Wednesday 10 August 2011

ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படை சீல் பிரிவினர் ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர்


US Seals
காபூல்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படை சீல் பிரிவினர் பயணித்த ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் 31 சீல் படையினர் கொல்லப்பட்டதால் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டுக் கொன்றது அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவைச் சேர்ந்த டீம் என்ற படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள். அதே அணியினரைத்தான் தற்போது தலிபான்கள் தாக்கி வீழ்த்தியுள்ளனர்.

மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணிமிகத் திறமை வாய்ந்த அணிமிகவும் புத்திசாலித்தனமான அணி என்று அமெரிக்காவால் புகழப்படும் இந்த டீம் அணியினர் மீது தலிபான்கள் பெரும் தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருப்பது அமெரிக்காவை மட்டுமல்ல அனைவரையுமே அதிர வைத்துள்ளது.

டீம் அணியினர் பயணித்த ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் 31 வீரர்கள் கொல்லப்பட்டனர். 31 அமெரிக்கர்கள் தவிர 7 ஆப்கானிஸ்தான் கமாண்டோக்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் படைகளுக்கு ஆப்கானிஸ்தானில் கிடைத்துள்ள முதல் தனிப்பெரும் உயிரிழப்பு சம்பவம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் யாரும்பின்லேடனைக் கொன்ற படையில் இடம் பெற்றிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிரிவுதான் பின்லேடனைக் கொன்றது என்பதுகுறிப்பிடத்தக்கது.

வலிமை வாய்ந்தஅதுவும் பின்லேடனைக் கொன்ற சீல் படைக்குப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது,தலிபான்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி மேலும் பெரிய தாக்குதல்களுக்கு அவர்களைத் தூண்டலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

வார்டாக் என்ற ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ராக்கெட் லாஞ்சர் மூலம் ராக்கெட்டை ஏவி அமெரிக்க ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் விழுந்து கிடப்பதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதை அமெரிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அதிபர் ஒபாமாவும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில்நமது வீரர்களு்ம்வீராங்கனைகளும் செய்த தியாகங்களின்விரிவாக்கமாக இது அமைந்துள்ளது. இந்த தியாகம் வீண் போகாது. நிச்சயம் தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இரவில் நடந்த இந்த அதிரடி தலிபான் தாக்குதலில் மொத்தம் 39 பேர் கொல்லப்பட்டதாக நேட்டோ படைசெய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment