Tuesday, 27 September 2011

சமைய‌ல் ரு‌சி‌க்க ‌சில கு‌றி‌ப்புக‌ள்


சமைய‌ல் ரு‌சி‌க்க ‌சில கு‌றி‌ப்புக‌ள்


வெங்காய சூப்பில் சிறிதளவு சீஸை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும். இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.

சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும். அதனால் கொஞ்சமாக அரைத்து வைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக அலம்பி காய வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது


Image


மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.


காய்கறிகளின் சத்துக்களைப் பாதுகாக்க

Image

மென்மையான காய்கறிகளை தோலுடன் சமைக்கவும். காய்கறியை நெய்யில் வறுக்க வேண்டுமென்றால் காரம் அதிகமாக சேர்க்க வேண்டாம். போதுமான அளவுக்கு வறுத்தால் நலம். ஏனெனில் சத்துகள் வற்றாமல் இருக்கும்.

கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கிய‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு கழுவ வே‌ண்டா‌ம். நறு‌க்குவத‌ற்கு மு‌ன்பே கழு‌வி ‌விடுவது ச‌த்து‌க்களை பாதுகா‌க்க உதவு‌ம்.

பொதுவாக கா‌‌ய்க‌றிகளை ஆ‌வி‌யி‌ல் அதாவது த‌ட்டு‌ப் போ‌ட்டு மூடி வை‌த்து வேக வை‌ப்பது ந‌ல்லது.

அரை வே‌க்காடாக கா‌ய்‌க‌றிகளை வேக வை‌த்து சா‌ப்‌பிடுவது‌ம் ‌சிற‌ந்தது. க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் போ‌ன்றவ‌ற்றை முழுமையாக வேக வை‌த்து சா‌ப்‌பிடவு‌ம்.

மு‌ந்தைய நா‌ள் இரவே கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்வது ச‌த்து‌க்களை வெ‌ளியே‌ற்‌றி‌விடு‌ம். அ‌ப்படி நறு‌க்குவதாக இரு‌ந்தா‌ல் பா‌லி‌தீ‌ன் கவ‌ரி‌ல் இறு‌க்கமாக மூடி வை‌க்கவு‌ம்

No comments:

Post a Comment