Wednesday 10 August 2011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  
 (இறைவனின் சாந்தியும்சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)




நபிமொழி

அபூமஸ்ஊத் என்ற உக்பா இப்னு ஆமிர் பத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்:
 'நபி(ஸல்) அவர்களிடம்  ஒரு மனிதர் வந்து, ''எங்களுக்கு (தொழவைக்கும்) இன்ன நபர் தொழுகையை மிக நீட்டி விடுகின்ற காரணத்தால்நான் காலை சுப்ஹுத் தொழுகையைப் பிந்தி விடுகிறேன்'' என்று கூறினார். அன்று உரை நிகழ்த்தும் போது நபி(ஸல்) அவர்கள் கோபம் கொண்டது போல் அறவே (இதற்கு முன்) கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை. அப்போது அவர்கள் (தன் உரையில்), ''மனிதர்களே! உங்களில் வெறுப்பை ஏற்படுத்துவோர் உள்ளனர். மக்களுக்கு தொழுகை நடத்துபவர் எவரேனும் உங்களில் இருந்தால்,அவர் சுருக்(கித் தொழ வைக்)கட்டும்! நிச்சயமாக அவர் பின்னே முதியவர்குழந்தைபிற தேவைகள் உடையவர் (என பலரும்) உள்ளனர்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 649)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
 ''நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். எனக்குரியத் திண்ணையை திரையால் மூடி இருந்தேன். அதில் உருவப்படங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அதைப் பார்த்தபோதுஅதைக் கிழித்தார்கள். அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. ''ஆயிஷாவே! அல்லாஹ்விடம் மறுமை நாளில் மக்களில் மிகக் கடுமையான வேதனை பெறுபவர்கள்அல்லாஹ்வின் படைக்கும் தன்மையை தனக்கும் ஏற்படுத்திக் கொண்டவர்கள்தாம்'' என்று நபி(ஸல்)  கூறினார்கள்.  (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 650)
                                        
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
 'ஒரு சமயம்மக்சூமிய்யா குலத்தாரைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். இது குறைஷி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. ''அப்பெண் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் பரிந்து பேசுபவர் யார்?'' என்று அவர்கள் பேசிக் கொண்டனர். 'நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவரான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தவிர நபி(ஸல்) அவர்களிடம் பேச தைரியமானவர் யார் உள்ளார்?' என அவர்கள் கூறினர். எனவே உஸாமா(ரலி)அவர்கள்,நபி(ஸல்) அவர்களிடம் பேசினார். உடனே நபி(ஸல்)அவர்கள், ''அல்லாஹ்வின் குற்றவியல் சட்டங்களிலே ஒன்றில் நீ பரிந்துரை செய்கிறாயா?'' என்று கேட்டார்கள். அதன்பின் எழுந்து,உரை நிகழ்த்தினார்கள். ''உங்களுக்கு முன் இருந்தோர் அழிந்து போனதன் காரணம்,அவர்களில் வசதியானவர் திருடினால்அவரை அவர்கள் விட்டு விடுவார்கள். அவர்களில் ஏழை ஒருவர் திருடினால்அவரைத் தண்டிக்க முயற்சிப்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாகமுஹம்மதின் மகளான பாத்திமா திருடி விட்டால் கூடஅவளின் கையையும் நான் துண்டிப்பேன்'' என (தன் உரையில்) நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 651)

No comments:

Post a Comment