Monday, 2 April 2012

தொடர்-19 உலக அழிவும், மாயா இன மக்களும்'




'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' தொடர்-19


மாயன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேபந்து விளையாட்டு ன்றைவிளையாடி இருக்கின்றனர்அதனுடன் அவர்கள் உலக அழிவையும் தொடர்புபடுத்தியிருக்கின்றனர் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன்இந்தப் பந்துவிளையாட்டு ாயன்களின் மிக முக்கியமான ஒரு டங்காக அப்போதுஇருந்திருக்கின்றது என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள்அதை ஆராயப்போன சமயத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஒன்று அவர்களுக்குக்கிடைத்ததுஅதாவதுமாயன்களின் பிரதேசங்களில் மட்டும்தான் இந்தவிளையாட்டுிளையாடப்பட்டது என்று நினைத்து ஆராயச்சென்றவர்களுக்குஅதையும் தாண்டி மத்திய அமெரிக்காதென்னமெரிக்காஎனப் பல நாடுகளில் இந்தப் பந்து விளையாட்டு விளையாடப்பட்டுவந்திருக்கிறது தெரிய வந்ததுமெக்சிக்கோகுவாத்தமாலாபெலிசே,ஹொண்டுராஸ்எல் சல்வடோர் மட்டுமில்லாமல்நிகுரகுவாஅரிஸோனாஆகிய நாடுகளிலும் இது விளையாடப்பட்டு வந்திருக்கிறதுதிகம் ஏன்கரீபியன் தீவுகளிலும் (Caribbean islands), கியூபாவிலும் கூட இந்தப் பந்துவிளையாட்டுவிளையாடப் பட்டிருக்கிறதுஅப்படி விளையாடியதற்கானமைதானங்கள் அந்த நாடுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.
 அதைத் தொடர்ந்துமேலும் ஆராய்ந்தபோது ஆச்சரியங்களும்மர்மங்களும்மாயன்கள் பிரதேசங்களில் மட்டுமல்லாமல்தென்னமெரிக்கப் பிரதேசங்கள்அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்ததுஆராய்ச்சியாளர்களுக்கு இந்தஇடங்கள்ஒரு பொக்கிசப் புதையலாகவே அதற்கு அப்புறம் அமைந்து விட்டதுஎன்று சொல்லும் அளவிற்கு இருந்தன அந்த ாடுகள்அந்த நாடுகளில் உள்ளமர்மங்கள் எவை என்று நான் இங்கே ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்லப்ோனால்இத்தொடர் 2012 டிசம்பர் மாதத்திலும் முடிந்து விடாமல் ோய்விடும்ஆபத்து உண்டுஎனவே எனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் ங்களுக்காகத்தருகிறேன்இதற்கும்இப்பொழுது நான் எழுதும் தொடருக்கும் சம்பந்தம்இல்லாவிடினும் கூடதகவல் அடிப்படையில் இதை உங்களுக்குத் தரவிரும்புகிறேன்.
 மாயன்கள்பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும்அவர்களின் 'இன்காஇனம்தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறதுநாம் தென்னமெரிக்கா என்னும்பெரிய நிலத்தைஏனோ சரியாகக் கவனத்தில் எடுப்பதில்லைஅமெரிக்காஎன்றாலேஎமக்குக் கண்ணுக்குத் தெரிவது 'யுஎஸ்ஏ' (U.S.A) என்றழைக்கப்படும்ஐக்கிய அமெரிக்க நாடுகளும்கனடாவும் மட்டுமேஇந்த இரு நாடுகளுமேஅமெரிக்கா என்னும் பதத்தில் எமக்குள் அடங்கி விடுகின்றனஆனால் இவதாண்டி அதிக நாடுகளைக் கொண்டது தென்னமெரிக்கா.



இப்போ நான் சொல்லப் போவதுசாதாரண வரலாற்றுச் சம்பவம் அல்ல.பெரும் மர்மத்தை தன்னுள்ளடக்கிய ம்பவம் அதுமாயன்களின்பிரதேசத்துக்குச் சற்றுக் கீழே வாழ்ந்த, 'நாஸ்காஎன்னும் இனத்தவர் பற்றிமுன்னரே உங்களுக்குச் சொல்லியிருந்தேன்அவர்களும்தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) ாட்டில் வாழ்ந்தவர்கள்தான்அந்தப்பெரு நாட்டுக்குக் கீழே இருக்கும் நாடுதான் 'சிலி' (Chile). 'சிலிநாடுநீண்டதொருநேர் கோடு போலமேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடுஇந்தநாட்டுக்குச் சொந்தமாகமேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறியதீவின் பெயர் 'ஈஸ்டர் தீவு' (Easter Island) என்பதாகும்ஈஸ்டர் தீவுசிலிநாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும்கடல் நடுவே சிலியிலிருந்துவெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறதுமுக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத் தீவில்உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறதுஅது என்ன என்று ப்போது பார்க்கலாம்.

மனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில்கடலின் நடுவே இருக்கும் இந்தத்தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள்அத்தீவைச் சுற்றிவரிசையாகமிகப் பெரிய னிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக்காரணம்ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போலஇரண்டு மீற்றர்கள்உயரத்தில் இருந்துபத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்துவிட்டீர்களா….? உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்தமனிதச் சிலைகள்அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள்ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தனசில சிலைகள் 80தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றனயார் செய்தார்கள் இந்தச்சிலைகளைஏன் செய்தார்கள்யாருக்கும் தெரியவில்லை.


இந்தச் சிலைகள் 'மோவாய்' (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில்கணித்திருந்தாலும்சரியான கணக்குத் தெரியவில்லைஇந்தச் சிலைகளைஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள்எதற்காகத் தீவைச்சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்என்ற கேள்விகளுக்கு இன்றுவரை எவரிடமும் பதில் இல்லைஇதற்கும் வேற்றுக்கிரகவாசிகளானஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.

 இந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள்செதுக்கிய இந்தச் சிலைகளைஎப்படித் தீவின் மையப் குதியில் இருந்துபதினாறு கி.தூரத்தில் இருக்கும்கரைக்கு நகர்த்தி வந்தார்கள்அப்படி நகர்த்தி வந்ததை எப்படிநிமிர்த்தினார்கள்என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும்,கேள்விகளாகவும் எம்முன்னே நிற்கின்றனஅந்தத் தீவிலுள்ள மரங்களைவெட்டியே இவற்றை ் கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல்இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும்அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாதரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
 அந்தத் தீவில்வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக்கண்டால் அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிகநீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலைஒரு வேளை அந்தச் சிலைசெய்யப்பட்டிருந்தால்அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள்? எப்படிநகர்த்தியிருப்பார்கள்எதற்கும் விடையில்லைஎல்லாமே……எல்லாமே….!ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.


'மோவாய்' (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள்தீவைச் சுற்றிநிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல்தீவு முழுக்க நூற்றுக்கணக்கில்பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றனதலைகள்,உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான்அதிகம் ஏன்கடலுக்குள்ளும்மோவாய்கள் கிடக்கின்றன.
 




இந்தச் சிலைகள் யாருக்குஎன்ன செய்திகளைச் சொல்கின்றனஇதைமனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும்இவ்வளவு சிரமப்பட்டுஇவற்றைச் செய்ய வேண்டி காரணம் என்னஅவசியம் என்னொத்தத்தில்சிந்தித்துப் பார்த்தால், 2012 இல் உலகம் அழிகிறதோ இல்லையோஎமக்குப்பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் ன்னும் அளவிற்கு இந்தத்தீவின் ர்மங்கள் இருக்கின்றன.

