அலங்கார மீன்கள் வளர்ப்பு
சுய தொழில்கள் வரிசையில் இனி பல வகையான மீன்கள் வளர்ப்பு பற்றிய சில பதிவுகளை தொடர்ச்சியாக காணலாம். இத் தொழில்களும் நல்ல லாபம் தரக் கூடிய தொழில்கள் தான். போதிய இட வசதியும், இத் தொழில் செய்ய ஆர்வமும் உள்ளவர்கள் தொடங்குவதற்கேற்ற தொழில் இது. சைவப் பிரியர்கள் கொஞ்சம் முகம் சுளிக்கலாம். சாப்பிடும் உணவாக கருதாமல் இதையும் ஒரு தொழிலாக மனதில் கொண்டு படிக்கலாமே!
வளர்ப்பு மீன்கள்
வளர்ப்பு மீன்கள் இனப்பெருக்கத் தன்மையைப் பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள்பொரி முட்டையிடுவன.முட்டையிடும் மீன்கள் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடங்களில் முட்டையிடுபவை முட்டையைப் புதைத்து வைப்பவை, வாயில் முட்டையைப் பாதுகாப்பவை கூடுகட்டுபவை முட்டையை சுமந்து கொண்டே திரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன.
முட்டையிடுபவை
முக்கியமான முட்டையிடும் இனங்களான பார்ப்ஸ் ரேஸ் போராஸ், தங்க மீன், டெட்ராய்,டேனியோஸ், பேட் டாஸ், ஏஞ்சல்மீன், கோரமிஸ் போன்றவை உள்ளன. இதில் பார்ப்ஸ் முக்கிய இனமாகும். இந்தியாவில் ரோஸி பார்ப், அருளி பார்ப், ஸ்ரைப்டு பார்ப் போன்ற பார்ப்ஸ் இனங்கள் காணப்படுகின்றன. அதேபோல் ஜெயின்ட் டேனியோ, முத்து டேனியோ, ஸெப்ரா டேனியோ போன்ற ஜெய்ன்ட் இனங்களும் மெலிந்த ராஸ் போரா,குளோலைட் ராஸ்பெரா மற்றும் சிஸோர்ட்டெயில் போன்றவை முக்கியமானவை. மீன் வளர்ப்பிற்குத் தங்க மீன் மிகவும் ஏற்றது. கோமெட், ஒரண்டா, ரெட்கேப், வெயி ல் டெய்ல் பபுள் ஐ, போன்ற இரகங்கள் இதில் அடங்கும். இம்மீன்கள் 20 செ. மீ நீளும் வரை வளரக் கூடியவை. 6 செ. மீ நீளம் வளர்ந்த உடன் இனப்பெருக்கம் செய்கின்றன.
டெட்ராஸ் என்பவை 3- 8 செ.மீ நீளம் வரை மட்டுமே வளரக்கூடியவை. இதன் தாயகம் தென் அமெரிக்கா கறுப்பு விடோ டெட்ரா, ஃபிளேம் டெட்ரா, நியோன் டெட்ரா மற்றும் கார்டினல் டெட்ரா போன்றவை அதிகம் வளர்க்கப்படும் இனங்களாகும். சைமிஸ் ஃபைட்டர் என பரவலாக வழங்கப்படும் பீட்டா ஸ்பிலென்டர்ஸ் பல நிறங்களில் காணப்படுகிறது. பிற ஆண் மீன்களின் முன்பு இம்மீன்கள் பயங்கரமாகக் காணப்படும். கோர்மீன்களில் மூன்று புள்ளி கோர்மி, முத்து கோர்மி, நிலவொளி கோர்மி, பெரிய கோர்மி, மற்றும் முத்தமிடும் கோர்மி போன்றவை முக்கிய இனங்கள்.
வளர்ப்பு மீன்கள் இனப்பெருக்கத் தன்மையைப் பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள்பொரி முட்டையிடுவன.முட்டையிடும் மீன்கள் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடங்களில் முட்டையிடுபவை முட்டையைப் புதைத்து வைப்பவை, வாயில் முட்டையைப் பாதுகாப்பவை கூடுகட்டுபவை முட்டையை சுமந்து கொண்டே திரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன.
முட்டையிடுபவை
முக்கியமான முட்டையிடும் இனங்களான பார்ப்ஸ் ரேஸ் போராஸ், தங்க மீன், டெட்ராய்,டேனியோஸ், பேட்
டெட்ராஸ் என்பவை 3- 8 செ.மீ நீளம் வரை மட்டுமே வளரக்கூடியவை. இதன் தாயகம் தென் அமெரிக்கா கறுப்பு விடோ டெட்ரா, ஃபிளேம் டெட்ரா, நியோன் டெட்ரா மற்றும் கார்டினல் டெட்ரா போன்றவை அதிகம் வளர்க்கப்படும் இனங்களாகும். சைமிஸ் ஃபைட்டர் என பரவலாக வழங்கப்படும் பீட்டா ஸ்பிலென்டர்ஸ் பல நிறங்களில் காணப்படுகிறது. பிற ஆண் மீன்களின் முன்பு இம்மீன்கள் பயங்கரமாகக் காணப்படும். கோர்மீன்களில் மூன்று புள்ளி கோர்மி, முத்து கோர்மி, நிலவொளி கோர்மி, பெரிய கோர்மி, மற்றும் முத்தமிடும் கோர்மி போன்றவை முக்கிய இனங்கள்.
அள்பொரிமுட்டையிடுபவை
இதில் வெளிவரும் முட்டையிடும் மீன்களுடன் ஒப்பிடும்போது குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவு இம்முறை இனப் பெருக்கம் சற்று எளிதானது. இதில் குஞ்சுகளின் வளர்ச்சி தாய் மீனின் வயிற்றுக்குள்ளேயே நடைபெற்று 4 வாரங்களுக்குப் பின்பே பிரசவிக்கப்படுகின்றன. கப்பி, கறுப்பு மொல்லி, கத்திவால், பிளாட்டி போன்றவை முக்கிய குஞ்சு பொரிக்கும் இனங்களாகும். சராசரியாக 50 – 100 குஞ்சுகளைப் பிரசவிக்கும் சரியான அளவு உணவு கொடுத்து எல்லா மீன்களுக்கும் முறையாகப் பராமரித்தால் ஒன்றை ஒன்று மீன்களே கொன்று திண்ணுவதைத் (தன் இனத்தைத் தானே உண்ணுவதைத்) தவிர்க்கலாம். மீன்களின் எண்ணிக்கையும் பெருகும்.
இதில் வெளிவரும் முட்டையிடும் மீன்களுடன் ஒப்பிடும்போது குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவு இம்முறை இனப் பெருக்கம் சற்று எளிதானது. இதில் குஞ்சுகளின் வளர்ச்சி தாய் மீனின் வயிற்றுக்குள்ளேயே நடைபெற்று 4 வாரங்களுக்குப் பின்பே பிரசவிக்கப்படுகின்றன. கப்பி, கறுப்பு மொல்லி, கத்திவால், பிளாட்டி போன்றவை முக்கிய குஞ்சு பொரிக்கும் இனங்களாகும். சராசரியாக 50 – 100 குஞ்சுகளைப் பிரசவிக்கும் சரியான அளவு உணவு கொடுத்து எல்லா மீன்களுக்கும் முறையாகப் பராமரித்தால் ஒன்றை ஒன்று மீன்களே கொன்று திண்ணுவதைத் (தன் இனத்தைத் தானே உண்ணுவதைத்) தவிர்க்கலாம். மீன்களின் எண்ணிக்கையும் பெருகும்.
