Wednesday, 4 April 2012

Luxury hotel in space by 2012 முதல் விண்வெளி ஓட்டல் ‘கேலாட்டிக் சூட்’!


முதல் விண்வெளி ஓட்டல் ‘கேலாட்டிக் சூட்’!
galactic-suite1.jpg

லகின் முதல் விண்வெளி ஓட்டலான ‘கேலாடிக் சூட்’ 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த ஓட்டலில் 3 நாள் தங்க, கட்டணம் ரூ.20.7 கோடி.
விண்வெளி ஆராய்ச்சியில் நிபுணராகத் திகழ்ந்த முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட் இந்த விண்வெளி ஓட்டலை நிர்மாணித்து வருகிறார்.
3 நாள்கள் தங்க, ரூ.20.7 கோடி செலுத்துபவர்களுக்கு பயணத் தேதிக்கு முன்பாக 8 வாரங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு முறையும் 4 பேர் ஓட்டலுக்குச் செல்லலாம். அவர்களுடன் 2 விண்வெளி வீரர்களும் பயணிப்பர். பூமியில் இருந்து 450 கி.மீ மேலே அமைந்துள்ள ஓட்டல் என்பதால் விருந்தாளிகள் மிதக்க வேண்டியிருக்கும். எனவே இவர்களும் விண்வெளி வீரர்களுக்கான வெல்க்ரோ உடைகள்  அணிய வேண்டும். ஓட்டல் அறைகளின் சுவரைப் பிடித்தபடி தான் தங்களுக்கான இடத்தை இவர்கள் அடைய முடியும்.
கேலாட்டிக் சூட்டுக்கு ராக்கெட் மூலம் செல்ல ஒன்றரை நாட்கள் பிடிக்கும். மணிக்கு 0 முதல் 30ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் சுற்றும் இந்த ஓட்டல், பூமியை 80 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றிவரும். இந்த கணக்குப்படி பார்த்தால் இந்த ஓட்டலில் தங்குபவர்கள் 24 மணி நேரத்தில் சூரியன் தோன்றி மறைவதை 15 முறை பார்த்து ரசிக்க முடியும்.
விண்வெளி ஓட்டலில் தங்க இதுவரை 200 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 43 பேர் பதிவு செய்துள்ளதாகவும் இதற்கான இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த ஓட்டலில் காபி சாப்பிட உங்களுக்கும் ஆசையா? அப்படின்னா 21 கோடி ரூபாயை கையில் வைத்துக்கொண்டு www.galacticsuite.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாமே!
இணையத்திலிருந்து 

No comments:

Post a Comment