 இது போலவே இன்னுமொரு ஆச்சரியமா இடம் ஒன்றும்தென்னமெரிக்காவில் உண்டுஅந்த இடத்தை ஏற்கனவே தமிழ்நாட்டில்எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 'மச்சு பிச்சு' (Machu Picchu) என்றழைக்கப்படும் மலை கரம் அதுமிக ஆச்சரியமான நகரம்இந்தமச்சு பிச்சுவை நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? 'சூப்பர் ஸ்டார்'ரஜனிகாந்தும்ஐஸ்வர்யாராயும் எந்திரன் திரைப் படத்தில் வரும் ஒருபாடலைஇந்த இடத்தில்தான் பாடுவார்கள்ந்த மச்சு பிச்சுவும்தென்னமெரிக்காவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால்இவைபற்றியெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டு போவதற்கு எமக்குக் காலம்போதாதுநம்மை மாயாவும்டிசம்பர் மாதமும் வருந்தி அழைப்பதால்இவற்றை இங்கேயே விட்டுவிட்டு மாயாவின் பந்து விளையாட்டுக்குப்போகலாம்.
 பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்துவிளையாடியிருக்கிறார்கள்அதுவும் நாம் இப்போ விளையாடும்கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து.இந்தப் ந்தை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான்உலக அழிவைஅடையாளப் படுத்துகிறது என்று சொல்லியிருந்தேன். "பந்துவிளையாட்டுக்கும் உலகம் ழிவதற்கும் என்ன சம்பந்தம்?" என்றும்உங்களுக்கு கேள்வி இப்பொழுது எழலாம்ஆனால் மாயன்களைப்பொருத்தவரை இவை இரண்டுக்குமே நிறையச் சம்பந்தம் உண்டுமாயன்கள்வை இரண்டையுமே ஒன்றாகக் கலந்து தங்கள் உலக அழிவு பற்றிச்சொல்லியிருக்கிறார்கள்.
 இன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறதுமிகப்பிரபலமாக இருக்கும் ிளையாட்டுகள் அனைத்துமேபந்துிளையாட்டுகளாகத்தான் இருக்கின்றனகுறிப்பாக பாஸ்கெட்பால்பேஸ்பால்,உதைபந்தாட்டம்கிரிக்கெட்டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால்விளையாடப்படும் விளையாட்டுகள்தான்ஆனால்உலகிலேயே மனி இனவரலாற்றிலேயேவிளையாடப்பட் முதல் பந்து விளையாட்டு என்றால்அதுமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.
 கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டைாயன்கள்விளையாடியதாகப் பதிவுகள் உண்டுஅதுவும்அவர்கள் விளையாடிய பந்துஇரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்துதப்படுத்தி,அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர்.மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் ந்துகளைஅகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்இப்போதும் அவைவிளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றனமாயன்களின் பந்து விளையாட்டு,இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்டிட்டங்களும்விதிகளும் உள்ள ஒர விளையாட்டாகவே விளையாடப்பட்டிருக்கிறதுஅதுமட்டுமில்லாமல்அந்தப் பந்து விளையாட்டு,விளையாடப்படும் மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது.மிக நேர்த்தியாகவும்அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தனிளையாட்டு மைதானங்கள்ஆங்கிலக் காப்பிட்டல் 'I' என்னும் எழுத்தைப்போல அமைந்த மைதானம்அண்ணளவாக 30 மீற்றர் நீளமும்இரண்டு பக்கம்நீளமான சுவர்களையும் ொண்டது.


மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுதற்போது விளையாடப்படும்உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்ததுபோல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம்நாம்விளையாடும் உதைபந்தாட்டமும்பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்துநாம் பெற்றதாக ருக்கலாம்.
  
 பந்து விளையாடும் மைதானத்தின் நடுவேஇரண்டு பக்கச் சுவர்களிலும்இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டுவிளையாட்டில்பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்துஇந்தப் பந்தைத் தமக்கெனஇருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப்பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.


தலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில்பங்கேற்பார்கள்அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோகால்களையோ கைகளையோதலையையோ பந்தில் டும்படியாகப் பயன்படுத்த முடியாது. "அப்படி என்றால்எப்படிப் பந்தை அடிப்பது?" என்றுதானே கேட்கிறீர்கள்.இடுப்பினாலும்முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும்இதுஎவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதாஆனாலும் மாயன்கள்அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர்.தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல,விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது,மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, 'பிட்ஷி' (Pitzi) என்றுஅழைக்கின்றனர்இந்த விளையாட்டின் போதுஇரு பக்கமும் விளையாடும்ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார்.இப்போதுள்ள 'கப்டன்' (Captain) போலஎந்த அணி தோற்கின்றதோஅந்தஅணியின் தலைவர் பூசைபுனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டுமகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார்.
 "என்னடா இதுவிளையாட்டிலும் ொலையாவிளையாட்டு என்பதேபொழுது போக்குவதற்கானதுதானேஇப்படி ிளையாடுவதும் ஒருவிளையாட்டா?" ன்று நினைப்பீர்கள்உண்மைதான். நீங்கள் நினைப்பதுசரியானதுதான்ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டுஒருபொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை.அதையும் தாண்டிப் புனிதமானது இதுஅந்தப் பந்து விளையாட்டுமொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே வர்கள்நிலைப்பாடு. "அட…! போங்கப்பா….! விளையாட்டில் தத்துவமா?தத்துவத்துடன் கொலையா….?" என்று நீங்கள் சலித்துக் கொள்லலாம்.ஆனால் அந்தத் தத்துவமேஎங்கள் உலகம் அழியும் கோட்பாட்டைஉள்ளடக்கியது என்று சொன்னால் வாயடைத்துத்தான் போவீர்கள்இதைநான் உங்களுக்குப் புரிய ைப்பதற்குமாயன்களின் வேதப் புத்தகமான, 'பொபோல் வூ' (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். 'பொபோல் வூஎன்னும் நூல் சொல்லும் கதையில் பூமிசூரியன்சூரியக்குடும்பம்பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறதுஅத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையானஇடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறதுஅந்தக் கருமை இடத்துக்குஅருகே சூரியன் சென்றால்சூரியனும்உலகமும் அழிந்து விடும் என்றும்சொல்லியிருக்கிறதுதாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன்இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.
அந்தப் பொபோல் வூ அப்படி என்ன தை சொன்னதுஅது பற்றிப்பார்ப்போமா......? இப்போது பொபோல் வூ சொல்லும் கதைக்கு வரலாம்.......!
 மாயன்களைப் பொறுத்தவரை பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வாசலாகஅமைந்த ஒரு இடம் உண்டுஅது ஒரு மிகப் பெரிய கருமையான இடம்குழிபோன்றது அதுஅந்தக் கருங் குழியில்தான் மரணத்தின் கடவுள் (God of Death)இருக்கின்றார்மரணத்தின் கடவுள் வாழும் இடத்தின் பெயர் 'ஷிபால்பா' (Xibalba).ஷிபால்பாவைப் 'பாதாள உலகம்' (Under World) என்றும், 'பயங்கரத்தின்இருப்பிடம்' (Place of Fear) என்றும் மாயன்கள் சொல்கின்றனர்.