முட்டையிடும் மீன்களின் இனப்பெருக்கம்
ஆண், பெண் மீன்களில் தனித்தனி ஹார்மோன் சுரக்கின்றது. முட்டையிடுதலின் போது பெண் மீன்கள் நீரில் முட்டைகளை இடும் அதே நேரம் ஆண் மீன்கள் அம்முட்டையின் அருகே வந்து மீன் விந்தினை வெளியிடுகின்றன. இதன் மூலம் அம்முட்டைகள் தாய் மீனின் உடலுக்கு வெளியில் நீரிலேயே கருவுருகின்றன. அடைகாக்கும் முறையைப் பொறுத்து முட்டையிடும் மீன்கள் 5 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
ஒட்டாத முட்டைகளை தூவு பவை
ஜெப்ரா மீன்கள் (டேனியோ இனத்தைச் சேர்ந்தவை). இடும் முட்டைகள ்எங்கும் ஒட்டாமல் நீரில் மிதந்துகொண்டிருக்கும். பிற இனங்களைப் போலவே ஜெப்ரா இனங்களும் தன் முட்டைகளை இட்டபின் தானே உண்ணும் வழக்கமுடையவை. இதன் தற்காப்பு நடவடிக்கையாக அம்முட்டைகளைச் சுற்றி குமிழிகளை விடுகின்றன.
இனப்பெருக்க காலத்தில் ஆண், பெண் மீன்களின் விகிதம் 2:1 அல்லது 3:1 என்றவா று பராமரிக்கப்பட வேண்டும். ஆண் மீன்களுக்கு 1 நாள் முன்னதாகவே பெண் மீன்களை இனப்பெருக்கத் தொட்டியில் விட வேண்டும். வெப்பநிலை சாதகமாக இருந்தால் முட்டைகள் 2 லிருந்து 3 நாட்களு க்குள் பொரித்து விடும். சின்னஞ்சிறு குஞ்சுகள் பொரிக்கத் தொடங்கும்போதே பெரிய மீன்கள் தொட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும். பொரிக்கும் குஞ்சுகள் மஞ்சள் கருவை உறிஞ்ச 2 நாட்கள் தேவைப்படும். பின்பு 4நாட்கள் வரை நுண்ணுயிரி உணவு அளித்தல் வேண்டும். சக்கரவான நுண்ணுயிரிகளையும், விலங்கின மிதவை உயிரிகளையும் 1 வாரத்திற்குக் கொடுக்கலாம். நாளடைவில் பொடியாக்கப்பட்ட மீன் உணவுகளை அளிக்கலாம்.
ஒட்டும் மிதவை முட்டைகள்
தங்க மீன்கள் (காரிகஸ் இனம்) இனப்பெருக்கப் பண்புகள் தோன்றிய பின்பு ஆண்,பெண் மீன்களை 24”x 12” x 15” அளவுடைய வட்டவடிவ தொட்டிகளிலோ, அல்லது இரும்பு சிமெண்ட் தொட்டிகளிலோ (3.5 அடி x 2.5 அடி) விடப்படுகின்றன. இத்தொட்டிகளைப் பயன்படுத்தும் முன்பு 1 பிபிஎம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலால் நன்கு கழுவ வேண்டும். வடிக்கப்பட்ட குளத்து நீருடன் நிலத்தடி நீரையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். இனப்பெருக்கத் தொட்டியை இளங்காலை சூரிய வெளிச்சம் மட்டும் சிறிது நேரம் படக்கூடிய மற்ற நேரங்களில் சூரிய ஒளியற்ற இடமாகப் பார்த்து வைக்க வேண்டும். தங்க மீன்களின் முட்டைகள் ஒட்டும் தன்மையுள்ளதால் இவை ஒட்டியிருக்கத் தகுந்தவாறு நீரினுள் மூழ்கியிருக்குமாறு செயற்கை வலைகளையோ ஹைடிரில்லா போன்ற தாவரங்களையோ தொட்டியினுள் வைக்க வேண்டும். வலைகள் நீரின் மேற்புறத்திற்கு சற்று மூழ்கிய நிலையில் வைக்கப்பட வேண்டும். வெப்பநிலை 200 யிலிருந்து 300 ச ெல்சியஸ் வரை பராமரிக்கப்பட வேண்டும்.
