1. IMEI தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு
3. பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனு
IMEI தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள ( 15 இலக்க) எண்ணைத் (International Mobile Equipment Identity)தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும். விஞ்ஞானிகளின் புதிய அபாய அறிவிப்பு மேஜை மன் நாற்காலியில் அமர்ந்து நாள் முழுவதும் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் சிகரெட் அல்லது வெற்றிலை பாக்கு புகையிலை உபயோகிப்பதுண்டு அவை புற்றுநோய்க்குப் பாதை போடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. தற்போதைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு என்னவெனில் நாள்முழுவதும் மேஜைகள் நாள்காலில் அமர்ந்து வேலை செய்தாலே நாளடைவில் புற்றுநோய் வந்துவிடுமாம். விஞ்ஞானிகள்தான் இந்த அபாய அறிவிப்பைக் கொடுக்கின்றார்கள்...! எதை விடுவது? சிகரெட்டை விடுவதா? அல்லது டெஸ்டாப் வேலைகளை விடுவதா? ஸ்டேட்ச்யூட்டரி வார்னிங் படங்களை எதன்மேல் போடுவது?டொபாக்கோப் பாக்கெட்டுகள் மேல் போடுவதா? டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மேல் போடுவதா? விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நாமும் கவலைப்படுகிற ஒரு காலகட்டத்தில் அனைவரும் இருக்கின்றோம். Souce - Times of India (Love Desk job) know the Risk" |
பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரின் ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில், 2008ல் குண்டு வெடித்தது. இதில், ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரை, மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமின் அளிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பிரக்யா சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால், கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பிரக்யா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,""பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவலில் இருந்தபோது, பிரக்யா சிங், உடல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானார். மோசமான வார்த்தைகளாலும் அவரைத் திட்டினர். அவருக்கு ஜாமின் அளிக்க வேண்டும்'' என்றார்.இதையடுத்து,நீதிபதிகள்,"இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல' எனக் கூறி, தள்ளுபடி செய்தனர். |
No comments:
Post a Comment