Monday, 2 April 2012

எச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம் !!!!!!!


அஸ்ஸலாமு அலைக்கும்,

நன்றி: சகோதரர் முஹம்மத் ஆஷிக்

எழுத வேண்டிய ஒன்று,   எழுதிதற்காக எமது நன்றி.................

சில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர் இந்தியர்கள் வந்துள்ளனர். கம்பெனி டாய்லட்டில் அவர்கள் புரியும் அழிச்சாட்டியத்தின் தாக்கம்தான் இந்த பதிவு..! இந்த பதிவை முதலில் எழுதலாமா... வேண்டாமா... என்றுதான் தோன்றியது. காரணம், இதில் உள்ள விஷயம் சிலருக்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். சிலருக்கு மிக அவசியமான அறிவுரையாக இருக்கலாம். அத்தவறை செய்யும் சிலருக்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இன்னும் சிலருக்கு இந்த விஷயம் தொடர்பாக நான் இங்கே பகிரும் படம் பார்க்க பயங்கரமாகவும் கொடூரமாகவும் இருக்கலாம். ஆனாலும், அவசியம் எழுதியாக வேண்டும் என்று இறுதியில் முடிவு எடுத்தேன். பதிவில் ஆங்காங்கே சிகப்பில் உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள் சகோ..!
 .
எனது சிறுவயதில் 'பாம்பே டாய்லட் சிங்க்' என்று தரையோடு பதிக்கப்பட்ட கழிவறை பீங்கான் பேசின் பிரபலமானது. ஆனால், அதில் வயதானவர்கள் குறிப்பாக முழங்கால் வலி உள்ளவர்கள் குத்தவச்சு உட்கார்ந்து எழுவது சிரமமாக இருக்கவே, தொடர்ந்து 'சிட்டிங் டாய்லட்' அல்லது மேற்கத்திய கழிப்பறை பீங்கான் பேசின் பிரபலம் ஆனது. ஏதோ வசதியாக வரவேற்பறை நாற்காலியில் அமர்வது போல அமர்ந்து கொள்ளலாம்..! முழங்கால் வலி பிரச்சினை இல்லை. நீண்ட நேரம் அமர்வதும் அதன் சிரமமும் இனி ஒரு பொருட்டல்ல என்றானது.
.
இப்படி ஒரு சொகுசு (!?) சிட்டிங் டாய்லட் வந்த பிறகுதான்... 'போனோமா-வந்தோமா' என்றில்லாமல்......, வாக்மேன், வாரப்பத்திரிக்கை, தினசரிகள், ஆஃபீஸ்ஃபைல், மியுசிக் கீபோர்ட், லேப்டாப் சகிதம் எல்லாம் டாய்லட்டுக்குள் நேரம் கடத்தவென்றே 'சுற்றுலா' செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது..! காரணம், எந்த தொந்தரவும் எவர் சப்தமும் இல்லாமல் தனியாக அமர்ந்து தன் சிந்தனைக்குதிரையை செவ்வனே செலுத்த முடிகிறதாம்..! கொடுமை..!
.
ஆனால், இந்த கூத்தெல்லாம் அரங்கேறும் இடம் வீட்டில் சுத்தமாக உள்ள அல்லது ஸ்டார் ஹோட்டல் ரூமில் உள்ள சுத்தமான சிட்டிங் டாய்லட்டில் மட்டும்தான். மற்றபடி அலுவலகம், கல்லூரி, இரயில், மற்றும் பொதுக்கழிப்பிடங்களில்  உள்ள சிட்டிங் டாய்லட் என்றால் அதில் உட்கார நமக்கு மனமே வராது எவருக்கும்..!
.
காரணம், அதை பெரும்பான்மையோர் முறையாக உபயோகிப்பது இல்லை. முக்கியமாக, பீங்கான் மீதுள்ள பிளாஸ்டிக் சிட்டிங் கவரை சுத்தமாக வைத்திருப்பது கிடையாது..! சிலர் சிறுநீர் கழிக்க மட்டும் டாய்லட்டை உபயோகிப்பவர்கள், சீட் கவரை மேலே தூக்கி  நீர் தொட்டியுடன் சாய்த்து நிறுத்தி வைத்து விட்டு, அதன்பின்னர் தன் இயற்கை தேவையை நிறைவேற்றும்  பொறுமை அல்லது பழக்கம் கிடையவே கிடையாது. நின்றுகொண்டே... அப்படியே போய்... அந்த சீட் கவரை நாஸ்தி பண்ணிவிடுவர்.

சரி.... இதை, 'அடக்கி வைத்த அவசரம்' என்று எடுத்துக்கொண்டால் கூட, "தன் தவறுதானே..? தான்தானே தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வரவேண்டும்..? அடுத்தவர் வந்து இதில் எப்படி அமர்வார்..?" என்ற லஜ்ஜையோ, பொதுநலமோ, வீட்டில் உள்ள பொறுப்புணர்வோ ஏதுமே வெளியே மட்டும் சுத்தமாக வராது. அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்..! இதுபோல செல்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும்..!
.
குர்ஆன் 2:222 ....(நபியே) "திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்" எனக்கூறுவீராக..!