பார்ப்ஸ் சிறு மீன்கள், எப்போதும் கூட்டமாகத் திரியும் மீன் இனமான ராஸ்போரா இனத்தைச் சேர்ந்தவை. 250 - 280 செல்சியஸ் வரை இதன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வெப்பநிலை. இதன் இனப்பெருக்கம் சற்று கடின மானதானாலும் பெண் மீன்கள் 250முட்டைகள் வரை இடும். இது சற்று அமிலத்தன்மையுடைய (அமிலகாரத்தன்மை 5.5)சூழ்நிலையை யே விரும்பும் இனப்பெருக்கத்திற்குத் தயாராயுள்ள ஆண், பெண் மீன்களை இனப்பெருக்கத் தொட்டிக்குள் விடவேண்டும். இத்தொட்டியினுள் தட்டையான இலையுடைய தாவரங்களை வைக்க வேண்டும். இந்த இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும் முட்டைகளை இட்டபின் பெண் மீன்கள் மெலிந்து காணப்படும். இதை வைத்து முட்டையிடுதல் முடிந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். உடனே பெரிய மீன்களைத் தொட்டியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். முட்டையிட்ட 24 லிருந்து 36 மணி நேரத்திற்குள் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கிவிடும். இக்குஞ்சுகள் 3 – 5 நாட்களுக்குள் நன்கு நீந்தக் கற்றுக் கொண்டு விடும். இவைகளுக்கு நுண்ணுயிரி உணவு அளித்தல் வேண்டும். வளர்ந்த பின்பு விலங்கு மிதவை உயிரினங்களை (மோய்னா மற்றும் டாப்னியா போன்றவை) உணவாகக் கொடுக்கலாம்.
முட்டையிட்டுப் புதைக்கும் சில மீன் இனங்களில் கில்லி மீன்கள் (அப்லோ செய்லஸ் இனம்) குறிப்பிடத்தக்க ஒன்று. இவை நன்கு அடர்த்தியாகத் தாவரங்களைக் கொண்டுள்ள மீன் தொட்டியினுள் மண்ணில் ஆழமாகச் சென்று முட்டையிடுகின்றன. இம்மீன்கள் நன்கு குதிக்க வல்லவை, ஆகையால் மூடப்பட்ட தொட்டியில் வளர்க்க வேண்டும். மண் உலர்ந்த பிறகும் கூட இம்முட்டைகள் பல வாரங்கள் சில மாதங்கள் வரை வறண்டசூழ்நிலையில் இருக்கும். பின்பு ஈரப்பதம் கிடைத்த உடன் குஞ்சு பொரிக்கக்கூடியவை.
கூடு கட்டுபவை
கோர்மி, சியாமீஸ் பைட்டர் மற்றும் ஏஞ்சில்மீன் போன்றவை கூடு கட்டி முட்டையிடுபவை. இவ்வகை மீன்கள் தங்கள் முட்டைகளைப் பாதுகாக்க குமிழிகளை கூடாக அமைக்கின்றன. பெரும்பாலும் இக்குமிழிகள் ஆண் மீன்களால் உண்டாக்கப்படுகின்றன.
தகவல்:
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், 2006
அலங்கார மீன்கள் வளர்ப்பு
இன்றைய தேதியில் இந்தியாவின் மி க முக்கியமான வண்ண மீன்வளர்ப்பு மையம் என்றால் அது சென்னைதான்! கடந்த இரண்டுஆண்டுகளில் தமிழ்நாட்டில் வண்ண மீன்
வளர்ப்புத் தொழில் இரண்டுமடங்கா க வளர்ந்திருப்பது மிகப்பெரிய வ ளர்ச்சி.