அது போலமாயன்களுக்கு மூத்தவரா, 'ஆதி தந்தை' (First Father) என்னும்ஒருவரும் இருந்தார்அவருக்கு ஒரு இரட்டைச் சகோதரரும் இருந்தார்.இவர்கள் இருவரும் மிகத் திறமையான பந்து விளையாட்டுக்காரர்கள்.ஒருதரம் இவர்கள் இருவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்அந்தச்சத்தம் ஷிபால்பாவில் வாழும் மரணத்தின் கடவுளுக்குக் கேட்டதுஅந்தச்சத்தம் அவரது அமைதியைக் குலைத்ததுஎனவே ஆதி தந்தையையும்,அவரது ரட்டைச் சகோதரனையும் போட்டிக்குப் பந்து விளையாடஷிபால்பாவுக்கு அழைத்தார் மரணத்தின் கடவுள்ந்து விளையாட்டுக்குஅழைக்கப்பட்டதால்அந்த அழைப்பை அவர்களால் மறுக்க முடியவில்லை.அதனால்அவர்கள் பந்து விளையாடுவதற்குப் பால்வெளி மண்டலத்தின்வாசலில் அமைந்திருக்கும் கரிய இடத்துக்குச் சென்றனர்ஆனால் அங்குஅவர்கள்பந்து விளையாடப் படாமலே ஏமாற்றப்பட்டுதலை வெட்டப்பட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்த ஆதி தந்தைக்குஇரண்டு மகன்கள் இருந்தனர்அவர்களும்இரட்டையர்கள்தான்இவர்கள் இருவரும் தந்தையையும்தந்தையின்சகோதரரையும் போல பந்து விளையாட்டில் திறமைசாலிகளாக இருந்தனர்.இவர்களின் இருவரின் பெயரும் 'ஹூன் அப்பு' (Hun Ahpu), 'இக்ஸ்பலங்கா' (Xbalanque) ஆகும். "இந்தப் பெயர்களில் என்ன இருக்கிறது?" என்றுதானேநினைக்கிறீர்கள்அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன.அதற்குப் பின்னர் வரலாம்.........! ஆதி தந்தையின் மகன்கள் இருவரும் பந்துவிளையாட்டில் சிறந்து விளங்கியதால்அவர்கள் இருவரும் மரணத்தின்கடவுளால்பந்து விளையாட்டு விளையாட அழைக்கப்பட்டனர்ஆனால்அவர்களின் தந்தை இப்படியே அழைக்கப்பட்டுப் பின்னர் சதியினால் கொலைசெய்யப்பட்டதை அறிந்திருந்தார்கள் இரட்டையர்கள்அதனால் ிலதந்திரங்களைக் கையாண்டுபந்து விளையாடியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தைமரணத்தின் கடவுளுக்கு ஏற்படுத்தினர்.
 அதன்படி விளையாடப்பட்ட பந்து ிளையாட்டில் இரட்டையர்கள்,மரணத்தின் கடவுளை வென்றனர்அதனால் வர்கள் கொல்லப்படாமல்தடுக்கப்பட்டனர்ஆனாலும்பல வருடங்களின் பின்னர் மீண்டும் அவர்கள் பந்துவிளையாட்டுக்கு அழைக்கப்படுவார்கள். 'பொபொல் வூசொல்லும் கதைஇதுதான்இவற்றைக் கதையாகப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்ததில்இதில்அடங்கியிருக்கும் சம்பவங்கள் எம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. இனி நான்சொல்லப் போவதைச் சற்று நிதானமாகக் கவனியுங்கள்.