இதனால் என்னாவாகும்..? அடுத்து, 'மலம் கழிக்க வேண்டும்' என்று வருபவர், இந்த பிளாஸ்டிக் சீட்டிங்கின் மேல் இருக்கும் மஞ்சள் சிறுநீரை பார்த்தவுடன் சுத்தமாக அவருக்கு அதில் உட்கார வேண்டும் என்ற எண்ணம் வருமா..? கழுவி விட்டு உட்கார வேண்டும். ஆனால், 'எவனோ செய்த அசிங்கத்தை  எதற்கு தான் கழுவ வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்கும்.
.
.
இங்கே ஒரு ஐடியா:- இதுபோல பொது கழிப்பிடம் போகும்போது, பிளாஸ்டிக் சீட்டிங் கவர்  (இருந்தால், அதன்) மீது தண்ணீர் ஊற்றிவிட்டு, கையோடு டிஷ்யூ பேப்பர் அல்லது ஏதாவது பழைய தினசரி பேப்பர்கொண்டு சென்று அதை நீளவாக்கில் இரண்டாக கிழித்து, தொடை படும் இடங்களில் பிளாஸ்டிக் சீட்டிங் மீது பேப்பரை ' \ / ' வைத்து அமரலாம்..! இதை பலர் செய்வதில்லை. ஆனால், வயிற்றை கலக்கும் அவசரம். என்ன செய்ய..?
.
இன்னும் சில பொது டாய்லட்டுகளில் அந்த பிளாஸ்டிக் சீட்டிங்கே இருக்காது..!?! (இருந்திருந்தாலும்....) இப்போதுதான் அந்த பயங்கர செயலை செய்வர். அதாவது செருப்பு அல்லது ஷூ காலுடன் ஏறி அந்த பிளாஸ்டிக் சீட் மேலோ அல்லது அதை தள்ளிவிட்டு பீங்கான் மீதோ அமர்ந்து, அந்த சிட்டிங் டாய்லட்டை அந்தக்கால 'பாம்பே டாய்லட் சின்க்' போல பாவித்து உபயோகப்படுத்திவிட்டு சென்று விடுவார்..! இதுதான் முற்றிலும் தவறு மற்றும் ஆபத்து..!
.
 .
"சுத்தம் ஈமானில் பாதியாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரலி)நூல் : சஹீ ஹ் முஸ்லிம் (328)

அந்த அவரை தொடர்ந்து அடுத்து உள்ளே செல்வோர், சீட்டிங்கின் மீது செருப்பு / ஷூ அச்சுடன் சேர்ந்த சகதி மண் என எல்லாம் இருப்பதை கண்டு, முகம் சுளித்து அவரும் அதேபோலவே...! இதுபோல இனி அந்த பிளாஸ்டிக் சீட்டிங் மீது அமர்வதை இனி வருவோர் அனைவருமே தவிர்த்து விடுவர்..!
.
இங்கேதான் ஆபத்து காத்து இருக்கிறது. பதிவின் நோக்கமே இதை சொல்வதுதான்..!
 .
இதுபோன்ற பீங்கான் தொட்டிகள் அடியில் குறுகலாகவும் மேற்புறம் அகன்றும் செய்யப்பட்டுள்ளது. காலை தரையில் வைத்து அமர்வதால் நம் உடல் எடை அதிக லோடை பீங்கானின் மீது தருவதில்லை. எடை கால்வரை பரவி  சென்றுவிடுகிறது. ஆனால், சீட்டிங் மேலே ஏறி அமரும்போது எடை பீங்கானின் மீது மட்டுமே கூடுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு கால்களும் இரண்டு பக்கம் நோக்கி வெளிப்பக்கமாக விசை கொடுத்து உந்தித்தள்ளுவதால், என்னதான் முதல் தரம் கூடிய பிராண்ட் ஆயினும் நாளடைவில் அந்த பீங்கான் பலம் குன்றி போயிருந்தாலோ அல்லது கரடுமுரடான சுத்தப்படுத்தும் கருவிகளால் எங்கேனும் இடிபட்டு சிறு விரிசல் விட்டு இருந்தாலோ, அதன் மீது உட்கார்ந்து இருப்பவர் எடை அல்லது அன்று அவரின் விதி... காரணமாக எந்நேரமும் அந்த பீங்கான் இருதுண்டாக... அல்லது பலதுண்டாக இப்படி உடையலாம்..!
.
 .
அப்படி உடையும்போது அதன் சில்லுகள் மீது எசகுபிசகாக கால்கள் பரப்பி விழும் நபருக்கு எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்மால் எண்ணிப்பார்க்கவே முடியாது. ஒரு காயம் கூட இன்றியும் தப்பலாம். அல்லது உயிரே போகும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போயும் விடக்கூடும். அப்படி ஒருவருக்கு நடந்த விபத்தை அடுத்து ஒரு ஃபோட்டோவில் பாருங்கள்..! சிட்டிங் டாய்லட் பீங்கான் மீது ஒருவர் ஏறி நின்றமர்ந்து, வெயிட் தாங்காமல் அது உடைந்து... உடைந்த கூர்மையான பீங்கான் பாகங்கள் உடலை குத்தி கிழித்து...  :-O காணசகிக்கலை..!
.

No comments:

Post a Comment