சலாம்,
செப்ட் 1st வெளியிடப்பட்ட அமெரிக்காவின் இந்தியாவைப்பற்றிய CRS ரிப்ப்போர்ட்டில் மோடியை பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்திருப்பதாவகும் , அடுத்த பிரதமர் மோடிதான் வர வேண்டும் என்று அமெரிக்காவே விரும்புவதாகவும் சில பொறுப்பற்ற, பாசிச வெறிபிடித்த, பணத்திற்கக்காகவும், அப்பாவியான புதிய இளம் தலைமுறையின் 'Hits ' and 'TRS ' களுக்காகவும் இது போன்ற பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற ஊடகங்களின் முகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார் இந்த சகோதரர். தவறாமல் படிக்கவும். படிக்கச் சொல்லவும்.
'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:-அமெரிக்க CRS அறிக்கை.!
Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான்.
முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர்.ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.
இந்த CRS அறிக்கையில், 'ஏதோ மோடியை பற்றியும் குஜராத் பற்றியும் புகழ்மாலை சூட்டினார்கள்' என்றுதானே ஊடகங்கள் கூத்தாடுகின்றன..? அப்படியொரு 'செய்தி' என்ற பெயரில் 'காதுக்கு பூ' விற்றவர்கள் எவருமே ரொம்ம்ம்ப ஜாக்கிரதையாக இந்த அறிக்கையை காண சுட்டியை மட்டும் கொடுக்கவே இல்லை..! ஏன்..? காரணம், 'ஆங்கிலம் படிக்கத்தெரிந்த மக்கள் இதனை படித்து உண்மையை அறிந்து கொண்டால்...?' என்ற பயமா..?
ஆனால், சமீபத்தில் 'லீக்' ஆக்கப்பட்ட இந்த 'அறிக்கை' தற்போது இந்த தளத்தின்-இந்த பக்கத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு எவர் வேண்டுமானாலும் இப்போது தரவிறக்கம் செய்துகொள்ளும் படியும் ஆன்லைனில் படிக்கவும் வெட்டவெளிச்சமாக உள்ளது. (இதனை எனக்கு அறியத்தந்த சகோ.முஹம்மத் ரஃபீக் பாபுக்கு மிக்க நன்றி..!)
இந்த அறிக்கை மோடி பற்றியதா..? இல்லை..!
குஜராத் பற்றியதா..? இல்லை..!
அப்புறம் அது எதைப்பற்றியது..?
அந்த அறிக்கை... இந்திய உள்நாட்டு பிரச்சினைகள், மைய அரசின் தந்திர இயங்குவியல், அமெரிக்காவுடனான நல்லுறவு ஆகிய இவற்றை பற்றியது..!
இந்தியாவை பற்றி 'ஆராய்ச்சி செய்து' அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இம்மாதம் அனுப்பப்பட்டஇந்த CRS அறிக்கை மொத்தம் 98 பக்கம் கொண்டது.
அதில் "மோடி" என்ற பெயர் 5 பக்கங்களில் வந்துள்ளது . அவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 13 தடவை மோடி பெயர் வந்துள்ளது.
அதனை தயாரித்தவர்கள் விபரம் :-
CRS Report for Congress
Prepared for Members and Committees of Congress
India: Domestic Issues, Strategic Dynamics and U.S. Relations
K. Alan Kronstadt, Coordinator Specialist in South Asian Affairs
Paul K. Kerr Analyst in Nonproliferation
Michael F. Martin Specialist in Asian Affairs
Bruce Vaughn Specialist in Asian Affairs
இவர்கள் மோடி பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள்..?
முதலில் மோடி பெயர் அடிபடும் பக்கம் 41. அதில், பாஜக கட்சி பற்றி ஒரு அறிக்கை. இதில் காமடி என்னவென்றால், இந்த அறிக்கையை திரட்டியது எங்கிருந்து என்றால்... www.bjp.org எனும் அவர்கள் கட்சி தளத்தில்..! அங்கே மோடி பற்றி சொல்லப்பட்டிருக்கும் கருத்தை எடுத்து.....
.
.
// Gujarat Chief Minister Narendra 1-Modi, who has overseen impressive development successes in his state //
---என்று இப்படி போட்டுவிட்டு, தங்கள் கருத்தை அடைப்புக்குறிக்குள் அதனை தொடர்ந்து...
