நோர்த் லண்டனில் அமைக்கப்பட்டு (ர்யசசழற) இருக்கும் இலங்கையர் கலாச்சார நிலையம் என்ற பெயரில் இயங்கிவரும் இப்பள்ளியை (இறை இல்லம் )பேங்க் லோனில் ( வங்கி கடன் ) வாங்கி மாதா மாதம் வங்கிக்குரிய தவணை காசு வட்டியுடன் சேர்த்து கட்டிக்கொண்டு வருகிறார்கள்.
இந்த கடன் இஸ்லாமிய முறைப்படி வாங்கப்பட்டதா என்று பார்த்தல் இல்லை! ஆதாரம் இத்துடன் இணைத்துள்ள ஆவனங்களை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த வங்கிக் கடன் ஒப்பந்தத்தை லன்டனில் இருக்கும் ஐரோப்பிய ஷரீஆ கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டு அவர்களிடம் பாத்வா கேட்கப்பட்ட போது அவர்கள் இந்த கடன் ஒப்பந்தம் இஸ்லாமிய ஷரீஆவுக்கு வெளியில் வட்டியுடன் சம்பந்தப்பட்டு இருகின்றதால் இதனை தவிர்ந்து கொள்ளுவதுதான் சிறந்தது என்று பாத்வா வழங்கியதன் பின்பும் எந்த வித இறை அச்சமும் இல்லாமல் வட்டிக்கு எடுக்கப்பட்ட காசில் வாங்கிவிட்டார்கள்;. ஐரோப்பிய கவுன்சில் வழங்கிய பாத்வா இத்துடன் இணைத்துள்ளோம்.
பள்ளி நிர்வாகிகள் தங்கள் செய்த காரியத்தை சரிப்படுத்துவதற்கு அயர்லாந்தில் ஒரு கல்லூரி அதிபரிடம் பள்ளி நிர்வாகிகளுக்கு தேவையான முறையில் ஒரு கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டு யாராவது இதனை பற்றி கேள்வி கேட்டால் அதனை காட்டி மழுப்பி விடுகிறார்கள்.
கல்லூரி அதிபரிடம் ஐரோப்பிய பாத்வா கவுன்சில் வழங்கிய பத்வாவை காட்டாமல் இருட்டடிப்பு செய்து அவர்களுக்கு தேவையான பாத்வாவை பெற்றது நயவஞ்சக செயலாகும்.
எல்லோரும் தனக்கு தேவையான மாதிரி பாத்வாக்கள் கல்லூரி அதிபர்மார்களிடம் வாங்கிக்கொள்ள முடியுமென்றால் ஐரோப்பிய பாத்வா கவுன்சில் ஏன் நிறுவப்பட்டிருக்கிறது ?.
இப்பள்ளியுடன் தொடர்பு உள்ளவர்கள் மற்றும் பண உதவி செய்யும் சகோதரர்களே நீங்கள் வட்டிக்கு துணை போகிறீர்கள் !!!!!!!!! எச்சரிக்கிறோம் எவனொருவன் வட்டியுடன் எந்த விதத்திலாவது சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் நிரந்தர நரகத்தை அல்லாஹ் கடமையாக்கிவிட்டான் அஞ்சிக் கொள்ளுங்கள்.
முதல் முதலில் இவ்வுலகில் வட்டிக்கு அல்லாஹ்வுடைய பள்ளிவாசலை வாங்கிய இந்த மகான்களை தலைவர்களாக்கி அவர்களின் இப்படிப்பட்ட கூத்துக்களுக்கு துணை போய் நரகம் செல்லப்போகிறீர்களா ?.
அவர்களிடத்தில் வங்கி ஒப்பந்த ஆவணங்களை காட்டும் படி கேளுங்கள் காட்டுவதற்கு மறுத்தால் சட்டரீதியாக உங்களுக்கு பார்வை இடமுடியும். சரிடி(Charity) கமிஷன் மூலம் மக்களாகிய உங்களுக்கு ஆவனங்களை காட்ட கட்டளை பிறப்பிக்க வைக்க முடியும். இப்பள்ளி தனியார் சொத்தல்ல இலங்கயர்களாகிய எல்லோரினதும் சொத்தாகும்.
இப்பளிக்கு இலங்கையில் இருந்து வந்து போகும் உலமாக்கலாகிய ரிஸ்வி முப்தி- யூசூப் முப்தி- யஹியா மௌலவி- ஹசன் பரீத்- அப்துல் ஹாலிக்- அகார் முஹம்மது- ஹஜ்ஜுள் அக்பர்- அப்துல் வதூத் ஜிப்ரி- முன்பு நியாஸ் மௌலவி- இவர்கள் உண்மை தெரிந்தும் வாய்மூடி எதுவுமே பேசாமல் திரும்பி விடுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு தெரியாது என்று சொல்ல முடியாது பல சகோதரர்கள் இவர்களுக்கு இப்பள்ளியின் இக்கூத்தை எத்தி வைத்துவிட்டார்கள்.
No comments:
Post a Comment