference to raise money for Somalia famine victims had been postponed for at least two weeks.
Conference postponed
A conference had been scheduled for August 9 to bring together African leaders and international organisations to address the drought crisis.
However, Valerie Vencatachellum, a senior AU policy adviser, said the conference had not been scheduled with enough advance notice.
Vencatachellum said it would be delayed at least two weeks so heads of state could attend.
Wafula Wamunyinyi, the deputy special representative of the chairperson of the African Union Commission for Somalia's (AMISOM), told Greste: "The African Union has not taken long. It has ... taken measures to ensure there is delivery of aid to the people who are displaced."
He said: "We're trying as far as possible to ensure that the delivery [of aid] reaches the people; that Mogadishu is kept secure; it is made conducive for the delivery [of aid] by the international actors to reach the people."
Referring to al-Shabab's presence, Wamunyinyi said: "If [Mogadishu] is not made secure, even the delivery of humanitarian aid will not be possible."
The UN said the prevalence of acute malnutrition and rates of crude mortality surpassed the famine thresholds in areas of Middle Shabelle, the Afgoye corridor refugee settlement and internally displaced communities in Mogadishu.
The Horn of Africa is suffering a devastating drought that has been compounded by conflict in Somalia, bad governance and rising food prices.
Tens of thousands of people have already died, and tens of thousands more have fled Somalia in hoping to find food aid at refugee camps in Kenya and Ethiopia.

மோடியின் பையிலிருந்து பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது!!


மோடியின் பையிலிருந்து பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது!!
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
2011 ஆகஸ்ட் மாதம் இரணடாம் வாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மாக்கண்டேய கட்சு  அடங்கிய பெஞ்ச் ஒரு மாநில காவல் துறையால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் கருத்துச் கொல்லும் போது, “போலி என்கவுண்டர் மூலம் அப்பாவி உயிர்களை பறித்த காவல்துறையினரை தூக்கில் போட வேண்டுமென்று கண்டனம்’ தெரிவித்தது.
 12.8.2011 இரவு பிபிசி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது பாகிஸ்தானில் ஒரு போலி என்கவுண்டர் வழக்கில் ஒரு அப்பாவி 18 வயதான இளைஞர் சந்தேகத்தின் பேரால் பிடித்து ராணுவத்தினரால் ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்படுவதும் அதனை வீடியோவில் பார்த்த கராச்சி ஐகோர்ட்  சூயோமோட்டோ( தன்னிச்சையான) வழக்காக எடுத்துக் கொண்டு அந்த ஏழு ராணுவ வீரர்களுக்கும் கடும் தண்டனை கொடுத்ததாகவும், அந்தத் தண்டனையினை மேல் முறையீடு செய்த ராணுவத்தினருக்கு அங்குள்ள சுப்ரீம் கோர்ட் அந்தத்தண்டனையினை உறுதி செய்ததாகவும் காட்டினார்கள். என்ன தண்டனை எனக் கேட்கிறீர்களா? அந்த இளைஞனைச் சுட்ட ராணவ வீரர் ஷாஹித் ஜாபருக்கு மரண தண்டனையும் அதற்கு துணையாக இருந்த அறுவருக்கு ஆயுள் தண்டனையும் சம்பவம் நடந்து மூன்று மாதத்திற்குள் வழங்கியதாக பி.பி.சி ஒளி பரப்பானது.
 
 ஆனால் 2002ஆம்; ஆண்டு பிப்ரவரி 27ந்தேதி குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்பு போலி என்கவுண்டர் என்ற பெயரில் பல முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட காவல் துறையினருக்கும், காவி அரசியல் வாதிகளுக்கும் இன்னமும் தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக அந்த போலி என்கவுண்டர்களை வெளிக்கொண்டு வந்த உயர் காவல் துறை அதிகாரிகள் தான் அங்குள்ள அரசால் பந்தாடப்பட்டுள்ளனர் என்பது சமீப கால செய்திகள் வெளிக்காட்டுகின்றன.
 குஜராத்தில் முஸ்லிம் இனக்கொலை நடந்த சமயத்தில் உளவுப்படை தலைவராக இருந்த ஸ்ரீகுமார் என்ற நேர்மையான அதிகாரி விசாரணைக்கமிஷனிடம் சமர்ப்பித்த தனது அறிக்கையில் இனக் கொலைக்கு குஜராத் அரசம், மற்றும் காவியுடை தலைவர்கள் தான்; காரணம் என்றார். அதனால் அவர் பதவி பணி நீக்கம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய டி.ஜி.பி என்ற உயர் பதவியும் மறுக்கப்பட்டது. அதன் பின்பு அவர் நீதி மன்றத்தினை நாடி தன் உயர் பதவியினை பெற்று ஓய்வும் பெற்றதோடு மட்டுமல்லாமல் மனித வேட்டைக்கு காரணமானவர்கள் அத்தனை பேருக்கும் தண்டனை பெற்றுத்தராமல் குஜராத்தினை விட்டு போக மாட்டேன் என அங்கே தங்கியுள்ளார் என்றால் அவர் மனத் தைரியம் பாருங்களேன்..
 உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட திரு. ஆர்.கே. ராகவன் தலைமையிலாள எஸ்.ஐ.டி என்ற விசாரணைக் குழு உச்ச நீதி மன்றத்திற்க சமர்ப்பித்த 600 பக்க அறிக்கையில்pல் மோடி அரசு சமபவத்தினை மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும், அந்த அரசு இரண்டு மந்திரிகளான அசோக் பட் மற்றும் ஜடேஜா ஆகிபோர்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்க அனுப்பி முஸ்லிம்களின் அபாயக்குரலினை கண்டு கொள்ள வேண்டாமென்று கூறியதாகவும் 2011 பிப்ரவரி மாதம் 4ந்தேதியிட்ட ஹிந்து ஆங்கில பத்திரிக்கை சொல்கிறது.
கோத்ரா ரயில் சம்பவத்திற்கு பின்பு மோடிக்கு முஸ்லிம் தீவிரவாதிகளால் ஆபத்து என்று பொய்யான தகவலை சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர் சொச்ராபுதீன், அவனுடைய மனைவி கவுசர் பீவி மற்றும் அவனுடைய நண்பனும் போலி என்கவுண்டரின் ஒரே சாட்சியுமான பிரஜாபதியம் போலி என்கவுண்டரால்  கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று அதன் உத்திரவு மூலம் எஸ்.ஐ.டி என்ற சிறப்ப காவல் படை அமைக்கப்பட்டது. அதன் பலனாக முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டி.ஐ.ஜி வன்ஸாமா, ஐ.பீ.எஸ் அதிகாரிகளான சுடாமா மற்றும் விபுல் அகர்வால,; இன்ஸ்பெக்டர் ஆஷிஸ் பான்டியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  ஆனால் இன்னும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
 கோத்ரா ரயில் விபத்தினை விசாரிக்கள நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டது, அதன் பின்பு நடந்த சம்பவங்களை விசாரிக்க பானர்ஜி கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த வழக்குகள் உச்ச நீதி மன்றம் சென்றன. உச்ச நீதி மன்றமும் கோத்ரா ரயில் விபத்து அதன் பின்பு நடந்த கொலை, கொள்னை, தீ வைப்பு, சூறையாடல் போன்றவைகளை விசாரிக்க எஸ்.ஐ.டி என்ற சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டது. அதில் அப்போதிருந்த உள் துறை அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கருதி அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
 சமீப கால 2ஜி வழக்கு, காமன் வெல்த் கேம்ஸ், லோக் அயுக்தா வரைவுச் சட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசிற்கு பாராளுமன்றத்திலும் மற்றும் வெளியேயும் உள்ள நெருக்கடியினை சாதகமாமக பயன் படுத்தி குஜராத் அரசுக்கு எதிராக சாட்சி சொன்ன ஐ.பீ.எஸ் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியிருக்கிறது. அந்த மாநில அரசு;
அவ்வாறு நடவடிக்கைக்குள்ளான அதிகாரிகளும் அதன் பின்னணியும்:
