Sunday, 11 September 2011

அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!


அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!

E-mailஅச்செடுக்க
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் அத்வானிக்கு எதிராக அன்னா ஹஸாரே குழுவிலுள்ள கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக மூத்தத் தலைவர் அத்வானி அறிவித்திருந்தார். அவரின் இந்த யாத்திரை குறித்து ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடைய அன்னா ஹஸாரே குழுவிலுள்ள கிரண்பேடியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

"தற்போது லோக்பால் சட்டம்தான் வேண்டும்; ரத யாத்திரைகள் அல்ல. எங்களுக்கு மறைமுக திட்டங்கள் ஏதும் கிடையாது." என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி இதுகுறித்துக் கூறும்போது, "அத்வானி மேற்கொண்ட முதல் ரத யாத்திரக்கே இன்னும் இந்த நாடு அதற்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவருடைய கடந்த யாத்திரைகள் எல்லாம் மத ரீதியான பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதன் மூலம் பலர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்னொரு யாத்திரை தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஊழலுக்கு எதிராக பாஜக தலைவர் அத்வானி மேற்கொள்ள இருக்கும் ரத யாத்திரை பற்றி குறிப்பிட்டு, "இந்த அரசியல் சவாலை முறியடிக்க அனைவரும் தயாராகுங்கள்" என காங்கிரசாருக்கு அழைப்பு விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொள்ள இருக்கின்ற ரத யாத்திரைக்கு எதிராக பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

No comments:

Post a Comment