 கதையில் வரும் பெயர்களின் அர்த்தம் என்ன தெரியுமா……? 'ஹூன்' (Hun)என்றால் மாயன் மொழியில் 'ுதல்என்று அர்த்தம். 'அப்பு' (Ahpu) என்றால்'சூரியன்என்று அர்த்தம்அதாவது ஹூன் அப்பு என்றால்முதல் சூரியன் என்றுஅர்த்தம்அதன் இரட்டைச் சகோதரர்தான் 'இக்ஸ்பலங்காஎனப்படும் சந்திரன்.கதையின்படிஒவ்வொரு 2600வருசங்களும் இவர்கள் பந்து விளையாட பால்வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரி கருமையானஇடத்துக்கு அழைக்கப்படுவார்கள்விளையாட்டில் சூரியன் வென்றால்,சூரியனும்பூமியும் பிழைத்துக் கொள்ளும்சூரியன் தோற்றால் இரண்டுக்குமேஅழிவுதான்நமது நவீன விஞ்ஞானத்தின் மூலம் இந்தக் கறுப்பு இடத்தை நாம்அவதானித்து இருக்கிறோம்ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் நமத பூமியும்,சூரியனும்பால்வெளி மண்டலமும் ஒரே நேர் கோட்டில் ரும்போதுஇந்தகருமையான இடத்திற்கு மிக அருகில் சூரியன் வந்து விடுகிறது என்பதும்கணிக்கப்பட்டிருக்கிறது.  
ஒவ்வொரு 26000 வருசத்துக்கு ஒருதரம் மரணத்தின் கடவுள் பந்து விளையாடஅழைப்பார்அதில் சில சமயங்களில் இரட்டைச் சகோதரர்கள் தப்பலாம்.ஆனால் அடுத்த பந்து விளையாட்டுக்குப் பின்னர் அழைக்கப்படுவார்கள்.அதற்கு 26,000 வருசங்கள் தேவைஒவ்வொன்றிலும் தப் வேண்டும். 2012டிசம்பர் 21ம் திகதி தப்பவே முடியாது என்பதுதான் மாயன்களின் கணிப்பு.
 இப்போதுமாயன்கள் எப்படித் தாங்கள் விளையாடும் பந்து விளையாட்டில்இந்தக் கதையைக் கொண்டு வந்து பொருத்துகின்றனர் என்று பாருங்கள்பந்துவிளையாடும் மைதானம்தான் 'பால் வெளி மண்டலம்' (Milky Way). அதன்நடுவே உள்ள வளையங்கள்தான் 'கரும்பள்ளம்' (Dark Rift). விளையாடப்படும்பந்துதான் எங்கள் சூரியன்அந்தப் பந்தை யார் எந்த வளையத்தினுள்போடுகின்றனரோஅதைப் பொறுத்துபோட்டவருக்கு வெற்றி என்றுகருதப்பட்டு ிளையாட்டு முடிவடைகிறதுஅதாவது பால்வெளிமண்டலத்தில் இருக்கும் கரும்பள்ளத்தை நோக்கி நகரும் ூரியன்அதனால்அழிந்துவிடுகிறதுஅத்துடன் எல்லாமே முடிவடைந்து விடுகிறதுஅதன்அடையாளமாக விளையாட்டின் அணித் தலைவரின் தலை வெட்டப்படுகிறது.இந்தக் கதையையும்நான் இந்தத் தொடரில் முன்னர் விவரித்த 26000 வருடக்கணக்குகளினால் எப்படி பூமி அழியலாம் என்று சொன்னவற்றையும்ஒப்பிட்டுப் ாருங்கள்.
 இவ்வளவு திட்டவட்டமாக மாயன்கள் உலகம் அழியும் என்கிறார்களே,உண்மையில் உலகம் அழியுமாஇல்லை இது வெறும் காரணமே இல்லாததேவையற்ற பயம்தானாஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படிஅழியும்இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம்எஞ்சியிருப்பவைஅத்துடன் கூடக் கொஞ்ச பயமும்.
 உலகம் அழியுமாஅழிந்தால்எப்படி அழியலாம்அல்லது தப்பலாம்?இவற்றை எல்லாம் அடுத்த தொடரில் பார்ப்போமா...?

No comments:

Post a Comment