// but who is also dogged by controversy over his alleged complicity in lethal anti-Muslim rioting there in 2002 (2-Modi has in the past been denied a U.S. visa under an American law barring entry for foreign government officials found to be complicit in severe violations of religious freedom) //
----என்றும் சொன்னதை ஏனோ காவி ஊடகங்கள் நம்மிடமிருந்து ஒளித்து விட்டன. மேலும்.... அவ்வறிக்கையில்...
//Despite his clear political and economic successes in Gujarat—in his ten years as Chief Minister the state has led thecountry on many development indicators—3-Modi continues to be haunted by the 2002 Ahmadabad riots, a topic he hasnever fully addressed in public. Although he is a safe bet to win a third term in 2012 state elections, his aspirations to be the BJP’s prime ministerial candidate face significant obstacles, not least the likelihood that Muslims and liberal-minded Hindus would represent an anti-4-Modi bloc at the national level, and the BJP’s key ally in Bihar, Nitish Kumar’s Janata Dal (United), could be expected to abandon the alliance in protest (Geeta Anand, “Give Us Your Account, Mr.5-Modi” (op-ed), Wall Street Journal, February 23, 2011; Karan Shah,” Narendra 6-Modi, Prime Minister?” (op-ed),Outlook (Delhi), April 5, 2011) //
---என்று 'அவுட்லுக்' பத்திரிக்கையின் காரசாரமான கட்டுரையைத்தான் பக்கம் 42-இல் இணைத்துள்ளனர்..! நம் காவி ஊடகங்கள் இதில் முதல் வரிக்கு மேல் படிக்க விரும்பவில்லை.
அடுத்து... பக்கம் 47 இல் "Notable State-Level Developments" என்ற தலைப்பின் கீழே பல மாநிலங்களை பற்றி அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனால், குஜராத் பற்றி அமெரிக்காவின் Wall Street Journal கட்டுரையை எடுத்து போட்டு இருக்கிறார்கள்.
.
.
// Perhaps India’s best example of effective governance and impressive development is found in Gujarat (pop. 60 million), where controversial Chief Minister Narendra 7-Modi has streamlined economic processes, removing red tape and curtailing corruption in ways that have made the state a key driver of national economic growth. Seeking to overcome the taint of his alleged complicity in deadly 2002 anti-Muslim riots, 8-Modi has overseen heavy investment in modern roads and power infrastructure, and annual growth of more than 11% in recent years. The state has attracted major international investors such as General Motors and Mitsubishi and, with only 5% of the country’s population, Gujarat now accounts for more than one-fifth of India’s exports. //
---இது மோடி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு எப்படி நம் நாட்டு வளங்களை வாரி வழங்குகிறார் என்று பறை சாற்றும். 'எதனால்... அந்த அமெரிக்க பங்கு மார்க்கெட் பத்திரிகையில் மோடியை இப்படி புகழ்கிறார்கள்' என்று கடைசி வரி கட்டியம் கூறுகிறது..! இந்த வரியை ரொம்ப லாவகமாக நம் காவி ஊடகங்கள் மறைத்து விட்டன. 'இப்படியெல்லாம் அமெரிக்க பன்னாட்டு நிருவனங்களுக்கு அடிமையாக சேவகம் செய்தால் அமெரிக்கா தன் மீதான விசா தடையை நீக்கி விடும்' என்று அலைகிறார் போலும் இந்த கேடி... ஸாரி... மோடி..!
இந்த செய்தி உண்மையா..? "India’s best example" என்று சொல்வது உண்மையா..? குஜராத்தான் மெய்யாலுமே முதலில் இருக்கிறதா..?
இது பொய்..! இங்கே சென்று அட்டவணையில் உண்மை விபரம் அறிந்து கொள்ளுங்கள்..!
மோடி ஒரு ஊழலற்ற சிறந்த ஆட்சியாளரா..? இல்லை..! மோடியின் ஊழல் பற்றியும் அவரின் ஆட்சியின் சீர்கேடு பற்றியும் அவருடைய 'கூட்டாளி' அண்ணா ஹாசரேவே புட்டு புட்டு வைத்திருப்பதை இங்கே சென்று படியுங்கள்..!
அடுத்து பக்கம் 48. இது “Highway in India Offers New Solution to Land Fights,” New York Times , February 22, 2011. -இல் வந்த ஒரு பத்திரிக்கை செய்தியாளரின் கிளிப்பிங்..!
// The examples set in by Chief Ministers 9-Modi and Kumar may have inspired the popular leader of India’s most populous state, Uttar Pradesh (pop. 200 million). Chief Minister Mayawati, ... ... focus much more toward infrastructure projects such as road-building and improving the state’s poor energy grid.//
(இதெல்லாம்... 'ரோடு போடும் காண்ராக்டையும்... மின்சார கிரிட் டவர் கட்டும் காண்ட்ராக்டையும் உ.பி.யில் நழுவ விடாதீர்கள்' என்ற அறிவுரையே அன்றி வேறென்ன..?)
ஆனால், மோடி பெயரை பார்த்தவுடன் பூத்துக்குளுங்கிய ஊடக மனம்... நிதிஷ் குமார் பற்றியும் மாயாவதியை பற்றியும் கூறப்பட்டிருக்கிறதே..? ஏன் மவுனம் காக்கின்றன இந்த காவி ஊடகங்கள்..?
கடைசியாக... பக்கம் 70-இல் தான் மோடிக்கு இறங்குகிறது அதிரடி ஆப்பு..! அடுத்து வரக்கூடிய வரிகள் ஒவ்வொன்றும் பயங்கரவாதி மோடியின் மண்டையில் விழும் சம்மட்டி அடி என்றால் மிகை அல்ல..!
The U.S. State Department and human rights groups have been critical of New Delhi’s largely ineffectual efforts to bring those responsible for the post-Godhra rioting and murders to justice; some of these criticisms were echoed by the Indian Supreme Court in 2003.
In 2005, the State Department made a controversial decision to deny a U.S. visa to Gujarat Chief Minster Narendra 10-Modi under a U.S. law barring entry for foreign government officials found to be complicit in-severe violations of religious freedom. The decision was strongly criticized in India.
In 2008, a Gujarat state government commission exonerated 11-Modi, claiming to have found “absolutely no evidence” that he or his ministers had acted improperly. More than nine years after the Gujarat riots, international human rights groups express concerns about obstacles faced by victims seeking justice, the continuing internal displacement of thousands of families who lack basic necessities, and large numbers of un investigated related criminal cases (despite the IndianSupreme Court’s 2004 order to reopen nearly 1,600 such cases).
Human Rights Watch called on the Indian government to launch an investigation of 12-Modi after he made statements apparently endorsing the extrajudicial execution of a terrorism suspect by police.
In 2008, 27 Members of the U.S. Congress joined the U.S. Commission on International Religious Freedom in urging the State Department to reaffirm its past decision to block 13-Modi’s entry to the United States ( “India: Gujarat Chief Minister Endorses Unlawful Killings,” Human Rights Watch release, December 7, 2007).
இதெல்லாம் உங்கள் கண்ணில் அகப்படாமல் எங்கே போச்சு ஊடகமே..? எதற்கு இந்த மாய்மாலம்..? எதற்கு இந்த செய்தியியல் ஊழல்..?
இதெல்லாம் விட பெரிய ஆப்பு ஒன்று இருக்கிறது..!
.
.
அது... அடுத்த 71-ம் பக்கத்தில்...!! "உள்நாட்டு இ ந்து பயங்கரவாதம்"...!!!
Maoist Rebellion, Other Insurgencies, and Communalism என்ற பகுதியில்... "Indigenous Hindu Terrorism" --- என்று ஒரு உள் தலைப்பு இட்டு இதை தனியே கூறுகிறது CRS அறிக்கை..!
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பலருடன் பயங்கரவாதி பிரக்யா சிங் சாத்வீ |
கார்கிலுக்கு அனுப்ப சொல்லி கொடுத்தால்... மாலேகானுக்கு RDX வெடிகுண்டு சப்ளை செய்தாராம் இந்த இந்திய ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீக்காந்த் ப்ரசாத் ப்ரோஹித் |
Indigenous Hindu Terrorism.