வளர்ப்புத் தொழில் இரண்டுமடங்கா
‘நம்மால் எப்படி திடீரென்று மீ
இதோ வழிகாட்டுகிறார் மாதவரத்தி
மைய’த்தின் பேராசிரியர்ஃபெலிக்
வண்ண மீன்கள் அல்லது அலங்கார மீ
கருதுவது சிங்கப்பூரைத்தான்.ஆன
தான் அதிகமான வண்ணமீன்கள் உற்
இடத்தை சென்னை பிடித்துவிட்டது.
வண்ண மீன் வளர்ப்புத் தொழிலில்
இன்றைய நிலையில் நமக்குத் தேவை
மிகக் குறைந்த முதலீட்டில், மி
இருந்தால் இந்தத் தொழிலில் இறங்
என்கிற அவசியம் இல்லை. காலையில்
நான்கு மணி நேரம் உழைத்தால் போ
”மீன் வளர்ப்பு பற்றி ஒன்றுமே த
”பயந்து நடுங்குகிற அளவுக்கு இத
வளர்ப்பது எப்படி என்கிற பயிற்
தமிழ்நாட்டில் எந்தப் பகுதியை எ
அடுத்து நல்ல தண்ணீர் வசதி. பூ
இந்த மீன்களை எங்கே வாங்கமுடியு
மீன்களைவிற்கிறவர்களிடமிருந்து
மிகப்பெரிய அளவில் இடமும் தேவை
நீங்கள் ஆயிரக்கணக்கில் மீன்களை
தினப்படிசெலவும் குறைவுதான். வண
மீன்களையும் வளர்க்கவேண்டிய அவச
தேவையான தொழில்நுட்பம் பற்றிச்
”இது மிக எளிமையானது. சிறிய அளவ
தொட்டிகளைக் கட்டி, மீன்களை உற்
உணவைஎப்படித் தயார் செய்வது என்
”மீன்களை வளர்த்தபிறகு எங்கே போ
இருக்கும்பட்சத்தில் வண்ணமீன்
அவர்களே வாங்கிக்கொள்வார்கள். இ
என்றார் அவர்.
வண்ண மீன்களை வளர்த்தால் நல்ல வ
மத்திய அரசாங்கம்பல உதவிகளைச் ச
வளர்ப்பவர்களுக்கு மானியம் உள்
வண்ணமீன்களை வளர்க்க நினைக்கி
”கடல்சார் பொருள் ஏற்றுமதி வளர்
மீன்வளர்க்க நினைக்கும் ஒருவரு
வண்ண மீன்களை வளர்ப்பவர்களுக்கு
வளர்ப்பவர்களிடம் நாங்கள் முதலி
அவர்களிடம்தான் பணத்தைக்கொடுப்
வண்ண மீன்களை தமிழகத்தின் பல பக
செய்யும் தலைமைக் கேந்திரமாக இர
”நிறைய வளர்ச்சி உடைய இந்தத் தொ
கமர்ஷியல் கேட்டகிரியில்கட்டணம்
அதற்கு தமிழக அரசாங்கம் உத்தரவு
இந்தத் தொழிலில் இருப்பவர்கள் க
நினைப்பவர்களுக்கு நிச்சயமாக வண
வண்ண மீன் வளர்ப்பு
இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே வருவாய் ஈட்ட வழிகாட்டுகிறது. வண்ண மீன் வளர்ப்பு + விற்பனைத்தொழில்.இந்தியாவில் கடல் மற்றும் குளம், குட்டைகளில் வளரக் கூடிய ஆயிரக்கணக்கான வண்ண மீன்கள் உள்ளன. இவற்றை நம் வீடுகளில் எந்த சீதோஷண நிலையிலும் வளர்க்க முடியும். கண்ணாடி பாட்டில் முதல் பெரிய அளவிலான தொட்டிகள் வரை அமைத்து இவற்றை வளர்க்கலாம்.
நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் சில நிமிடங்கள் இவற்றின் பராமரிப்புக்கு ஒதுக்கினால் போதும். இல்லத்தரசிகள் இத்தொழில் மூலம் வருமானம் காணலாம்.
வண்ண மீண்களுக்கு தற்போது நல்ல விற்பனை சந்தை உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தை நம்புவோர் சைனீஸ் ஃபெங்சூயி முறை வாஸ்து பரிகாரமாக மீன் தொட்டிகளை வீடுகளில் வைப்பதுண்டு. இன்றைக்கு இத்தகைய மீன்தொட்டிகளை வைப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
உள்ளூர் விற்பனை தவிர வெளியூர்களுக்கும் இந்த மீன்களை பெரிய அளவில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வெளி நாடுகளுக்கும் இந்த மீன்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு பெருகியுள்ளது.
இந்த வண்ண மீன்களுக்கான உணவு பாக்கெட்டுகள் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. விலையும் சொற்பமே. வண்ண மீன்கள் வளர்ப்பதற்கு ஒரு முறை சொற்ப அளவில் முதலீடு செய்தாலே போதும்.
ஒரு ஜோடி வண்ண மீன்களை ரூ.5-க்கு விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 எளிதாக சம்பாதிக்க இயலும்.
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் வண்ண மீன்கள் வளர்ப்பது, அதிகம் காணப்படுகிறது. உலக அளவில் செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் எண்ணிக்கைக்கு அதிகமாக வண்ண மீன்கள் வளர்ப்போர் எண்ணிக்கையும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் பெறுவது புகைப்படம் எடுப்பது, அடுத்து வண்ண மீன்கள் வளர்ப்பது என்பதை மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வண்ண மீன்கள் ஓட்டல்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், நீண்டநேரம் பொது மக்கள் காத்திருக்கும் இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் ஆகியவற்றில் இடம்பெற்று வருகின்றன.
வீடுகளில் இவை அழகு அம்சமாக இடம் பெறுகின்றன. வெளியில் சென்று மன அழுத்தத்தோடு வீடு திரும்பும் நிலையில் இந்த மீன்களை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் மன அழுத்தம் குறைவதும், ரம்மியமான சூழல் மனதில் ஏற்படுவதும் இயற்கை.
மீன்களுக்கு உணவிடும் முறை, தண்ணீர் மாற்றுதல், ஆண், பெண் மீன்களை அடையாளம் காணுதல். முட்டையிடும் மீன் வகைகளில் அம்முட்டைகளை தனியாக பிரித்தெடுத்தல் ஆகியவற்றை தெரிந்துகொள்ளுதல் மீன் வளர்ப்பு அடிப்படை அம்சம் ஆகும்.
மீன் தொட்டிகளை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். இரும்புக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சிலிக்கான் பேஸ்ட் மூலம் கண்ணாடிகளை ஒட்டி தொட்டியாக உருவாக்கலாம்.
மீன் தொட்டிகளால் சுகாதாரச் சிர்கேடு, கொசு பரவுவதாக சிலர் புகார் தெரிவிப்பதுண்டு. அது தவறு. மீன்களின் முக்கிய உணவு கொசுவின் லார்வா. எனவே இயற்கையாகவே கொசுக்களின் உற்பத்தியை இவை தடை செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீரை நீண்ட நாள் மாற்றாமல் உணவு பொருள் கசடுகளால் மாசு ஏற்படும் நிலையிலே மீன் தொட்டிகளில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இறந்துவிடும் மீன்களை உடனடியாக அகற்றுவது அவசியம்.
பெரிய அளவில் மீன்கள் வளர்க்கப்படும் போது அவற்றுக்கு சில நோய்கள் வருவதுண்டு. அவற்றுக்கான தடுப்பு மருந்துகளும் தற்போது உள்ளன.
மீன் பராமரிப்பவர்களுக்கு தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் இல்லை.