1) திரு ராகுல் சர்மா ஐ.பீ.எஸ்: இவர் கோத்ரா ரயில் விபத்து நடந்த பின்பு காவியுடையினர் நரோடா காம், நரோடா பாட்டியா மற்றும் குல்பர்கா சொஸைட்டி பகுதியில் நடத்திய வேட்டையின் போது அஹமதாபாத் நகரின் உள்ள போலீஸ் கட்டுப்பாடு அறையில் டி.சி.பியாக பணியாற்றியவர். சுhதாரணமாக கட்டுப்பாடு அறையில் வரும் அவசர போலீஸ் அழைப்புகள் அதன் பின்பு கட்டுப்பாடு நிலைய தகவல் பரிமாற்றம் அத்தனையும் ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்படும். இந்தக் கட்டுப்பாடு அறைக்குத் தான் முன்னாள் எம்.பி ஜாப்ரே பல தடவை மரண அபாய தகவல் அனுப்பியதாகவும் அதன் பின்பு ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் அது போன்ற அழைப்புதல்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று சொன்னதாகவும் ஊடகங்கள் அப்போது சொன்னன.  அந்த கட்டுப்பாட்டு அறைக்கு தான் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்து வெறியாட்டங்களை மேற்பார்வையிட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆகவே தற்போது ராகுல் சர்மா டி.ஐ.ஜியாக ராஜ்கோட்டிலுள்ள ஆயுதப் படைப்பிரிவில்  பணியாற்றுகிறார். அவர் அப்போது நடந்த கலவரங்களை விசாரித்த நானாவதி கமிஷன், பானர்ஜி கமிட்டி மற்றும் உச்ச நீதிமன்றம் நியமித்த எஸ்.ஐ.டி ஆகியோரிடம் போலீஸ் கன்ட்ரோல் அறையில் நடந்த சம்பாசனைகளின் சி.டி தொகுப்பினை அளித்து தனது கடமையினைச் செய்துள்ளார்.. அது தான் அவர் செய்த தப்பு அதற்காக அவருக்கு விளக்கம் கேட்டு குற்ற நமுனா கொடுக்கப்பட்டுள்ளதாக 14.8.2011 ஊடகங்கள் செய்திகள் சொல்லி குறையும் கூறியுள்ளன.
2) திரு. சஞ்சய் பட் ஐ.பீ.எஸ்: இந்த அதிகாரி குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கும், சூறையாடலுக்கும் அரசினை  நேரடியாக குறை சொல்லி ஐகோர்ட்டிலும், உச்ச நீதி மன்றத்திலும் அபிடவிட் தாக்கல் செய்தார். அதன் பயன் அவர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார்.
3) திரு. ரஜினீஸ் ராய் ஐ.பீ.எஸ் இலர் தற்போது டி.ஐ.ஜியாக பணியாற்றுகிறார். இவர் சொகராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் குஜராத் அரசின் கைங்காரியம் தான் கலவரங்களுக்குக் காரணம் என குற்றச்சாட்டினை சொல்லி தனி அபிடவிட் கோர்ட்டில் தாக்கல் செய்திருப்பதால் அவரின் ஐ.ஜி புரமோஷன் தடுக்கப்பட்டுள்ளது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
 நான் மேற்குறிப்பிட்ட 4 ஐ.பீ.எஸ் உயர் அதிகாரிகளின் மனுக்களால் குஜராத் கலவரத்தில் காவிச்சட்டையினர் அரசு ஆதரவுடன் ஆடிய கோரத் தாண்டவம் வெளி உலகிற்கு வந்து விட்டதே என்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் பல்வேறு தண்டனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஆணித்தரமான செய்திகளை ஊடகங்கள் தருகின்றன.
மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் சமீபத்தில் பத்திரிக்கை நிருபர்கள் குஜராத்தில்  ஐ.பீ.எஸ் அதிகாரிகள் பலி வாங்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு ‘நடவடிக்கை தலைக்கு மீறி போனால் மத்திய அரசு தலையிடும்’ என்று சொன்னதாக  செய்திகள் வந்துள்ளன.
இலங்கையில் போராளிகளை ஒடுக்க ராணுவம் பயன் படுத்தப்பட்டது. அதன் அத்து மீறல்களை ஐ.நா. சபை விசாரிக்க ஆணையிட வேண்டும், இலங்கை அரசிற்கு பொருளாதார தடை வேண்டும் என்ற தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் சொல்கின்றன. அத்துடன் சமுதாய இயக்களில் சிலவும் இணைந்து குரல் எழுப்பியுள்ளன. அதனை யாரும் மறுக்க முடியாது, தடுக்க முடியாது.
ஆனால் இந்தியாவிலேயே, உள்ள குஜராத் மாநிலத்தில் போலியான காரணங்கள் சொல்லி மனித வேட்டைகள் மூலம் அப்பாவி 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னமும் பல இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாக இருக்கின்றனர். அந்த வெறியாட்டத்திற்கு இங்கே உள்ள எந்த அரசியல் கட்சியாவது கண்டனம் தெரிவித்தது உண்டா? அல்லது பகிரங்க விசாரணை இலங்கையில் கேட்பது போல கேட்டதுண்டா? அல்லது தனது கண்டனக்கனைகளாவது வீசியது உண்டா? முன்னாள் இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் இறப்பதிற்கு முன்பு குஜராத் கலவரத்தினை அறிந்து கண்ணீர் விட்டதாக சொல்லிய பிறகாவது பாராளுமன்றத்தில் குஜராத் அரசினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது உண்டா? அல்லது பதவியிலுள்ள உச்ச நீதி மன்ற நீதிபதியினை மூலம் விசாரணை செய்யதுண்டா?
இங்கிலாந்து நாட்டில் தோட்டன்ஹாம் நகரில் 29வயதான கறுப்பின இளைஞர், மார்க் டுகா, சந்தேகப்பட்டு போலீஸாரால் 4.8.2011 அன்று கொல்லப்பட்டார். அதன் விளைவாக 6.8.2011லிருந்து 8.8.2011 வரை லண்டன், பிர்மிங்காம், தோட்டன்ஹாம் போன்ற நகர்களில் பயங்கரக் கலகம் ஏற்பட்டு 100 கோடிக்கு மேல் பொதுச் சொத்து நாசமானது. அது போன்ற சம்பவம் குஜராத் கலவரத்திற்கு பின்பு இந்திய நாட்டு முஸ்லிம்கள் கொதித்தெழுந்து கலவரத்தில் ஈடுபட்டார்களா? இல்லையே? ஏனென்றால் இஸ்லாமியர் தங்கள் மார்க்கம் சொல்;லித் தந்த சாந்தி, சமாதானம் போன்ற கொள்கைகளை பின்பற்றுபவர்கள். நாட்டின் சட்டத்தினை மதிப்பவர்கள். இது போன்ற கலவரங்களை அடக்கத்தான் மத்திய அரசு மதவாத கலவர தடுப்புச் சட்டம் கொண்டு வருகிறது.

ஐ.பீ.எஸ் அதிகாரிகளான ராகுல் சர்மா, சஜ்சய் பட், ரஜினீஸ் ராய் பேன்றவர்கள் குஜராத்தின் இனக் கலவரத்திற்கு காரணமானவர்களின் முகத்திரையினை கிழிக்க கிளம்பியிருக்கிறார்கள். அவர்களின் வாயிலாக ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் எந்த வகையில் குஜராத் மனித கொலைக்கு உறு துணையாகி இருக்கிறார்கள் என்ற வண்வாலம் தண்டவாலத்தில் ஒரு நாள் ஏறப்போவது தின்னமே! அவர்கள் ஒளித்து வைத்திருந்த காவி பூனைக் குட்டியும் மெல்ல மெல்ல விச் கண்டிங் என்ற அரசு அதிகாரிகள் பலிவாங்கும் நடவடிக்கை மூலம் வெளிறேப் பார்க்கிறது.! அவர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் குரல் கொடுத்தால் குஜராத் அரசு மாநில அரசின் உரிமையில் தலையிடுகிறது என்று கதறுகிறது. அதற்காக மக்களும், மத்திய அரசும் மனித படுகொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருக்க வேண்டும்? சட்டம் முன் அனைவரும் சமம் அது தன் கடமையினைத் தானே செய்யுமல்லவா?

