Saturday, 6 August 2011

PLEASE DON'T HESITATE TO READ COMPLETLY....... சிகப்பு ஆகஸ்ட் (Red Augest)இது வெறும் ஆகஸ்ட் மாதம் அல்ல ஒரு இனம் அதிக அளவில் அழிக்கப்பட்ட மாதம்


சிகப்பு ஆகஸ்ட் (Red Augest)இது வெறும் ஆகஸ்ட் மாதம் அல்ல ஒரு இனம் அதிக அளவில் அழிக்கப்பட்ட மாதம்


கிழக்கில் முஸ்லிம்களுக்கு என்ன நடைபெற்றது என்பதைக்காட்டும் சில உதாரணங்கள்

சிகப்பு ஆகஸ்து

கிழக்கு முஸ்லிம் இனசுத்திகரிப்பு
2006
ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை முஸ்லிம் விவசாயிகள்  படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா முஸ்லிம்கள் படுகொலை
முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி  கொன்றுவிட்டு  அவளின் வயிற்றை   கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை  வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாதபுலிகள் ஒரு மாதமே ஆன  சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து  தலை சிதறடிக்கப்பட்ட பின்  வீசி  எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

2006 -ஆகஸ்ட் 03-மூதூர் முஸ்லிம்கள் வெளி யேற்றம்

ஆகஸ்ட்- 12 ஏறாவூர் ‘முஸ்லிம் கிராம படுகொலை
116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில்  கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்
·         ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
·          
·         ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)பெண்
·          
·         எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)பெண்
·          
·         ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)ஆண்
·          
·         எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
·          
·         எஸ். சனூஸியா- (01 வயது) -பெண்
·          
·         ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
·          
·         எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
·          
·         எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
·          
·         யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
·          
·         எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
·          
·         ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
·          
·         எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
·          
·         எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
·          
·         எஸ். எல் நஜீபா -(04 வயதுபெண்
·          
·         எஸ். எல். நஸ்ரின்- (06 வயதுபெண்
·          
·         எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
·          
·         எம். ஐ. எம். தாஹிர்- (06 வயது)- ஆண்
·          
·         எம். எல். எப். றிஸ்னா- (05 வயது)- பெண்
·          
·         எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
·          
·         எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
·          
·         எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
·          
·         எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
·          
·         ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
·          
·         ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
·          
·         எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
·          
·         எம். ஐ. ஜரூன் -(10 வயது)
·          
·         எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
·          
·         எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
·          
·         எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
·         எம். கமர்தீன் -(12 வயது)
·          
·         எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
·          
·         ஏ. எல். மக்கீன்-(12 வயது)
·          
·         எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
·          
·         ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
·          
·         வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
·          
·         எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
·          
·         எம். எஸ். பைசல்-(13 வயது)
·          
·         எம். பீ ஜவாத்- (13 வயது)
·          
·         யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
·          
·         ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
·          
·         எச். எம். பௌசர்-(14 வயது)
·          
·         ஏ. ஜௌபர்- (14 வயது)
·          
·         எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
·          
·         ஏ. சமீம்- (14 வயது)
·          
·         எம். இஸ்ஸதீன்- (15 வயது)
·          
·         எம். எம். எம். பைசல் -(15 வயது)
·          
·         எம். எஸ். ஜிப்ரியா -(12 வயதுபெண்
·          
·         எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
·          
·         எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
·          
·         எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
·          
·         எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
·          
·         எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
·          
·         எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயதுஆண்
·          
·         எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
·          
·         ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
·          
·         ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
·          
·         யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
·          
·         ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
·          
·         ஏ. எல் சமீர்- (10 வயது) -ஆண்
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

இலங்கை முஸ்லிம்களின் ஷுஹதாக்கள் தினம்

 
1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்ட ஆண்டாகும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிக கொடூரமாக புலிப் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டதும் வடமாகாண முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.
அதிலும் 03.08.1990 அன்று காத்தான்குடி மீராஹ் ஜும்மா மஸ்ஜித் மற்றும் ஹுஸைனியா மஸ்ஜித் ஆகிய அமைதியான அல்லாஹ்வின் தளங்களில் இஷா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் நோயாளிகள் என்ற எந்த வித்தியாசமும் இன்றி புலிப் பயங்கரவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதும் அல் குர் ஆன் பிரதில்கள்    மஸ்ஜிதுகளில் கிழித்து வீசப்பட்டதும் எரிக்கப்பட்டதும் இந்த தினத்தில்தான் அந்த பயங்கரவாத வெறியாட்டத்தின் ஆண்டும் ,மாதமும் நாளும் இன்றாகும் இத்தினம் ஷுஹதாக்கள் தினமாக ஒவ்வொரு வருடமும் இலங்கை முஸ்லிம்களினால் அனுஷ்டிக்க படுகின்றது அதிலும் காத்தான்குடியில் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவில் கொள்ளபடுகின்றது இன்று 20வது ஆண்டு ஷுஹதாக்கள் தினத்தையொட்டி இன்று காலை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாயலில் குர்ஆன் ஓதுதல் மற்றும் பிராத்தனை என்பன இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது பிந்திய தகவலின் படி கடைகள்அலுவலகங்கள் மூடப்பட்டு மஸ்ஜிதுகளில்  விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றுகின்றன அதே வேளை  ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களின்  நினைவாக  சுஹதாக்கள் தினம் வரும்12 ஆம் திகதி  ஏறாவூர் பிரதேசத்தில் ’ அனுஷ்டிக்கப்வுள்ளது

ஆகஸ்ட் 3-இன்று 19ஆவது சுஹதாக்கள் தின நினைவாக


سبحان الله العظيم
ஒன்று பட்ட சமுதாயமாகவாழ
நம் அனைவருக்கும்அந்த வல்ல
இறைவன் அருள் புரியட்டும்.
ஆமீன்

No comments:

Post a Comment