வண்ண மீன்களை அதிக அளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மரைன் புராடக்ட் எக்ஸ்போர்ட் டிவிஷன் வழிகாட்டுகிறது.
'வருமானத்தை பெருக்கும் வண்ண மீன்கள்!" *
*''அ*த்தியாவசியப் பொருட்களை கையில் எடுத்தால்தான் பிசினஸில் ஜெயிக்க முடியும் என்பதில்லை. மனசுக்கு சந்தோஷம் தருகிற விஷயங்களில் முதலீடு செய்தாலும் முதலாளியாக ஜொலிக்கலாம்'' என்கிற சுபிதா பிரசாத், கலர் மீன்கள் வளர்ப்பு பிசினஸில் அட்டகாச லாபம் சம்பாதிக்கிறார். சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இவர், கடந்த பதினாறு வருடங்களாக இந்தத் தொழிலை செய்து வருகிறார்.
அவருடைய வீட்டின் முன்பாதி முழுக்கக் கடையாக மாறியிருக்க, சுற்றிலும் இருக்கும் தொட்டிகளுக்குள் வண்ண வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அவற்றை ரசித்தபடியே தன் பிசினஸ் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் சுபிதா..
''எனக்குக் கல்யாணமான புதுசுல என் கணவருக்கு எந்த வேலையுமே சரியா அமையல. 'ஏதாவது பிசினஸ் பண்ணலாமா?'னு அவர் என்கிட்ட கேட்டப்ப எனக்கு உதிச்ச ஐடியாதான் இந்த 'அக்வேரியம் பிசினஸ்'. எங்க வீட்டுலயே சின்னதா ஒரு ரூமை ஒதுக்கி, கடையை ஆரம்பிச்சோம். கிடைச்சிருக்குற வரவேற்பால இப்போ நல்லா டெவலப் ஆகியிருக்கு''
என்றவரிடம், இந்த வரவேற்புக்கான காரணத்தைக் கேட்டோம்..
''முன்னெல்லாம் பெரிய பணக்கார வீடுகள்லதான் கலர் மீன் வளர்ப்பாங்க. இப்ப மிடில் கிளாஸ் குடும்பங்கள்லயும் நிறைய பேர் இதுல ஆர்வமா இருக்காங்க.
தவிர, வாஸ்து மீன்கள் பத்தின நம்பிக்கையும் மக்கள்கிட்ட அதிகமா இருக்கு.
அரவானாங்கிற வகை வாஸ்து மீன்கள் ரொம்ப நல்லா போகுது. வீட்டுக்கு வர்ற
கெடுதலையெல்லாம் இந்த மீன் எடுத்துக்-கிட்டு, தங்களை ஆபத்துல இருந்து
காப்பாத்துறதா நிறைய பேர் நம்புறாங்க. வாஸ்து மீன்லயே பெரிய சைஸ் மீன்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கெல்லாம் போகும்'' என்று இந்தத் தொழில் ஜொலிப்பதன் காரணம் சொன்னவர், மீன் வளர்ப்பைத் தொடங்க என்னவெல்லாம் தெரிந் திருக்க வேண்டும் என்பது பற்றிச் சொன்னார்..
''கிராமப்புறங்கள்ல 'ஆழம் தெரியாம காலை விடாதே'னு ஒரு பழமொழி சொல்வாங்க. அது இந்தத் தொழிலுக்கும் பொருந்தும். மீன் வளர்ப்பு பத்தி 'ஏ டூ இஸட்' விஷயங்களை தெரிஞ்சிக்கிட்ட பிறகுதான் இதை ஆரம்பிக்கணும்.