Thus did “Hindu terrorism” become a new and highly controversial phrase in India’s national dialogue. Never before in the country’s history had the phrase been so widely used, and the development had major and continuing effects on India’s national psyche. Many Indian observers warned of the danger of a “militant majoritarianism”among Hindu nationalists that threatens to rend the secular fabric of the nation.
In late 2010, Hindutva extremist Swami Aseemanand confessed to involvement in a number of terrorist attacks previously blamed on Islamist militants, including the 2006 bombing of a Muslim cemetery in Malegaon that killed 37 people and the 2007 bombing of the trans-border Samjhauta Express, a train linking Delhi and Lahore, Pakistan, that killed 68 people, most of them Pakistani civilians.
Even more recent are overt signs that India is home to militant Hindu nationalist groups intent on launching domesticterrorist attacks.
.
In September 2008, seven people were killed by two bomb blasts in the Maharashtran city of Malegaon, a hotbed of Hindu-Muslim communal strife. By year’s end, police had arrested nine members of a “Hindu terrorist cell” in connection with the bombing, including an active army lieutenant colonel and a Hindu nun with links to the main opposition BJP..
Thus did “Hindu terrorism” become a new and highly controversial phrase in India’s national dialogue. Never before in the country’s history had the phrase been so widely used, and the development had major and continuing effects on India’s national psyche. Many Indian observers warned of the danger of a “militant majoritarianism”among Hindu nationalists that threatens to rend the secular fabric of the nation.
In late 2010, Hindutva extremist Swami Aseemanand confessed to involvement in a number of terrorist attacks previously blamed on Islamist militants, including the 2006 bombing of a Muslim cemetery in Malegaon that killed 37 people and the 2007 bombing of the trans-border Samjhauta Express, a train linking Delhi and Lahore, Pakistan, that killed 68 people, most of them Pakistani civilians.
Aseemanand confessions were an embarrassment for law enforcement agencies that had arrested Muslim suspects, and gave credibility to analysts who identify Hindu militancy as a threat to India’s security.
மேற்படி செய்திகளும் CRS-ன் சொந்த சரக்கு அல்ல. அப்புறம் எங்கிருந்து காபி & பேஸ்ட் பண்ணப்பட்டனவாம்..?
“Indian Muslims Blamed for ‘Saffron Terror’ Want Justice,” BBC News , January 27, 2011;
“Swami’s Confession,” Frontline ( Chennai), February 11, 2011.
“‘Hindu Terrorism’ Debate Grips India,” BBC News, November 21, 2008;
Praful Bidwai, “Saffron Terror” (op-ed), Frontline (Chennai), November 21, 2008;
“The True Face of the BJP” (op-ed), Outlook (Delhi), October 29, 2008.
“The Rise of Hindutva Terrorism,” Outlook India (Delhi) May 11, 2010.
“India Police Say They Hold 9 From Hindu Terrorist Cell,” New York Times, November 12, 2008.
மோடி பற்றி COPY & PASTE பண்ணப்பட்ட சில வரிகளை... அவை 'பொய் என்றாலும்பரவாயில்லை' என பெருமையாய் பீற்றிக்கொண்டோர் யாருமே பாஜகவின் பயங்கரவாத குண்டுவெடிப்புகள் தொடர்பு பற்றியான இவ்விஷயத்தை உண்மை என்றாலும் ஏன் வெளியே சொல்லவில்லை..?
.
.
அதனாலென்ன..! நாம் சொல்லுவோம் என்றுதான் இந்த பதிவு..!
ஆக... இந்த நான்கு அமெரிக்கர்களும் நன்றாக சம்பளம் வாங்கிக்கொண்டு இந்தியாவில் ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுக்கொண்டு ஜாலியாக சாப்பிட்டு என்ஜாய் பண்ணிக்கொண்டே அவ்வப்போது... கூகுள் உதவியுடன் 'பொட்டிதட்டி' பல பத்திரிக்கை கட்டுரைகளை தேடித்தேடி கட் & பேஸ்ட் பண்ணி உள்ளனர் என்றுதான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. புதிய தகவல்கள் ஒன்றும் இல்லை..! ஹூம்...! இதெல்லாம் ஒரு அறிக்கை..! இதெல்லாம் ஒரு உழைப்பு..! இதுக்கெல்லாம் முக்கியத்துவம்... ஒரு மதிப்பு... மரியாதை..! ச்சே..!
இதைவிட சிறப்பான ஆதாரங்களுடன் INVESTIGATIVE JOURNALISM REPORTS மற்றும் தரமான சிந்திக்க வைக்கும் ஆய்வுக்கட்டுரைகளை நம் பதிவுலக சகோஸ் ஏராளமாகவே தருகின்றனர்..!
இந்த CRS அறிக்கையில் பல விஷயங்கள் விஷமத்தனமானவை..! எதிர்க்கப்பட வேண்டியவை. ஆனால்... ஓர் எதிர்ப்பையும் காணோம்..!
சில கார்ப்பரேட் ஊடகங்கள்தாம் மோடியை பிரதமராக்குவதற்கான 'பொறுப்பை' ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்தாலே நமக்கு புரியும். அவைகள்தாம் அமெரிக்காவின் CRS அறிக்கையில் மோடிக்குறித்த கட் & பேஸ்ட் பொய்யான வரிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன.
இந்தியாவில் காணப்படும் பல குறைகளை சுட்டிக்காட்டி நேர்மையாக விமர்சித்து இருந்தாலும்... பல உள்குத்துகள் இருக்கின்றன.
மொத்தமாக படித்துவிட்டு நிமிர்ந்தால்... இந்தியா அமெரிக்காவின் காலணியாதிக்கத்திற்கு மறைமுகமாக அடிபணிந்து விட்டது என்பதைத்தான் உண்மையில் CRS-ஸின் அறிக்கை நமக்கு சொல்கிறது. பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான அமெரிக்க அடியாளாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதன் விபரங்கள் CRS-ஸின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியதிலும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் நிரந்தரமான இருப்பிற்கு இந்தியாவின் மவுன ஒத்துழைப்பதற்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது இவ்வறிக்கை.
"அணிசேரா கொள்கை"யிலிருந்து அமெரிக்க சேவை நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதற்கும், இந்தியாவை ஆட்சி புரிவது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் அமெரிக்காவின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கும் உறுதியான ஆவணம்தான் CRS அறிக்கை.
ஆனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோடியைக் குறித்த கட் & பேஸ்ட் வருடல்களை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய ஊடகங்கள் "யாருக்காகவோ" தங்களை பிரதிநிதிகளாக மாற்றி வருகின்றார்கள் என்பதை மட்டுமல்ல இந்திய தேசத்தை அமெரிக்க ஆக்டோபஸ்களின் கரங்களில் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.
இந்த 'கட்&பேஸ்ட் அறிக்கையை(?)' தூக்கி ஓரமாய் வைத்து விட்டு, இங்கே... என்னுடைய முக்கியமான கேள்வி ஒன்று என்னவென்றால்...
இந்த அறிக்கையில் மோடி பற்றிய சார்பு செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை தலைப்புச்செய்தியாக்கி ஆட்டம் போட்டு குதூகளித்தீர்களே... ஓ... காவி ஊடகங்களே..! மரணஅடி கொடுத்து ஆப்பு வைத்த மற்ற செய்திகளை எல்லாம் ஏனய்யா... ஒதுக்கி மறைத்தீர்கள்..? இதுதான் நீங்கள் ஊடகவியலில் கற்ற நேர்மையா..? இதுதான் ஊடக தர்மமா..? இதுதான் நீங்கள் எங்களுக்கு செய்தி சொல்லும் லட்சணமா..?
ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்..! எப்போது ஊடகங்களில் செய்தி சொல்வதில் ஊழலும், சார்பும், பொய்யும், ஆதாயமும், சமூக அக்கறையின்மையும் வந்துவிட்டதோ... அப்போதே ஒட்டுமொத்த சமூகமும் அதே பாதையில்தான் பயணிக்கும்..! விதிப்படி நம் நாடு செத்து அழிவதும்... உயிர் பிழைப்பதும்.. அரசியல்வாதிகளிடமோ, நீதிபதிகளிடமோ, சினிமாவிடமோ, கிரிக்கேட்டிடமோ அல்ல..; ஊடகத்துறையின் சிறப்பான செயல்பாட்டில்தான் உள்ளது... என அறியலாம்..!
No comments:
Post a Comment