சாப்ட்வேர் மாப்பிள்ளை (வாய்விட்டு சிரிக்க மட்டும் ...)


 சாப்ட்வேர் மாப்பிள்ளை (வாய்விட்டு சிரிக்க மட்டும் ...)



வித்யா : என்னடி திடீர்னு ஃபோன்
பண்ணியிருக்க என்ன விஷயம் ?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு
நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை ?
நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல   4-5 ஒத்து
வர மாதிரி இருக்கு. எதை செலக்ட்
பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய்
இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம் ?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க
ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம்
சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல
இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும்
யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை
செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு
கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது.
ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா
இருக்காரு.

வித்யா : மேனஜரா ? அப்படினா எப்பவுமே எதோ
பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப்
கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும்
செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே
சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி
வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன்
65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு
சொன்னாலும் , ஒத்துக்க மாட்டாரு.
எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு
உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு
சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் ( cab)
அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய்
ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா
செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க
மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா ? அப்ப
நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட்
இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது
செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும்
கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி
சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும்
அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு
மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு
எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா ,
நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை.
அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு.
ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம்.
அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ்
டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா
இருந்தாலும் , இதை செய்ய இவ்வளவு நேரமானு
கேட்பாரு. காபி போட   10 நிமிஷமாச்சுனா ,
காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு.
5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை   10
நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு.
நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி , நான்
செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க
மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா
வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற
நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே
கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே
வேண்டாம்னு சொல்றியா ?

நித்யா: யார் அப்படி சொன்னா ?
சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு
இருக்கு. அது தான்   டெவலப்பர் கூட்டம் .
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம்.
எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம
பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா
போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற
பிரச்சனை என்னனா எது கேட்டாலும்
தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி"
படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி.
அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு
அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா
அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப
நல்லவனு" சொல்லனும்.

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 3) 10.08.2011


காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்... (தொடர்ச்சி - 3) 10.08.2011




 தொடர் ..... 3

ஜூலை 22 மாலை 6 மணிக்கு ஜம்மு நகர் வந்து சேர்ந்தோம். காஷ்மீர் என்பது காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு என மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கியது. ஜம்மு என்பது தரைப்பகுதி. அதாவது ஊட்டிக்கு கீழே மேட்டுப்பாளையம் இருப்பது போல. இங்கு பிராமணர்கள் அதிகம். லடாக் என்பது புத்தர்கள் நிறைந்த பகுதி. சீனாவின் எல்லையை ஒட்டியிருக்கிறது. மொத்த காஷ்மீரில் லடாக்கின் பரப்பரளவுதான் அதிகம். ஆனால் மக்கள் தொகை குறைவு. மொத்தம் ஒன்னேகால் லட்சம் பேர்தான் வாழ்கிறார்கள்.

டெல்லியிலிருந்து செல்பவர்கள் தரைவழியாக செல்லவேண்டுமெனில் ஜம்முதான் நுழைவாயில். அங்குதான் சோதனைச் சாவடிகளும், அரசுப் படைகளின் கெடுபிடிகளும் அதிகம். நாங்கள் நிகழ்ச்சி நடைபெறும் தோடா (DODA) நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது முக்கியப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டோம்.

துருவித் துருவி விசாரித்தார்கள். பிறகு எங்களது வாகனத்தை ஓரம் கட்டச் செய்து நிறுத்திவிட்டார்கள். பலமுறை பேசியும் பயனில்லை. எங்களைப் போல பல காஷ்மீரிகளின் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. அப்படி நிறுத்தப்பட்டவர்களிடம் பேச்சு கொடுத்தோம். முஸ்லிம்களாக இருந்தால் இப்படித்தான் செய்கிறார்கள் என்றனர்.

எங்களோடு வந்த வழக்கறிஞர் வாசுதேவன் தான் முஸ்லிமில்லை என்பதை எடுத்துக் கூறினாலும், அவரோடு நாங்கள் இருப்பது மட்டுமே அனைத்துக்கும் தடையாக இருந்தது. எங்களது முதல் அனுபவமே கசப்பாக அமைந்தது. இங்கே தினம் தினம் காஷ்மீரிகள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்களோ என அறிந்து வருந்தினோம்.

நாங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தகவல் அனுப்பி, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் பரபரப்பாகி அதற்கான முயற்சிகளில் இறங்கினர். ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு வேறொரு அதிகாரி வந்தார். அவரிடம் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், வழக்கறிஞர்கள் ஜெய்னுல் ஆபிதீன், வாசுதேவன் ஆகியோரும் முறையிட்டனர். பிறகு ஓ.யூ.ஆர். அவர்கள் எங்களுக்கான இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்ட அரசு அழைப்பிதழை அவரிடம் காட்டினார். அதன்பிறகே எங்களுக்கு அனுமதி கிடைத்தது.
 உடனே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. அப்பாடா... என்று வேகமாக புறப்பட்டோம். கடுமையான மலைப்பாதைகளில் கார் வேகமாக சென்றது பயத்தை கிளப்பியது.

நாங்கள்  டிரைவரிடம் மெதுவாக போகச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுக்கு இது சாதாரணமாக இருந்தது.

மதியமும் சாப்பிடதாததால் இரவில் ஒரு உணவகத்தில் ரொட்டிகளை உண்டோம். இரவு 12 மணியளவில் ஒரு இடத்தில் காரை டிரைவர் நிறுத்தினார். இதற்கு மேல் அவர் ஸ்ரீநகர் செல்வதால் இங்கு இறங்கி தங்க சொன்னார். காலையில் வேறொறு வண்டியல் ஏறி தோடாவுக்கு போகுமாறு அறிவுறித்தினார். நாங்கள் அங்கே ஒரு மலிவு விலை விடுதியில் தங்கினோம். காலையில் தொழுது விட்டு அந்த ஊரின் கடைத்தெருவுக்கு வந்தோம். அங்கு ராணுவ வீரர்கள் வாகனங்களோடு சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

தோடா செல்லும் ஒரு டெம்போ வேன் வந்தது. அதில் கூட்டமாக இருந்தது. வேறு வழியின்றி ஏறிக்கொண்டோம். அது அடுத்தடுத்து மூன்று மலைகளை ஏறி இறங்கி எங்களையெல்லாம் திகிலூட்டீய படியே சென்றது.

மிக மோசமான சாலைகளும், வளைவுகளும் பயமுறுத்தியது. மிக உயரத்தில் இருந்து எட்டி பார்த்த போது ஒரு நதி கீழே ஒரு கோடு போல ஓடிக்கொண்டிருந்தது. அது சினாப் நதி என்றார்கள். அங்கே ஜெய பிரகாஷ் நாராயணன் பெயரில் அணைக்கட்டு பணிகள் நடந்து கொண்டிந்தது. மூன்று மணி நேர பயனத்திற்கு பிறகு ஜூலை 25 காலை 10 மணிக்கு தோடா நகர் வந்து சேர்ந்தோம்.

எங்களது கருத்தரங்க நிகழ்ச்சி காலை 11.00 மணிக்கு தொடங்கியது. டாக்டர் அஜ்மல் அவர்கள் எங்களை கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைத்தார். நாங்கள் தங்கிய விடுதி ஒதுக்கு புறமாக ஒரு மலையடிவார அருகில் இருந்தது. நாங்கள் குளித்து விட்டு 1 மணிக்கு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தோம்.




சினாப் நதி...
கருத்தரங்க நுழைவாயிலில்...
கருத்தரங்க மேடை...
கருத்தரங்கில் தகவல்களை குறிப்பெடுத்துக்கொண்டு...
14:52 இ(வ் வேதமான) து மனிதர்களுக்கு எத்தி வைத்தலாகும். இதனை கொண்டு அவர்கள் எச்சரிக்கபடுவதற்காகவும் , வணக்கத்திற்கு உரியவன் ஒரே நாயன் (ஆன அல்லாஹ் ) தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் ஆகும் . . .