முதல்ல, எந்த மாதிரி மீன்கள் வாங்கினா நல்லா வியாபாரம் ஆகும்னு தெரியணும். விலை குறைவாவும் தரமாவும் எந்த இடத்துல மீன்கள் கிடைக்கும்னு தெரிஞ்சு, அங்கே கொள்முதல் பண்ணலாம். கோல்டன் ஃபிஷ், மாலிஸ், கப்பீஸ், ரெட் சோட்டல், பிளவரான், சுறா குட்டிகள், டேங்க் கிளீனர் மாதிரியான மீன்களைத்தான் நிறைய பேர் விரும்பி
வாங்குறாங்க. இந்த மீன்களோட தன்மை, இது என்ன மாதிரியான சூழல்ல ஆரோக்கியமா வளரும்.. இதுக்கு சாப்பாடு எப்படி தரணும்.. இப்பிடி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சுக்கணும்..'' என்றவரிடம், இதில் கிடைக்கும் லாபம் பற்றி விசாரித்தோம்..
''சின்ன சைஸ் மீன்கள்னா ஜோடி எட்டு ரூபாய்க்கு வாங்கி, பன்னிரண்டு முதல்
பதினஞ்சு ரூபாய் வரைக்கும் விக்கலாம். பெரிய மீன்களா இருந்தா ஜோடி முந்நூறு ரூபாய்ல இருந்து மூவாயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகும். மீன்களோட நிறம், உடல் அமைப்பு, துறுதுறுப்பு இவற்றைப் பொறுத்து மீன்களோட விலையை அதிகரிக்கலாம்.
இந்தத் தொழில்ல முக்கியமான விஷயமே கஸ்டமர் கேர்தான். மீன் வாங்கறவங்களுக்கு மீன்களைப் பத்தி எதுவுமே தெரியாது. வீட்டுக்கு வாங்கிட்டுப் போனதுமே மீனுக்கு ஏதாவது ஆயிடுச்சுனா, தரமில்லாத மீனை கொடுத்துட்டதா நம்மளைத்தான் குற்றம் சொல்லுவாங்க. அதனால மீன் வாங்கறவங்ககிட்ட, தொட்டியை சுத்தம் பண்றதுல ஆரம்பிச்சு, மீனுக்கான உணவு, அதுக்கு உடல்நிலை சரியில்லாம போனா என்ன பண்ணணும்ங்கிறது உட்பட மொத்த பராமரிப்பு டிப்ஸையும் நாமதான் சொல்லணும்..''என்றவர், இது சார்ந்த மற்ற வருமானம் பற்றியும் சொன்னார்..
''சிலர் மீன் மட்டும் வாங்குவாங்க. ஆனா, சிலர் மீன்களோட சேர்த்து தொட்டியில
வைக்கற மாதிரியான கண்ணாடி கற்கள், செயற்கை புற்கள், கூழாங்கற்கள், முதலை, பாம்பு போன்ற ரப்பர் பொம்மைகள், தண்ணீரை சுத்தம் செய்றதுக்காக தொட்டிக்குள்ள வைக்குற ஃபில்டர்கள், மீன் உணவு, மருந்து, மீன் பிடிக்குற வலைகள்..னு மீன் வளர்ப்புக்குத் தேவைப்படுற எல்லாத்தையும் கேப்பாங்க. அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரியான பொருட்களை வாங்கி விக்கலாம். வேலைக்கு ஆட்கள் இருந்தா, மீன்தொட்டிகளைக்கூட வீட்டுலயே செய்து விக்கலாம்.
இது தவிர, இன்னொரு சைடு பிசினஸூம் இருக்கு. வீடுகள்லயும் ஆபீஸ்கள்லயும் மீன் தொட்டிகளை சுத்தம் செய்றதுக்கு கான்ட்ராக்ட் எடுக்கலாம். ஒருமுறை கிளீன் பண்றதுக்கு 100 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரை வசூலிக்கலாம். என் கணவர் கூட அந்த கான்ட்ராக்ட்லதான் இப்ப பிஸியா இருக்கார்..'' என்று நம்பிக்கையோடு முடித்தார் சுபிதா பிரசாத்.
மீன் வளர்ப்பு பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? * *என்ற
எண்ணில் சுபிதாவைத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment